உள்ளடக்கத்துக்குச் செல்

டெபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெபாய் (debye, D) என்பது மின்னிருமுனையித் திருப்புத்திறனின் சகிசெ[1] (SI மெட்ரிக்கு அலகல்லாத) அலகு ஆகும். இயற்பியலாளர் பீட்டர் டெபாய் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. 1 டெபாய் என்பது 1×10−18 ஸ்டாட்கூலும்-செண்ட்டி மீட்டர் ஆகும்.[note 1]

வரலாற்று ரீதியாக, டெபாய் என்பது 10−10 ஸ்டாட்கூலும்[note 2] (பொதுவாக நிலைமின்னேற்ற அலகு, esu என அழைக்கப்படுகிறது) அலகு கொண்ட, 1 ஆங்ஸ்டிராம் தூரத்தில் உள்ள இரண்டு எதிரெதிரான மின்னேற்றங்களில் விளையும் இருமுனைத் திருப்புத்திறனுக்குச் சமனாகும்.[note 3] இது மூலக்கூற்று இருமுனைத் திருப்புத்திறன்களுக்கு ஏற்ற அலகைத் தருகிறது.

1 D  = 10−18 statC·cm
= 10−10 esu·Å[note 1]
= 1299,792,458×10−21 கூ·மீ[note 4]
≈ 3.33564×10−30 கூ·மீ
≈ 1.10048498×1023 qPlP
≈ 0.393430307 ea0[2]
≈ 0.20819434 eÅ

சாதாரண ஈரணுமூலக்கூறுகளுக்கு இருமுனைத் திருப்புத்திறன்கள் 0 முதல் 11 D ஆகும். சமச்சீரான ஏகஅணு மூலக்கூறுகள், எ.கா. குளோரின், Cl2, சுழிய இருமுனைத் திருப்புத்திறனையும், உயர் அயனிய மூலக்கூறுகள் மிகப் பெரும் திருப்புத்திறன்களையும் கொண்டுள்ளன. எ.கா. வளிம பொட்டாசியம் புரோமைடு, KBr, 10.5 D இருமுனைத் திருப்புதிறனைக் கொண்டுள்ளது.[3]

அனைத்துலக முறை அலகுகள் (SI) பொதுவாகப் பெரிதாக இருப்பதால், அணுவியல், மற்றும் வேதியியலில் தற்போதும் டெபாய் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றது. இருமுனைத் திருப்புத்திறனின் மிகக்குறைந்த SI அலகு 1 யாக்டோகூலும்-மீட்டர் (அண்ணளவாக 300,000 D) ஆகும்.[note 5]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 ஸ்டாட்கூலும் என்பது பிராங்கிளின் அல்லது நிலைமின்னேற்ற அலகு எனவும் அழைக்கப்படுகிறது.
    1 statC  =1 Fr
    =1 esu
  2. 10-10 ஸ்டாட்கூலோம் என்பது அண்ணளவாக 0.2083 அலகு அடிப்படை மின்னூட்டத்திற்குச் சமன்.
  3. ஆங்ஸ்டிராம் என்பது சாதாரண சகப் பிணைப்பு ஒன்றில் காணப்படும் தூரம் ஆகும்.
    1 Å  = 100 பீமீ
    = 10-8 செமீ
    = 10-10 மீ
  4. ஒரு டெபாய் என்பது 1×10−21 கூ·மீ2/செ ஐ வெற்றிடத்தில் ஒளி வேகத்தால் பிரிப்பதால் வரும் பெறுமானம் ஆகும். மாற்றாக 1 கூ·மீ = 2.9979×1029 D.
  5. யாக்டோ (Yocto-) என்பது 10−24 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. CGS units பரணிடப்பட்டது 2011-08-09 at the வந்தவழி இயந்திரம் R. Rowlett (University of North Carolina at Chapel Hill)
  2. Atomic unit of electric dipole moment NIST
  3. Physical chemistry 2d Edition (1966) G.M. Barrow McGraw Hill
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெபாய்&oldid=3486480" இலிருந்து மீள்விக்கப்பட்டது