ஜோயந்தி சுட்டியா
பிறப்பு | 01 ஆகத்து 1948 ஜாம்குரி, சிவசாகர், அசாம், இந்தியா |
---|---|
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல் |
நிறுவனம் | அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேற்கல்வி நிறுவனம் |
Alma mater | காட்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்) டிப்ருகட் பல்கலைக்கழகம் (முதுகலை அறிவியல், முனைவர்) புனே பல்கலைக்கழகம் |
ஜோயந்தி சுட்டியா (Joyanti Chutia, அசாமிய மொழி: জয়ন্তী চুতীয়া) என்பவர் திண்மப்பொருள் இயற்பியலிலும் அயனிம இயற்பியலிலும் தனித்திறமை பெற்ற ஒரு இந்திய இயற்பியலறிஞர். அசாம் மாநிலத்தில் குவகாத்தியில், வடகிழக்கு இந்தியாவின் முதல் பெரிய ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேற்கல்வி நிறுவனத்தின் இயக்குனரானதன் மூலம் இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களில் தலைமை வகித்த முதன்மைப் பெண்களுள் ஒருவரானார்.[1][2]. இவர் இந்திய நாட்டு அறிவியல் கழகத்தின் உயரிய ஆய்வாளரும், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தகைமை அறிவியலாளரும் ஆவார்.[3][4][5][6]
தொடக்ககால வாழ்வும் கல்வியும்
[தொகு]சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஜாம்குரியில், குஞ்சலதா மற்றும் சோனாராம் சுட்டியா இணையருக்கு 1948-ம் ஆண்டு ஆகத்து ஒன்றாம் நாள் ஜோயந்தி பிறந்தார். தம் பள்ளிக்காலத்தில் கணிதத்தை முதன்மைப் பாடமாக எடுத்த பெண்களுள் இவரும் ஒருவர். பின்னர் அசாமிலுள்ள காட்டன் கல்லூரியில் இயற்பியல் பயின்று 1967-ம் ஆண்டு இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். டிப்ருகட் பல்கலைக்கழகத்தில் 1969-ம் ஆண்டு இயற்பியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெறும் முன் காட்டன் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். சிலகாலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின் டிப்ருகட் பல்கலைக்கழகத்திலேயே முனைவர் பட்ட ஆய்வாளராக 1976-ம் ஆண்டு சேர்ந்தார். அவருடைய ஆய்வு பலபகுதிய மெல்லிழைகளின் மின்கடத்தும் செயல்முறையைக் குறித்தது. அவர் 1981-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்,
தொழில்முறை வாழ்வு
[தொகு]தன் முனைவர் பட்டத்துக்குப் பிறகு மேலும் ஓராண்டு அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்-முதுமுனைவர் ஆய்வாளராக டிப்ருகட் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அகமதாபாதில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இணைந்த போது அயனிம இயற்பியல் துறையில் நுழைந்தார், பின்னர் காந்திநகரில் உள்ள அயனிம ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்தார்.[7] பின்னர் மீண்டும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேற்கல்வி நிறுவனத்தில் பல்கலைக்கழகப் பேராசிரியராக இணைந்து அயனிம இயற்பியல் ஆய்வகத்தை நிறுவினார்.
டோக்கியோவிலுள்ள விண்வெளி மற்றும் விண்வெளி அறிவியல் நிறுவனத்தின் அயனிம ஆய்வகத்தில் பணிபுரிய ஜப்பானிய அரசிடமிருந்து 1988-ம் ஆண்டு ஆய்வுதவியைப் பெற்றார். 2005-ம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மேற்கல்வி நிறுவனத்தின் இயக்குனரானார்.[7][8][9][10][11]
ஆய்வு
[தொகு]ஜோயந்தி சுட்டியாவின் உயிரிமருத்துவம், பொருளறிவியல், உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் ஆய்வுசெய்துள்ளார். இவருடைய ஆய்வு முகாப்பட்டிலிருந்து நீடித்துழைக்கவும் மக்கவும் கூடிய வகையில் காயங்களுக்குத் தையலிடும் பொருளை மேம்படுத்த வழிவகுத்தது.[12][13]
விருதுகள்
[தொகு]ஜெயந்தி சுட்டியா சிறந்த பெண் அறிவியலாளர் விருது, கமல்குமாரி தேசிய விருது,[14] சாதனா ஷௌர்ய விருது, பசந்த் பர்டோலோய் விருது, கன்ஷ்யாம் கோஸ்வாமி விருது முதலியவற்றைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian scientists unearth Assam's Muga silk's wound-healing powers". Zee News. 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "Indian scientists unearth wound-healing powers of Assam's Muga silk". கல்ப் நியூஸ். 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "Science weds art". Harmony India. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "Zone wise list of Fellows & Honorary Fellows (2015 )" (PDF). National Academy of Sciences. Archived from the original (PDF) on 29 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Women scientists continue to face discrimination'". The Sentinel. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "Indian scientists unearth Muga silks wound-healing powers". Free Press Journal. 21 October 2014. Archived from the original on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ 7.0 7.1 "My experience with research" (PDF). www.ias.ac.in. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "Prof. Joyanti Chutia". www.ewwomen.in. Archived from the original on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "INDIA-AUSTRALIA WORKSHOP ON BIOTECHNOLOGY ORGANISED". Report from the அசாம் டிரிபியூன் brought to you by HT Syndication ஹிந்துஸ்தான் டைம்ஸ் (via HighBeam (subscription required)). 22 October 2008 இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160220221442/https://www.highbeam.com/doc/1P3-1581293231.html. பார்த்த நாள்: 18 November 2015.
- ↑ "IASST CELEBRATES FOUNDATION DAY". Report from the அசாம் டிரிபியூன் brought to you by HT Syndication ஹிந்துஸ்தான் டைம்ஸ்(subscription required). 8 November 2006. Archived from the original on 20 February 2016. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "WORKSHOP ON PLANT DIVERSITY HELD". Report from the அசாம் டிரிபியூன் brought to you by HT Syndication ஹிந்துஸ்தான் டைம்ஸ்(subscription required). 23 November 2008. Archived from the original on 20 February 2016. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "Scientists unearth Assam's Muga silk's wound-healing powers". The Shillong Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
- ↑ "Can Indian Silk Promote Wound Healing?". Advanced Tissue (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-01-23. Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
- ↑ "KAMAL KUMARI NATIONAL AWARDS PRESENTED". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (subscription required). 2 April 2006. Archived from the original on 2 November 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.