உள்ளடக்கத்துக்குச் செல்

சூபித்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூபிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவின் பரேய்லியில் உள்ள இமாம் அகமது ராசா கான் ஆலா ஹஸ்ரத் அவர்களது தர்கா

சூபித்துவம் (sufism, சூஃபிசம்) அல்லது தஸவ்வுப் (அரபு மொழி: : الصوفية‎‎),இஸ்லாமிய இறைநிலை என பரவலாக அறியப்படுகின்றது.[1], இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம்[2][3] அல்லது இஸ்லாத்தில் இறைநிலைத் தோற்றப்பாடு[4][5] என்பது மதிப்புகள்,சடங்கு முறைகள்,கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய இஸ்லாமிய இறைநிலை நடைமுறையாகும்.[6]. இது இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பமானது.[4] இது அடிப்படை வெளிப்பாடு மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய இறைநிலையின் மத்திய உருவகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.[7]

சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூபி' (/ˈsfi/; صُوفِيّ ; ṣūfī) என்று அறியப்படுகின்றனர். சூபி என்ற அரபுச் சொல், ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்("சூப்") அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.[4] வரலாற்று ரீதியில் அவர்கள் வேறுபட்ட தரீக்கா அல்லது வழிமுறைகளைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தரீக்காக்கள் என்பது இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும்.[8] இந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்று கூடுகின்றனர்.[9] அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்."[10] ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(றழி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலான ரூமி கூறுகின்றார்.[11]சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர்.[12] மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

பெரும்பாலும் அனைத்து சூபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து அவரது மருமகன் அலி(றழி) ஊடாக ஆரம்பமாகின்றன. எனினும், நக்ஷபந்தி வழிமுறை இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து முதலாவது ராஷிதீன் கலீஃபாவான அபூபக்கர்(றழி) ஊடாக ஆரம்பமாகின்றது.[13] இவ் வழிமுறைகள் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பை( சட்டத்துறை பிரிவுகள்) தொடருவதுடன், சுன்னி அகீதாவை (நம்பிக்கை கோட்பாடு) பின்பற்றுகின்றன.[14]

சூபித்துவம் (தஸவ்வுப்) மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது சுன்னி இஸ்லாத்தின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.[15][16] இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் சூபிகள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது.[17] சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றுள்ளது.[13] பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ்திய்யா, ரிபாயி, கல்வதி, மெவ்ளவி, நக்சபந்தி, நியுமதுல்லாயி, காதிரய்யா புத்சிசிய்ய, உவைஸி, ஷாதுலிய்யா, கலந்தரிய்யா, ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப்படுகின்றன.[18]

சூபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். இது வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது:" அல்லாஹ்வை வணக்கும் போது அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும். அப்படியில்லை எனில், அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்". சூபி அறிஞர்கள் சூபிசத்துக்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர். "இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர்".[19] தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்".[20]

பாரம்பரிய சூபிகளை அவர்கள் திக்ர் (இறைவனின் பெயர்களை பலமுறை உச்சரிக்கும் ஒரு பயிற்சி,பொதுவாக தொழுகையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது)[21], துறவறம் உடன் தொடர்புகொண்டிருந்ததை வைத்து அளவிட முடியும். சூபிசமானது பல முஸ்லிம்களிடையே ஆதரவைப் பெற்றது. முக்கியமாக ஆரம்பகால உமையாக்களின் உலகப்பற்றுக்கு எதிராக ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது (கி.பி.661-750). ஓராயிரம் வருடங்களுக்கு மேலாக சூபிகள் பல கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே பரவியிருக்கின்றது. ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கைகள் பாரசீகம், துருக்கி, இந்தியமொழி மற்றும் பல மொழிகளிடையே பரவ முன்னர் அரபுமொழியில் தெரிவிக்கப்பட்டது.

சொற்பிறப்பு

[தொகு]

சூபி என்ற சொல் இரண்டு தோற்றங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.பொதுவாக, மூலச்சொற்கோவையில் இருந்து ஸபா(صَفا)என்று கண்டறியப்பட்டுள்ளது.இதன் அரபு மொழிபெயர்ப்பு "தூய்மை" என்பதாகும்.அடுத்த தோற்றம்,சூப்(صُوف)"கம்பளி" என்பதாகும்.இது ஆரம்ப கால முஸ்லிம் துறவிகள் அணிந்திருந்த எளிய போர்வையை குறிக்கின்றது. இவ்விரண்டும் சூபி என்ற சொல்லால் இணைக்கப்பட்டுள்ளது. "சூபி என்பவர் கம்பளியை அணிந்த உயர்ந்த தூய்மையானவர்" என அல்-ருஹபாரி குறிப்பிடுகிறார்.[22][23]

அஹ்லுஸ்ஸுப்பா ("நீண்டஇருக்கையிலுள்ள மக்கள்") என்ற வார்த்தையிலிருந்து சூபிசம் என்ற சொல் தோற்றம் பெற்றதாக ஏனையோர் பரிந்துரைக்கின்றனர். அஹ்லுஸ்ஸுப்பா என்போர் முஹம்மது நபியின் வறுமையான தோழர்களாவதுடன், இவர்கள் அன்றாட ஸிக்ர் கூட்டங்களில் இருந்தவர்களாவர்.[24] அப்துல் கரீம் இப்ன் கவ்ஸின் குசைரி மற்றும் இப்னு கல்தூன் ஆகிய இருவரும் சூப் என்ற மொழிசார்ந்த வார்த்தையை தவிர ஏனைய சாத்தியங்களை நிராகரிக்கின்றனர்.[25]

சூபி என்ற வார்த்தை சோபியா (σοφία) என்ற அறிவு என்ற கருத்தையுடைய கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாக மத்திய காலத்திற்குரிய அறிஞர் அபுரய்ஹான் அல்-பிரூனி குறிப்பிடுகிறார்.[26][27][28]

போதனை

[தொகு]

சூபிசம் பாதைக்குள் பிரவேசிப்பதற்கு, தேடுபவர் ஓர் குருவை தேடுவதன் மூலம் இது ஆரம்பிக்கின்றது. குருவின் உடனான தொடர்பு ஏற்படுவதன், மாணவனின் தேவையான வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது. குரு உண்மையானவராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறார். இவர், இதே சூபி வழியிலுள்ள இன்னுமொரு குருவிடம் இருந்து கற்பிப்பதற்கு, முஹம்மது நபி வரையில் செல்லக்கூடிய முறியாத அங்கீகாரத்தை(இஜாஸா) பெற்றிருக்க வேண்டும்.

சூபிசத்தின் வரலாறு

[தொகு]
இஸ்லாமிய பாரம்பரியத்தில்,கலீபா அலி சூபிசத்தின் தந்தையாக கருதப்படுகிறார்.[29]

பிரபலமான சூபிகளில் ஒருவரான அலி-ஹுஜ்விரி போன்றவர்கள்,இந்தப் பாரம்பரியமானது முதலாவதாக இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலி அவர்களிடம் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடர்கின்றதுடன், அலி அவர்கள் சூபிசத்தின் தத்துவங்கள் மற்றும் நடைமுறைகளின் செய்காக காணப்படுகிறார் என குறிப்பிடுகிறார்.சூபிசம் பயிற்சியாளர்கள், அதன் ஆரம்ப நிலை சூபிச முன்னேற்றத்தை திறமையான முறையில் கொண்டிருக்கின்றனர், இதில் இஸ்லாமிய சிந்தினைக்கு மேலதிமாக ஒன்றுமில்லை என குறிப்பிடப்படுகின்றது. ஒரு கண்ணோட்டத்தின் படி, இதன் தோற்றமும், முன்னேற்றமும் குர்ஆனில் இருந்து நேரடியாக பெறப்பட்டதுடன், தொடர்ச்சியாக ஓதல், தியானம் மற்றும் அனுபவத்தைப் பெறுதல் போன்றவையே சூபிசத்தால் செயற்படுத்தப்பட்டது.[30]

சமகாலத்து சூபி அறிஞர்கள்

[தொகு]

அரேபியத் தீபகற்பம்

[தொகு]

அப்துல்லாஹ் பின் பய்யாஹ் (பி. 1935) – சவூதி அரேபியா

ஹபீப் அலி அல் ஜிப்ரி (பி. 1971) – யெமன்

ஹபீப் உமர் பின் ஹபீச் (பி. 1962) – யெமன்

முஹம்மத் அலவி அல் மாலிகி (1944–2004) – சவூதி அரேபியா

ஆபிரிக்கா

[தொகு]

அப்துல் ஹாமித் கிஷ்க் (1933–1996) – எகிப்து

அப்துல் காதிர் ஸூபி (பி. 1930) – தென் ஆபிரிக்கா

ஜிப்ரீல் புவாத் ஹத்தாத் (பி. 1960) – லெபனான்

முஹம்மத் அல் யாகூபி (பி.. 1963) – சிரியா

முஹம்மத் இப்னு அல்ஹபீப் (1876–1972) – மொரோக்கோ

முஹம்மத் ஸெய்யித் தன்தாவி (1928–2010) – எகிப்து

நூஹ் ஹா மீம் கெல்லர் (பி 1954) – ஜோர்தான்

வஹ்பா துஹைலி (பி. 1932) – சிரியா

யூசுப் அன் நபானி (1849–1932) – பலஸ்தீன்

மேற்கு ஐரோப்பா

[தொகு]

அப்துல்ஹகீம் முராத் (பி. 1960) – ஐக்கிய இராச்சியம்

பிரித்ஜொஃப் ஷொவ்ன் (1907–1998) – சுவிஸ்

முஹம்மத் இம்தாத் ஹுஸைன் பிர்ழதா (பி. 1946) – ஐக்கிய இராச்சியம்

கிழக்கு ஐரோப்பா'

ஜுஸைன் ஹில்மி இஷாக் (1911–2001) – துருக்கி

தெற்கு ஆசியா

[தொகு]

அப்துர் றவூப் மிஸ்பாஹீ (பி. 1944) – இலங்கை, காத்தான்குடி

கலாநிதி தைக்கா ஷுஐபு ஆலிம் ஸித்தீக்கீ (பி. 1930) – தமிழ்நாடு, இந்தியா

அப்துல் லதீப் சவ்தூரி புல்தாலி (1913–2008) – பங்களாதேஷ்

அஹமத் ரஸா கான் (பி. 1943) – இந்தியா

மெஹர் அலி ஷா (1859–1937) – இந்தியா

கமருஸ் ஸமான் அஸ்மி (பி. 1946) – இந்தியா

ஸெய்யித் முஹம்மத் ஜலாலுத்தீன் (1909–1968) - இந்தியா

ஸெய்யித் அப்துல் ஹை பின் அப்துர் ரஹ்மான் முஹம்மத் கோயாத்தங்கள் ஹல்லாஜுல் மன்ஸூர் (1927–2005) - இந்தியா

ஸெய்யித் அப்துல் மஜீத் பின் அப்துஸ் ஸமது ஆலிம் மக்கத்தார் (பி. 1941), அக்கரைப்பற்று- இலங்கை

தாஹிருல் காதிரி (பி. 1951) – பாகிஸ்தான்

கிழக்கு, மத்திய ஆசியா

[தொகு]

முஹம்மத் அப்துல் அலீம் ஸித்தீக்கி (1892–1954) – சிங்கப்பூர்

முஹம்மத் மா ஜியான் (1906–1978) – சீனா

ஸெய்யித் முஹம்மத் நகீப் அல் அத்தாஸ் (பி. 1931) – மலேசியா

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Martin Lings, What is Sufism? (Lahore: Suhail Academy, 2005; first imp. 1983, second imp. 1999), p.15
  2. Titus Burckhardt, Art of Islam: Language and Meaning (Bloomington: World Wisdom, 2009), p. 223
  3. Seyyed Hossein Nasr, The Essential Seyyed Hossein Nasr, ed. William C. Chittick (Bloomington: World Wisdom, 2007), p. 74
  4. 4.0 4.1 4.2 Massington, L. , Radtke, B., Chittick, W.C., Jong, F. de., Lewisohn, L., Zarcone, Th., Ernst, C, Aubin, Françoise and J.O. Hunwick, “Taṣawwuf”, in: Encyclopaedia of Islam, Second Edition, Edited by: P. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel, W.P. Heinrichs.
  5. Martin Lings, What is Sufism? (Lahore: Suhail Academy, 2005; first imp. 1983, second imp. 1999), p.12: "Mystics on the other hand-and Sufism is a kind of mysticism-are by definition concerned above all with 'the mysteries of the Kingdom of Heaven'"
  6. Knysh, Alexander D., “Ṣūfism and the Qurʾān”, in: Encyclopaedia of the Qurʾān, General Editor: Jane Dammen McAuliffe, Georgetown University, Washington DC.
  7. Seyyed Hossein Nasr, The Essential Seyyed Hossein Nasr, ed. William C. Chittick (Bloomington: World Wisdom, 2007), pp. 74-75
  8. Editors, The (2014-02-04). "tariqa | Islam". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015. {{cite web}}: |last= has generic name (help)
  9. Glassé 2008, ப. 499.
  10. Bin Jamil Zeno, Muhammad (1996). The Pillars of Islam & Iman. Darussalam. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-897-12-7.
  11. Gamard 2004, ப. 171.
  12. Fitzpatrick & Walker 2014, ப. 446.
  13. 13.0 13.1 Kabbani, Muhammad Hisham (2004). Classical Islam and the Naqshbandi Sufi Tradition. Islamic Supreme Council of America. p. 557. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-930409-23-0.
  14. Schimmel, Annemarie (2014-11-25). "Sufism | Islam". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-29.
  15. இஸ்லாமிய சமயப் பிரிவுகள்
  16. The Challenge of Islam: Encounters in Interfaith Dialogue, By Douglas Pratt, Ashgate Publishing, 2005, page 68
  17. The New Encyclopedia Of Islam By Cyril Glassé, p.499
  18. The Jamaat Tableegh and the Deobandis by Sajid Abdul Kayum, Chapter 1: Overview and Background.
  19. Ahmed Zarruq, Zaineb Istrabadi, Hamza Yusuf Hanson—"The Principles of Sufism". Amal Press. 2008.
  20. An English translation of Ahmad ibn Ajiba's biography has been published by Fons Vitae.
  21. A Prayer for Spiritual Elevation and Protection (2007) by Muhyiddin Ibn 'Arabi, Suha Taji-Farouki
  22. The Naqshbandi Sufi Tradition Guidebook of Daily Practices and Devotions, p.83, Muhammad Hisham Kabbani,Shaykh Muhammad Hisham Kabbani, 2004
  23. "Sufism in Islam". Mac.abc.se. Archived from the original on 2012-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  24. "Origin of sufism – Qadiri". Sufi Way. Archived from the original on 2021-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  25. Rashid Ahmad Jullundhry, Qur'anic Exegesis in Classical Literature, pg. 56. New Westminster: The Other Press, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789675062551
  26. Al-Bīrūnī: commemorative volume, Hakim Mohammad Said, Pakistan. Ministry of Education, Unesco, Hamdard National Foundation, Pakistan, 2010
  27. The memoirs of Sufis written in India: reference to Kashaful-mahjub, Siyar-ul-auliya, and Siyar-ul-arifin, Mahmud Husain Siddiqui, Dept. of Persian, Urdu, and Arabic, Faculty of Arts, Maharaja Sayajirao University of Baroda, 2009
  28. Introduction to Sufi Doctrine, p.3, Titus Burckhardt, Kazi Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56744-217-5, 1976
  29. http://www.alim.org/library/biography/khalifa/content/KAL/79/1
  30. Massignon, Louis. Essai sur les origines du lexique technique de la mystique musulmane. Paris: Vrin, 1954. p. 104.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூபித்துவம்&oldid=3917683" இலிருந்து மீள்விக்கப்பட்டது