சில்ரன் ஆப் ஜப்லாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்ட்ரன் ஆஃப் எவர் ஆலி
நூலாசிரியர்நகிப் மஹ்ஃபூஸ்
உண்மையான தலைப்புأولاد حارتنا
மொழிபெயர்ப்பாளர்ஆங்கிலத்தில்; பிலிப் ஸ்டீவர்ட்டின் 1981, பீட்டர் தெரூக்ஸ் 1996
தமிழில்: பஷீர் அஜ்மது ஜமாலி
நாடுஎகிப்து
மொழிஅரபிக்
வகைபுதினம் (இலக்கியம்)
வெளியிடப்பட்டது1959 (மொழிபெயர்ப்பு 13 ஏப்ரல் 1981)
வெளியீட்டாளர்ஹெய்ன்மேன் (1981)
தமிழில்: ஜேஎன்யூவின் அரபு மற்றும் ஆப்பிரிக்க ஆய்வு மைய்யம்
பக்கங்கள்355
ISBN0-435-90225-3 (paperback edition)

சில்ரன் ஆப் ஜப்லாவி ( அரபு மொழி: أولاد حارتنا‎, romanized: ʾawlād ḥāratnā Children of Gebelawi) என்பது எகிப்திய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான நாகுயிப் மஹபூஸின் புதினம் ஆகும். இது அதன் மாற்று மொழிபெயர்ப்பான சில்ட்ரன் ஆஃப் எவர் ஆலி என்ற பெயராலும் அறியப்படுகிறது..

சர்ச்சை[தொகு]

இது முதலில் அரபு மொழியில் 1959 இல், அல்-அஹ்ரம் என்ற நாளிதழில் தொடராக வெளியிடப்பட்டது. அப்போது இது சமயவாதிகளால் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. அல்-அஹ்ரமின் ஆசிரியரான முகமது ஹெய்கலின் நண்பராக இருந்த ஜனாதிபதி கமல் அப்தெல் நாசரின் தலையீட்டால் அது முழுமையாக வெளியிடப்படவில்லை. [1] இதை பத்தகமாக வெளியிட அப்போதைய எகிப்தில் அரசு தடைசெய்தது. [2]

இது முதன்முதலில் லெபனானில் 1967 இல் அச்சிடப்பட்டது. பிலிப் ஸ்டீவர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1981 இல் வெளியிடப்பட்டது.

சுருக்கம்[தொகு]

இக்கதையானது கறைபனையான 19 ஆம் நூற்றாண்டின் கெய்ரோவின் குறுந்தெருக்களில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. மூன்று ஏகத்துவ ஆபிரகாமிய சமயங்களின் (யூத சமயம், கிறிஸ்தவம், இஸ்லாம்) ஆகியவற்றின் அடிப்படை நம்பிக்கைகளை உருவகமாக கொண்டு இது எழுதப்பட்டுள்ளது.

இக்கதையில் வரும் பாத்திரமான ஜப்லாவி என்பது கடவுளைக் குறிக்கிறது என்று விமர்சகர்கள் கூறினர். மஹபூஸ் இதை நிராகரித்தார், "கடவுளுக்கு யாரையும் உதாரனம் காட்ட முடியாது. கடவுள் வேறு யாரைப் போலவும் இல்லை. கடவுள் பிரம்மாண்டமானவர்" என்று கூறினார். இந்த புதினமானது ஐந்து பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. புதினத்தின் முதல் பகுதியின் கதை மாந்தராக ஜப்லாவி ( கடவுள்), அத்ஹம் (ஆதாம் أدهم), உமைமா (ஏவால்), இத்ரீஸ் ( சாத்தான் ) ஆகியோர் உள்ளனர். இதில் தந்தையான ஜப்லாவியும் மகன்களாக அக்ஜம், இத்ரீஸ் ஆகியோர் உள்ளனர். இவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் கதையின் பிற பகுதிகின் நாயகர்களாக உள்ளனர். கதையின் அடுத்தடுத்த பகுதிகளின் நாயகர்களாக மோசே (கபல் جبل), இயேசு (ரிஃபா رفاعة), முகம்மது (காசிம் قاسم) ஆகியோரின் வாழ்க்கையை உருவகப்படுத்தி கூறுவதாக உள்ளது. ஒவ்வொரு நாயகர்களை பின்பற்றுபவர்கள் யூத சமயம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றைக் குறிக்கும் குறுந்தெருவின் வெவ்வேறு பகுதிகளில் குடியேறுகிறார்கள். புதினத்தின்ன் ஐந்தாவது பிரிவின் கதாநாயகன் அரபா (عرفة) ஆவார். அரபா பாத்திரமானது நவீன அறிவியலைக் குறிக்கும் உருவகமாக உள்ளது. இவர் அனைத்து தீர்க்கதரிசிகளுக்கும் பின்னால் வருகிறார். அதே நேரத்தில் தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அராபாவை தங்களுள் ஒருவராகக் கூறுகின்றனர்.

தமிழ் மொழிபெயர்ப்பு[தொகு]

இந்த நூலை அரபு மொழியில் இருந்து நேரடியாக தமிழுக்கு பஷீர் அகமது ஜமாலியால் நம் சேரிப் பிள்ளைகள் என்ற பெயரில் மொழிபெயர்க்கபட்டுள்ளது.[3]

குறிப்புகள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்ரன்_ஆப்_ஜப்லாவி&oldid=3201783" இலிருந்து மீள்விக்கப்பட்டது