தைக்கா ஷுஐபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்கைக் குரிய
தைக்கா ஷுஐபு
تايكا شعيب
Thaika Shuaib
பட்டம்கலாநிதி, அஃப்ழ‌லுல் உலமா, அல்ஹாஜ், ஆலிம், ஸித்தீக்கீ
பிறப்புசூலை 29, 1930 (1930-07-29) (அகவை 89)
இந்தியாகீழக்கரை, தமிழ்நாடு, இந்தியா
வேறு பெயர்கள்ஷெய்கு நாயகம்
தேசியம்இந்தியன்
இனம்அரபியர்-தமிழர்
காலம்20-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்தென்னிந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், தூர கிழக்கு
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், தொழிலதிபர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைமாத்துரீதீ அகீதா
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம், வரலாறு
ஆக்கங்கள்Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu, அல்முன்ஜியாத்
சூபித்துவம் order]]அரூஸிய்யா-காதிரிய்யா
குருதைக்கா அஹ்மது அப்துல் காதிர் ஸித்தீக்கீ, அப்துல் கரீம் கஸ்னஸானீ
விருதுகள்தேசிய விருது (National Award for Outstanding Arabic Scholar)
இணையதளம்www.thaikashuaib.com

தைக்கா ஷுஐபு (பி. ஜூலை 29, 1930) தென்னிந்தியாவை சார்ந்த இஸ்லாமிய மார்க்க‌ அறிஞரும், சூஃபி ஞானியும், எழுத்தாளரும் ஆவார். இவர் 1994-ஆம் வருடம் "சிறந்த அரபு மொழி அறிஞர்" என்ற‌ தேசிய விருதை பெற்றார். உலகளவில் "500 மிகவும் செல்வாக்குள்ள முஸ்லிம்கள்" எனும் பட்டியலில் [1] இவர் இருமுறை இடம் பெற்றிருக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

தைக்கா சுஐப் இந்தியாவின் கீழக்கரை நகரில் பிறந்தார். இவர் பலநூற்றாண்டுகளாக இஸ்லாமிய கல்விகளை போதித்துவரும் குடும்பத்தில் தோண்றியவர்.இவரின் தந்தை தைக்கா அஹ்மத் அப்துல் காதிர்(இறப்பு :1976) ஆன்மிக வழிகாட்டியாகவும், அறிஞராகவும் திகழ்ந்தார். இவரின் பாட்டனார்,சாஹூல் ஹமீத்(இறப்பு:1921) ஓர் அறிஞர்.இவரின் முப்பாட்டனார் சைய்யித்முஹம்மத்(இறப்பு: ஹி.1316), "இமாமுல் அரூஸ்" மற்றும் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அறியப்பெற்ற இஸ்லாமிய அறிஞர்.தைக்கா சுஐப் இஸ்லாத்தின் முதலாவது கலீபா அபூபக்கர்(றழி) அவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்.

தைக்கா சுஐப் தனது ஆரம்பக் கல்வியை தனது தந்தையிடம் கற்றார்.அவரது தந்தை தைக்கா சுஐபின் ஆன்மீக வழிகாட்டியாகவும் விளங்கினார்.அவரது தந்தை இஸ்லாமியக் கல்விகளை கற்பிப்பதற்கான இஜாஸாவை அல்லது இஸ்லாமிய சட்டவியல் கல்வியை கற்பிப்பதற்கு வழங்கும் அனுமதிச் சான்றிதழை சுஐப் அவர்களுக்கு வழங்கினார். பாரம்பரிய கல்விகளைக் கற்றதன் பின்னர்,தென்னிந்தியாவின் பாகிய்யாதுஸ் ஸாலிஹாத், ஜமாலிய்யா அரபுக்கல்லூரி மற்றும் வட இந்தியாவின் தாருல்உலூம் தேவ்பந்த்,ஜாமிய்யா மில்லியா இஸ்லாமியா ஆகிய இடங்களில் கல்வி கற்றார்.

தைக்கா சுஐப் அரபு மற்றும் பாரீசகத்தில் தனது இளமானிப்பட்டத்தை இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பிராந்தியதத்தில் அரபுத் தமிழ் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட அவர்கள், இத்துறையில் தனது முதுமாணிப் பட்டத்தையும், கலாநிதிப் பட்டத்தையும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.அவர்கள் தனது கலாநிதி ஆய்வுக்காக "இலங்கை மற்றும் தமிழ் நாட்டில் அரபு,அரபுத்தமிழ் மற்றும் பாரசீகம்" என்ற நூலை எழுதினார்.அவர்களிடம் இயற்கையிலேயே மொழியைக் கையாள்வதில் காணப்பட்ட திறனின் காரணமாக அரபு,ஆங்கிலம்,தமிழ்,மலையாளம்,உர்து,பராசீகம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைக்கா_ஷுஐபு&oldid=2259735" இருந்து மீள்விக்கப்பட்டது