செருமேனியம் இருபுளோரைடு
GeF2 கட்டமைப்பின் இரண்டு செஞ்சாய்சதுர அலகு கூடுகள். செருமேனியம் பழுப்பு நிற அணுக்களாகும். புளோரின் சியான் அணுக்களாகும்.
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
செருமேனியம் டைபுளோரைடு
டைபுளோரோசெருமேன் டைபுளோரிடோசெருமேனியம் | |
வேறு பெயர்கள்
செருமேனியம்(II) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13940-63-1 | |
ChemSpider | 4885763 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6327235 |
| |
பண்புகள் | |
GeF2 | |
வாய்ப்பாட்டு எடை | 110.61 கி/மோல் |
தோற்றம் | வெண் செஞ்சாய்சதுர நீருறிஞ்சும் படிகங்கள் |
அடர்த்தி | 3.61 கி/செ.மீ3 |
உருகுநிலை | 110 °C (230 °F; 383 K) |
கொதிநிலை | 130 °C (266 °F; 403 K) (பதங்கமாகும்) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நீருடன் வினை புரியும். HF உருவாகும். அரிக்கும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
செருமேனியம் இருபுளோரைடு (Germanium difluoride) என்பது GeF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் இது 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. செருமேனியம் டெட்ராபுளோ செருமேனியம் தூலைச் சேர்த்து 150 முதல் 300 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் செருமேனியம் இருபுளோரைடு உருவாகிறது.[1]
கட்டமைப்பு
[தொகு]P212121 (எண். 19) என்ற இடக்குழுவில் oP12 என்ற பியர்சன் குறியீடுயும் அணிக்கோவை அளவுருக்கள் a = 0.4682 நானோமீட்டர், b = 0.5178 நானோமீட்டர், c = 0.8312 நானோமீட்டர், Z = 4 (ஓர் அலகு கூட்டிற்கு நான்கு கட்டமைப்பு அலகுகள்) என்ற அணிக்கோவை அளவுருக்களில் செஞ்சாய்சதுர படிகங்களாக செருமேனியம் இருபுளோரைடு படிகமாகிறது. இதன் படிக அமைப்பு வலுவான பலபடிசார் GeF3 பட்டைக்கூம்பு சங்கிலிகளால் இயற்றப்பட்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது. பட்டைக்கூம்பில் உள்ள புளோரின் அணுக்களில் ஒன்று அருகாமையிலுள்ள இரண்டு சங்கிலிகளால் அவற்றுக்கிடையே வலிமை குறைந்த இணைப்புகளை வழங்குவதன் மூலமாக பகிரப்படுகிறது.[2] P41212 (எண். 92) என்ற இடக்குழுவும், tP12 என்ற பியர்சன் குறியீடும், a = 0.487 நானோமீட்டர், b = 0.6963 நானோமீட்டர், c = 0.858 நானோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களும் கொண்ட GeF2 சேர்மத்தின் மற்றொரு அரிதான படிக வடிவம் நாற்கோணக சீர்மை வடிவமாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greenwood, N. N.; Earnshaw, A. (1998). Chemistry of the Elements (second ed.). Butterworth Heinemann. pp. 376–377. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.
- ↑ Trotter, James; Akhtar, M.; Bartlett, Neil (1966). "The crystal structure of germanium difluoride". Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 30. doi:10.1039/J19660000030.
- ↑ G.P. Adams; L.M. Albritton; D.W. Bonnell; J.L. Margrave; J. Scott; P.W. Wilson (1971). "A new solid phase in germanium difluoride". Journal of the Less Common Metals 24 (1): 113–116. doi:10.1016/0022-5088(71)90174-3.