உள்ளடக்கத்துக்குச் செல்

சுஜித் முக்கர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜித் முக்கர்ஜி
துடுப்பாட்டத் தகவல்கள்
பங்குமட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1951–52 – 1959–60பீகார் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 5
ஓட்டங்கள் 79
மட்டையாட்ட சராசரி 11.28
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 33
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/–
மூலம்: Cricket Archive, 29 திசம்பர் 2014

சுஜித் முகர்ஜி (Sujit Mukherjee) (21 ஆகஸ்ட் 1930 – 14 ஜனவரி 2003) ஒரு இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், வெளியீட்டாளர், ஆசிரியர் மற்றும் கிரிக்கெட் வீரர் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

சுஜித் முகர்ஜி தெற்கு கல்கத்தாவில் உள்ள அரிட்ஷா என்ற  கிராமத்தில் பிறந்தார்.[1] புனித சேவியர்  உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியைப் பயின்றார். பாட்னா பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டத்தினை  முடித்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். பாட்னா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1970் ஆம் ஆண்டில் இவர் ஓரியண்ட் லாங்மேன் பதிப்பகத்தில் முதன்மை இதழாசிரியராக பணிபுரிந்தார்.[2]

மட்டைப்பந்தாட்டம்

[தொகு]

கிட்டப்பார்வைக்கு ஈடுகொடுக்க தடிமனான கண்ணாடிகளை அணிய வேண்டியிருந்தாலும், இவர் பல்கலைக்கழகம், மன்ற அளவிலான மற்றும் முதல்தர துடுப்பாட்டத்தில் மட்டையாளராக நீண்ட காலம் இருந்துள்ளார்.[3] 1951 மற்றும் 1960 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர் பீகார் துடுப்பாட்ட அணிக்காக ஐந்து முதல் தர துடுப்பாட்டங்களில் விளையாடியுள்ளார். 1951-1952 காலகட்டத்திலான தனது முதல் ஆட்டத்தில் தனது அதிகபட்ட ஓட்ட எண்ணிக்கையான 33 ஐ இவர் கொண்டுள்ளார்.[4]

1958-1959-இல் நடந்த இரஞ்சிக் கோப்பை துடுப்பாட்டத்தில் இவர் ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்கள் எடுத்திருந்தார். பீகார் ஒரிசா அணியை வீழ்த்த 45 ஓட்டங்கள் தேவையாயிருந்தது. ஒரு கட்டத்தில் 19 ஓட்டங்களுக்கு 2 ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருந்த நேரத்தில் களத்திற்கு வந்த முகர்ஜி சத்யேந்திர குக்ரேஜாவுடன் இணைந்து 27 ஓட்டங்கள் எடுத்து பீகார் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.[5]

இவர் குறிப்பிடத்தக்க அளவிலான ஒரு துடுப்பாட்டம் தொடர்பான எழுத்தாளராக மாறி "ஃபைவ் எலிகண்ட் கிரிக்கெட் புக்ஸ்" எழுதினார்.[6] இந்திய எழுத்தாளரால் வேறெப்போதும் எழுதப்படாத அளவிலான துடுப்பாட்டம் தொடர்பாக எழுதப்பட்ட மிகச்சிறந்த புத்தகங்கள் அவை ராமசந்திர குகா குறிப்பிடுகிறார்.[7] முகர்ஜி 1975 மற்றும் 1978 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வுத் துடுப்பாட்டங்களுக்கு வானொலியில் வர்ணனையாளராகவும் இருந்தார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவரது மனைவி மீனாட்சி முகர்ஜி, இவர் இவருடைய முன்னாள் மாணவி. இவர் ஒரு இலக்கிய அறிஞர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருந்னர். இறுதி நாட்களில் இவர்கள் தங்கள் நாட்களை ஹைதராபாத்தில் கழித்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sujit Mukherjee, Autobiography of an Unknown Cricketer, Ravi Dayal, Delhi, 1996, p. 161.
  2. Sujit Mukherjee: Career பரணிடப்பட்டது 2022-10-26 at the வந்தவழி இயந்திரம் Retrieved 30 December 2014.
  3. Mukherjee, Autobiography of an Unknown Cricketer, pp. 24–25.
  4. "Uttar Pradeh v Bihar 1951-52". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2022.
  5. "Bihar v Orissa 1958-59". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2022.
  6. Wisden 2004, p. 1549.
  7. ராமசந்திர குகா, "The Gentleman Scholar: Sujit Mukherjee", in The Last Liberal and Other Essays, Permanent Black, Delhi, 2004, pp. 229–36.
  8. Sujit Mukherjee: Other activities பரணிடப்பட்டது 2022-10-27 at the வந்தவழி இயந்திரம் Retrieved 30 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜித்_முக்கர்ஜி&oldid=3686971" இலிருந்து மீள்விக்கப்பட்டது