மெட்ரிக் முறை
[[Image:FourMetricInstruments.JPG|thumb|280px]] "மெட்ரிக் முறை அனைத்து மக்களுக்கும் அனைத்து நேரங்களுக்கும் உரியது." (Condorcet 1791) மெட்ரிக் அளவுகளில் படத்தில் காட்டியவாறு நான்கு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அளவை நாடா செண்டிமீட்டரிலும், வெப்பமானி செல்சியசிலும் அளவிடப்படுகின்றன. கிலோகிராம் நிறை வீட்டுப்பயன்பாட்டிற்குப் பயன்படுகிறது. மின் பல்வகை அளவி வால்ட்டு, ஆம்ப்பியர், மற்றும் ஓம்களிலும் அளவிடப்படுகின்றன.]] மெற்றிக்கு முறை (Metric system) என்பது அனைத்துலக தசமப்படுத்தப்பட்ட அளவை முறை ஆகும். இந்த முறை, 1799 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்ட mètre des archives மற்றும் kilogramme des archives போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாளடைவில் மீட்டர் மற்றும் கிலோகிராம் போன்ற அலகுகளுக்குரிய வரையறை நுண்ணியமாக திருத்தப்பட்டதோடு, மெற்றிக்கு முறையின் கீழ் மேலும் பல அலகுகள் கொண்டுவரப்பட்டன. பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல்வேறு மாற்றுருவங்கள் மெற்றிக்கு முறையில் வெளிப்பட்டாலும், ‘அனைத்துலக முறை அலகுகள்’ என்பதன் ஒத்தசொல்லே ‘மெற்றிக்கு முறை’ என்பதாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும்.
மெற்றிக்கு முறையை பயன்படுத்தலாம் என்பது 1866 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பளிக்கப்பட்டது. ஆனாலும் இன்னமும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மெட்ரிக் முறையை ஒரு அதிகாரப்பூர்வமான அளவு முறையாக பயன்படுத்தவில்லை.[1] ஐக்கிய இராச்சியம் மெட்ரிக் முறையை அதிகாரப்பூர்வமான அளவு முறையாக பின்பற்றினாலும்கூட, அங்கு 'இம்பெரியல் முறை' (imperial system) எனும் அளவு முறையும் பரவலாக உபயோகத்தில் உள்ளது.
சிறப்புக்கூறுகள்
[தொகு]மெட்ரிக் முறை அது தோன்றிய தொட்டு பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படைக்கூறுகளை இன்னமும் தக்கவைத்துள்ளது.
பொதுமை
[தொகு]பிரெஞ்சு தத்துவியலாளர் Condorcet சொன்னது போல, “மெட்ரிக் முறை அனைத்து மக்களுக்கும் அனைத்து நேரங்களுக்கும் உரியது’’.[2] சாதாரண மனிதர்கள், பொறியாளர்கள், வானியல் வல்லுனர்கள், இயற்பியல் அறிஞர்கள் முதலானோர் பயன்படுத்தும் வகையில் பெருவாரியான முன்னொட்டுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.[3]
பிரெஞ்சு அரசாங்கம் தனது அளவீட்டு முறையை செப்பனிட முடிவு செய்தது. 1780 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தல்லிராண்ட் (Talleyrand) என்பவர் ரிக்ஸ் (Riggs, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்), ஜெபர்சன் (Jefferson, அமெரிக்க அரசுச் செயலர்) போன்றோருக்கு அழைப்பு விடுத்தார். உலகம் முழுமைக்கும் பொதுவானதொரு வரையறையை பிரெஞ்சு நாட்டுடன் இணைந்து உருவாக்குமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் இம்முயற்சி வெற்றிபெறவில்லை. 1875 ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு அரசாங்கத்தின் வசமே மெட்ரிக் முறை இருந்து வந்தது.[4]
உலகமயமாக்கும் ஒரு முயற்சியாக, ‘பொது அலகுக் குறியீடுகள்’ உருவாக்கப்பட்டன. உதாரணமாக, நீளத்தை அளப்பதற்கு km எனும் அலகு கீழ்க்காணும் மொழிகளில் வழங்கப்படுவதற்கென உருவாக்கப்பட்டது:.[5][6]
- பிரெஞ்சு, பிரித்தானிய ஆங்கிலம் – kilometre
- ஜெர்மன், டேனிஷ், அமெரிக்க ஆங்கிலம் – kilometer
- ஸ்பானிஷ் – kilómetro
- போர்ச்சுக்கிசி – quilómetro
- இத்தாலியன் – chilometro
- கிரீக் – χιλιόμετρα
- ரஷ்யன் - Километр
தசமப் பன்மடி
[தொகு]நேரம் மற்றும் தளக்கோணத்திற்குரிய 'SI அல்லாத அலகுகள்' மட்டுமே தசமத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. மெட்ரிக் முறையில் மற்ற எல்லா அலகுகளும், தசமத்தை அடிப்படையாகக் கொண்டவை. தசம அலகுகளின் பன்மடிகளும், வகுத்தல்களும் பத்தின் காரணிகளாகும் (factors of the power of ten). ப்ளெமிஷ் கணிதவியலாளர் சைமன் ஸ்டீவின் (Simon Stevin) என்பவர், இந்த யோசனையை 1586 ஆம் ஆண்டு தெரிவித்து அறிமுகப்படுத்தினார்.
பதின்ம முறை (base 10 arithmetic), அலகு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தசமப்புள்ளியை நகர்த்துவதன் மூலமோ, அடுக்குக்குறியை மாற்றுவதன் மூலமோ அலகுகளை வேறுபடுத்திக் காட்ட இயலும். உதாரணம்: ஒளியின் வேகம் = 299792.458 கிலோமீட்டர்/நொடி எனக் குறிப்பிடப்படலாம்; அல்லது 2.99792458 x 108 மீட்டர்/நொடி எனவும் குறிப்பிடப்படலாம்.
SI அலகு முறைக்குள் வராத அலகுகள்
[தொகு]டன் (1000 கிலோ கிராம்கள்), லிட்டர் (௦துல்லியமாக 0.001 மீ3) மற்றும் ஹெக்டர் (10000 மீ2) போன்ற SI அலகு முறைக்குள் வராத அலகுகள், SI அலகு முறைக்குள் வர சிஜிபிஎம் அனுமதி வழங்கியது.[7]
முன்னொட்டுகள்
[தொகு]அலகின் பெயர் | அலகின் தமிழ் உச்சரிப்பு | குறியெழுத்து | காரணி |
---|---|---|---|
tera | டெரா | T | 1000000000000 |
giga | ஜிகா | G | 1000000000 |
mega | மெகா | M | 1000000 |
kilo | கிலோ | k | 1000 |
hecto | ஹெக்டோ | k | 1000 |
(none) | - | - | 1 |
deci | டெசி | d | 0.1 |
centi | சென்டி | c | 0.01 |
milli | மில்லி | m | 0.001 |
micro | மைக்ரோ | μ | 0.000001 |
nano | நானோ | n | 0.000000001 |
மீண்டும் உற்பத்தி செய்யத்தக்க முதலுருக்கள்
[தொகு]அடிப்படை அலகுகளின் முதலுருக்களை உருவாக்கி அவற்றின் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு அனுப்புதலே தரப்படுத்துதலாக ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இவ்வகையான நடைமுறை, பல சிக்கல்களை தோற்றுவித்தது. ஒவ்வொரு நாடும், முதலுருக்களை ஒவ்வொருமுறையும் சரிபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இச்சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு அலகுக்கும் உரிய வரையறை, முறைப்படி உருவாக்கப்பட்டது; தேவைப்படும் அனைத்து உபகரணங்களையும் கொண்ட எந்த ஒரு ஆய்வகமும் தனக்குரிய தர ஆவணத்தை உருவாக்கிக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
புரிந்துகொள்ளத்தக்க வகையில் அளவீடு
[தொகு]கலைப் படைப்புகளைக் கொண்டு விளக்காமல் புரிந்துகொள்ளத்தக்க வகையில் அடிப்படை அலகுகள் அளக்கப்பட வேண்டும் என்பதும் மெட்ரிக் முறையின் நோக்கம் ஆகும். 1799 ஆம் ஆண்டு மீட்டர் மற்றும் கிலோகிராம்களுக்குரிய முதலுருக்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு 1889 ஆம் ஆண்டு புதிய முதலுருக்கள் இவ்வலகுக்களுக்காக உருவாக்கப்பட்டன. இப்புதிய முதலுருக்கள், அக்காலத்தைய சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன. நிலைத்தன்மையை உறுதி செய்ய, பெரும் முயற்சி எடுக்கப்பட்டது.
ஓரியல்பு
[தொகு]வரலாறு
[தொகு]ஆரம்பகால முறை
[தொகு]18 Germinal, Year III (7 ஏப்ரல் 1795 ) எனும் சட்டம், ஐந்து அளவீட்டு அலகுகளை கீழ்க்காணுமாறு வரையறுத்தது:
- நீளம் - மீட்டர் (metre)
- நிலப்பரப்பு - ஆர் (are - 100 m2 )
- அடுக்கிவைக்கப்பட்ட எரிவிறகுகளின் கன அளவு - ஸ்டெர் ( stère - 1 m3 )
- திரவங்களின் கன அளவு - லிட்டர் (litre - 1 dm3 )
- நிறை - கிலோகிராம்
ஆரம்பகால மெட்ரிக் முறை, சில முன்னொட்டுக்களை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. அவை: மில்லி (milli -ஆயிரத்தில் ஒரு பங்கு) முதல் மைரியா (myria - பத்தாயிரம்) வரை. ஆரம்பகால மெட்ரிக் முறை, 'பத்தின் மடங்குகள்' என்பதனை அடிப்படையைக் கொண்டிருந்தது.
கிலோகிராம் என்பது ஆரம்பத்தில் கிரேவ் (grave) என்றழைக்கப்பட்டது. கிரேவின் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கு கிராம் (gram) எனும் பெயர் வழங்கப்பட்டது.
1799 ஆம் ஆண்டு, டிசம்பர் 10 அன்று பிரான்ஸ் நாடு, மெட்ரிக் முறையை உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டது; ஆரம்பத்தில் பாரிஸ் நகரத்திலும் பின்னர் நாடு முழுவதும் பயன்படுத்தியது.
மாற்றுருவங்கள்
[தொகு]மெட்ரிக் முறையில் பல்வேறு மாற்றுருவங்கள், Mètre des Archives மற்றும் Kilogramme des Archives போன்றவற்றின் அடிப்படை அலகுகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. அந்த மாற்றுருவங்கள், வருவிக்கப்பட்ட அலகுகளின் வரையறையைப் பொறுத்து வித்தியாசப்படுத்தப்பட்டன.
அளவு | CGS முறை (குறியெழுத்து அடைப்பினுள் தரப்பட்டுள்ளது) | MKS முறை (குறியெழுத்து அடைப்பினுள் தரப்பட்டுள்ளது) | MTS முறை (குறியெழுத்து அடைப்பினுள் தரப்பட்டுள்ளது) |
---|---|---|---|
நீளம் (l) | சென்ட்டி மீட்டர் (cm) | மீட்டர் (m) | மீட்டர் |
திணிவு(m) | கிராம் (g) | கிலோகிராம் (kg) | டன் (t) |
காலம் (t) | நொடி அல்லது வினாடி (s) | நொடி அல்லது வினாடி | நொடி அல்லது வினாடி |
திசைவேகம்(v) | சென்ட்டி மீட்டர்/நொடி (cm/s) | மீட்டர்/நொடி (m/s) | மீட்டர்/நொடி (m/s) |
முடுக்கம் (a) | கள் (Gal) | மீட்டர்/நொடி2 (m/s²) | மீட்டர்/நொடி2 (m/s²) |
விசை (F) | டைன் (dyn) | நியூட்டன் (N) | தேனே (sn) |
அழுத்தம் (p) | பாரே (Ba) | பாஸ்கல் (Pa) | பீஸ் (pz) |
ஆற்றல் (W) | எர்க் (erg) | ஜூல் (J) | கிலோஜூல் (kJ) |
திறன் (P) | எர்க்/நொடி (erg/s) | வாட் (W) | கிலோவாட் (kW) |
பாகுத்தன்மை (µ) | போய்ஸ் (p) | Pa·s | pz·s |
SI மற்றும் பாரம்பரிய அலகுகளுக்கிடையேயான அலகு மாற்றம்
[தொகு]கீழ்காணும் அட்டவணை, SI மற்றும் பாரம்பரிய அலகுகளுக்கிடையேயான தொடர்பினைக் காட்டுகிறது. மாற்றல் காரணிகளும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[8]
அளவு | அளவீடு | SI அலகுகள் மற்றும் அதன் குறியீடுகள் | மரபுவழி அலகுகள் மற்றும் அதன் குறியீடுகள் | Conversion factor[9][10][11] |
---|---|---|---|---|
நேரம் | second (s) | second (s) | 1 | |
நீளம் | metre (m) | centimetre (cm) ångström (Å) |
0.01 10−10 | |
நிறை | kilogram (kg) | gram (g) | 0.001 | |
பரப்பளவு | square metre (m2) | are (are) | 100 | |
முடுக்கம் | (ms−2) | gal (gal) | 10−2 | |
மின்னோட்டம் | ampere (A) | ampere abampere or biot statampere |
1.000022 10.0 3.335641×10−10 | |
வெப்பநிலை | kelvin (K) degrees Celsius (°C) |
centigrade (°C) | K = °C + 273.15 1 | |
ஒளிர்செறிவு | candela (cd) | international candle | 0.982 | |
பொருள்களின் அளவு | mole (mol) | No legacy unit | n/a | |
அதிர்வெண் | hertz (Hz) | cycles per second | 1 | |
ஆற்றல் | joule (J) | erg (erg) | 10−7 | |
திறன் | watt (W) | (erg/s) horsepower (HP) Pferdestärke (PS) |
10−7 745.7 735.5 | |
விசை | newton (N) | dyne (dyn) sthene (sn) kilopond (kp) |
10−5 103 9.80665 | |
அழுத்தம் | pascal (Pa) | barye (Ba) pieze (pz) atmosphere (at) |
0.1 103 1.0197×10−5 | |
மின்னூட்டம் | coulomb (C) | abcoulomb statcoulomb or franklin |
10 3.335641×10−10 | |
மின்னழுத்த வேறுபாடு | volt (V) | international volt abvolt statvolt |
1.00034 10−8 2.997925×102 | |
மின்தேக்குத் திறன் | farad (F) | abfarad statfarad |
109 1.112650×10−12 | |
மின் தூண்டல் | henry (H) | abhenry stathenry |
10−9 8.987552×1011 | |
மின் தடை | ohm (Ω) | international ohm abohm statohm |
1.00049 10−9 8.987552×1011 | |
மின் கடத்துமை | siemens (S) | mho (℧) abmho statmho |
0.99951 109 1.112650×10−12 | |
காந்தப் பாய்மம் | weber (Wb) | maxwell (Mx) | 10−8 | |
காந்தப் பாய்ம அடர்வு | tesla (T) | gauss (G) | 1×10−4 | |
காந்தப் புல வலிமை | (A/m) | oersted (Oe) | 103/4π = 79.57747 | |
இயங்கு பாகுமை | (Pa·s) | poise (P) | 0.1 | |
இயக்கவியற்பாகுநிலை | (m2s−1) | stokes (St) | 10−4 | |
ஒளிர்பாயம் | lumen (lm) | stilb (sb) | 104 | |
ஒளிர்வு | lux (lx) | phot (ph) | 104 | |
கதிரியக்கம் | becquerel (Bq) | curie (Ci) | 3.70×1010 | |
கொள்ளப்பட்ட கதிர்ப்பு அளவு | gray (Gy) | roentgen (R) rad (rad) |
2.58×10-4 0.01 | |
கதிர்ப்பு அளவு இணைமாற்று | sievert | roentgen equivalent man (rem) | 0.01 | |
வினையூக்கச் செயல் | katal (kat) | No legacy unit | n/a |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The United States and the metric system" (PDF). NIST. Archived from the original (PDF) on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 2011-11-02.
The United States is now the only industrialized country in the world that does not use the metric system as its predominant system of measurement.
- ↑ Alder - Prologue, p 1
- ↑ SI Brochure - §3.1 SI prefixes - p 103
- ↑ Alder; page 92
- ↑ "Online Translation- Offering hundreds of dictionaries and translation in more than 800 language pairs". Babylon. Archived from the original on 2011-01-22. பார்க்கப்பட்ட நாள் 2011-01-24.
- ↑ International vocabulary of metrology — Basic and general concepts and associated terms (VIM) (PDF). Joint Committee for Guides in Metrology/International Bureau for Weights and Measures. 2008. p. 9. பார்க்கப்பட்ட நாள் 2011-03-05.
- ↑ International Bureau of Weights and Measures (2006), The International System of Units (SI) (PDF) (8th ed.), p. 124, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-822-2213-6
- ↑ SI brochure - §2 SI Units - p 94-102
- ↑ "Index to Units & Systems of Units". sizes.com. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
- ↑ "Factors for Units Listed Alphabetically". NIST Guide to the SI. 2 July 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-04-14.
- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (1993). Quantities, Units and Symbols in Physical Chemistry, 2nd edition, Oxford: Blackwell Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-03583-8. pp. 110-116. மின் பதிப்பு..