சுலைமான் (யானை)
சுலைமான் (Suleiman) (1540-18 டிசம்பர் 1553) என்பது ஓர் ஆசிய யானையாகும். இது போர்த்துகல்லின் மன்னன் மூன்றாம் ஜான் மற்றும் அவரது மனைவி கேத்தரின் ஆகியோரால் ஆப்சுபர்கு மன்னன் இரண்டாம் ஆர்ச்டூக் மாக்சிமிலியனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
பின்னணி
[தொகு]1505 அல்லது 1506 ஆம் ஆண்டில் தீவில் தரையிறங்கிய போர்த்துகீசியர்களின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த கோட்டை இராச்சியத்தின் சிங்கள மன்னர் ஏழாம் புவனகபாகுவின் அரச லாயங்களில் சுலைமான் சிறைபிடிக்கப்பட்ட ஒரு யானைக்குப் பிறந்தது. 1542இல் போர்த்துகலுக்குஒரு சிறப்புப் பணிக்காக அனுப்பப்பட்ட கோட்டை இராச்சியத்தின் தூதர் சிறீ ராமரஸ்கா பண்டிதரின் பரிவாரத்துடன் சுலைமான் குட்டியானையாக லிஸ்பனுக்கு வந்தது. அங்கு மேற்கு கடற்கரை இராச்சியத்தின் மக்கள் கிபி 47இல் யானை மற்றும் புலியைக் கண்டவுடன் எப்படி மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதை மூத்த பிளினி விவரிக்கிறார்.
சுலைமான் இலங்கையிலுள்ள போர்த்துகீசிய காலனி இராச்சியமான கோட்டேவிலிருந்து இந்தியாவின் கோவாவிற்கும் பின்னர் இங்கிருந்து லிஸ்பனுக்கும் பின்னர் எசுப்பானியாவின் தலைநகரான வல்லாடோலிடுக்கும் கொண்டு செல்லப்பட்டது. மாக்சிமிலியன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுடன், சுலைமான் பார்செலோனாவிலிருந்து இத்தாலியின் செனோவா நகருக்கு அனுப்பப்பட்டது. அங்கு நவம்பர் 12,1551 அன்று வந்தது. பின்னர் மிலன், கிரெமோனா மற்றும் மான்துவா வழியாக நிலப்பரப்பில் பயணம் செய்தது. பின்னர் தன்யூபு ஆறு வழியாக வியன்னா கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் 1552 மார்ச் 6 அன்று வியன்னாவுக்குள் நுழைந்தது. "யானையைக் கண்ட உற்சாகத்தின்" அலை தொடர்ந்தது. மேலும் சுலைமான் கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பிரபலமான பொருளாக இருந்தது. வியன்னாவின் தென்கிழக்கில் 8 கி.மீ தொலைவிலுள்ள இசுக்லோசு கைசெரபர்சுடோர்ப் என்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டது. ஆனால் 18 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 1553 இல் இறந்து போனது.
இறப்பு
[தொகு]சுலைமான் இறந்த பிறகு சிற்பி மைக்கேல் புக்ஸ் வடிவமைத்த ஒரு நினைவுப் பதக்கத்தை மாக்சிமிலியன் வெளியிட்டார். சுலைமானின் பிணத்தின் சில பகுதிகள் புனித உரோமானியப் பேரரசைச் சுற்றி விநியோகிக்கப்பட்டன. அதன் முன் வலது கால் மற்றும் தோள்பட்டையின் ஒரு பகுதி வியன்னாவின் நகரத்தந்தை செபாஸ்டியன் ஹூட்ஸ்டாக்கருக்கு வழங்கப்பட்டது. எலும்புகள் ஒரு நாற்காலியாக வடிவமைக்கப்பட்டன. அவை தற்போது கிரெம்ஸ்மன்ஸ்டர் அபேவில் உள்ளது. 1572 ஆம் ஆண்டில் பவேரியாவின் டியூக் ஐந்தாம் ஆல்பர்ட்டுக்கு மாக்சிமிலியன் அரச பரிசாக வழங்கும் வரை யானையின் தோல் பாடம் செய்து கைசெரபர்சுடோர்ப் 'அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பாடம் செய்யப்பட்ட தோல் பல நூற்றாண்டுகளாக விட்டல்ஸ்பாக் அரச சேகரிப்புகளிலும், மியூனிக் அரண்மனையிலுள்ள குன்ஸ்ட்கம்மரிலும் இருந்தது.
மியூனிக்கிலுள்ள பவேரிய தேசிய அருங்காட்சியகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சுலைமானின் தோல், 1928 ஆம் ஆண்டில் பவேரிய தேசிய இசைக்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது. ஒரு பாதாள அறையில் வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அடைக்கப்பட்ட இதன் தோல் 1943 ஆம் ஆண்டில் மியூனிக்கில் இரண்டாம் உலகப் போரின் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் இருந்து தப்பி, போருக்குப் பிறகு காலணி தயாரிப்பிற்காக விற்கப்பட்டது. சேமிப்பில் ஈரப்பதம் இருந்ததால், யானையின் தோல் பூஞ்சை போல் மாறியது.
மேலும் வாசிக்க
[தொகு]- Suleiman the Elephant: A Picture Book, a children's book by Margret Rettich, translated by Elizabeth D. Crawford, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-05741-1 or பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-05742-X
- They Called him Suleyman: The Adventurous Journey of an Elephant from the Forests of Kerala to the Capital of Vienna in the middle of the sixteenth Century, Karl Saurer & Elena M.Hinshaw-Fischli, collected in Maritime Malabar and The Europeans, edited by K. S. Mathew, Hope India Publications: Gurgaon, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7871-029-3
- A Viagem do Elefante, novel by José Saramago, 1st Portuguese edition Caminho, 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-972-21-2017-3
- Salomão – O Elefante Diplomata Jorge Nascimento Rodrigues, Tessaleno Devezas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-989-615-073-0, 128 pages, 1st Portuguese edition Centro Atlântico, 2008 centroatlantico.pt
- The Queen's Elephants, Ivories from Ceylon. Luxury Goods of the Renaissance/Elfenbeine aus Ceylon: Luxusgüter der Renaissance, exhibition catalogue, Museum Rietberg, Zurich, 2010, edited by Annemarie Jordan Gschwend and Johannes Beltz, rietberg.ch
- The Story of Süleyman. Celebrity Elephants and other exotica in Renaissance Portugal, Annemarie Jordan Gschwend, Zurich, Switzerland, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61658-821-2.
குறிப்புகள்
[தொகு]- This article is based on the essays written by Annemarie Jordan Gschwend in the exhibition catalogue, Elfenbeine aus Ceylon. Luxusgüter für Katharina von Habsburg (1507–1578), Museum Rietberg, Zurich, Switzerland, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-907077-49-8
வெளி இணைப்புகள்
[தொகு]- Vienna celebrates its 250 year old Schönbrunn Zoo with a special exhibition
- The Wedding Gift Had Tusks, review of Rettich' book, The New York Times, 9 November 1986
- The elephant logo, Caslon Analytics
- The Ambassadors, from Ancient Egypt to the Nation State, Jonathan Wright, book review, July 2006
- An elephant's European conquest, தி இந்து, 21 January 2005
- Pachyderm Productions, Zurich & Philadelphia, Pa.: The Story of Süleyman. Celebrity Elephants and Other Exotica in Renaissance Portugal, Annemarie Jordan Gschwend