ஆதாமின் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 29: வரிசை 29:
* [http://www.sethusamudram.in/ சேது சமுத்திரத்திட்டம்]
* [http://www.sethusamudram.in/ சேது சமுத்திரத்திட்டம்]


[[பகுப்பு:புவியியல்]]
[[பகுப்பு:இராமாயணம்]]
[[en: Rama's Bridge]]
[[en: Rama's Bridge]]

00:17, 18 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

படிமம்:NASA satellite photo of Rama's Bridge.jpeg
ராமர் பாலத்தின் விண்வெளி புகைப்படம் (NASA) வலது பக்கம் இந்தியா, இடது பக்கம் இலங்கை
ராமர் பாலத்தின் வரைபடம்

ராமர் பாலம் (Adam's Bridge) என்பது தமிழ் நாட்டில் உள்ள இராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலம், மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக் ஜலசந்தியையும் (வடகிழக்கு) பிரிக்கின்றது. இந்த பாலத்தில், கடல் ஆளம் சுமார் 3 முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன.

2005 ஆம் ஆண்டு இந்திய அரசு இப்பாலத்தை சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தனுஷ்கோடி அருகே ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி சுமார் 400 கி.மீ. தொலைவு ம்ற்றும் சுமார் 30 மணி நேர கடல் பயணம் மிச்சப்படுத்தப்படும். ஆனால் இந்த பாலத்தின் தொன்மையைக் காப்பாற்றும் முயற்சியில் ராமகர்மபூமி இயக்கம் ஈடு பட்டுள்ளது.

புராணம்

புராணக்கதையான இராமாயணத்தில் ராமர் கடலைக்கடந்து சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக வானரங்கள் கட்டிய பாலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பாலம் இதுவாக இருக்கலாம் என்ற நம்பிக்கையாலேயே இப்பாலம் இப்பெயரைப் பெற்றது.

நாசாவின் விண்வெளி புகைப்படத்தில் காணப்படும் இந்த பாலத்தை சில இந்து அமைப்புகள் இதற்கு சான்றாக கருதுகின்றன. ஆனால் நாசா இதை சான்றாக அங்கீகரிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி

இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. [1]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாமின்_பாலம்&oldid=96082" இலிருந்து மீள்விக்கப்பட்டது