பேச்சு:மெட்ரிக் முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையின் தலைப்பினை மெட்ரிக் முறைமை என மாற்றலாமா? ஆங்கில விக்கிப்பீடியாவில் system எனக் குறிப்பிடுகிறார்கள். 'system' என்பதற்கு நுட்பமான தமிழாக்கம் 'முறைமை' எனத் தோன்றுகிறது. முறைக்கு ஆங்கில மொழியாக்கம் பார்க்கும்போது... தமிழ் விக்சனரியில் turn(one's turn), occasion, method, order, regularity, repetition, time (4 times) போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:25, 16 மார்ச் 2012 (UTC)

பொதுவாக முறைமை என்றால் system என்னும் பொருள் சுட்டும், ஆனால் முறை என்றாலும் system தான். முறை வகுத்து, முறை செய்து என்றெல்லாம் சொல்லுபொழுது system என்னும் பொருளிலேயே பயன்படுத்துகின்றோம். எனவே முறை என்றாலே போதும். மெட்ரிக் முறை என்பதை மெட்ரிக்கு முறை என்று சொல்வது நல்லது. மெட்ரிக்கு முறை என்பது ஒரு பதின்ம முறைதான். அதாவது 10, 100, 1000 என்று பத்தின் அடிப்படையில் (மேல்வாய், கீழ்வாய் எண்களால்) அமைந்த அளவீட்டு முறை. எனவே பதின்ம பண்பளவீட்டு முறை என்பதும் மற்றொரு பெயர். --செல்வா (பேச்சு) 16:16, 18 மார்ச் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மெட்ரிக்_முறை&oldid=1067088" இலிருந்து மீள்விக்கப்பட்டது