தமிழ்வாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16: வரிசை 16:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.tamilvanan.com tamilvanan.com]
*[http://thrillingdetective.com/eyes/shanker.html Shanker Lal, Created by Tamil Vanan] - {{ஆ}}
*[http://thrillingdetective.com/eyes/shanker.html Shanker Lal, Created by Tamil Vanan] - {{ஆ}}



09:21, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

தமிழ்வாணன் (மே 5, 1926 - நவம்பர் 10, 1977) தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்வாணன் இராமநாதன் செட்டியார், பிச்சையம்மை ஆச்சி தம்பதிக்கு மகனாக தமிழ்நாட்டின் தேவகோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் லெட்சுமணன். "தமிழ்வாணன்" என்ற பெயரைச் சூட்டியவர் தமிழ்த்தென்றல் திரு. வி.க. ஆவர்[1].

பத்திரிகைத் துறையில்

வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி செட்டியாரின் "கிராம ஊழியன்" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "உழைப்பே துணை" என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார்[1].

தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுவுடன் இணைந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!". அதனை அடுத்து சவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதினார்[1].

கல்கண்டு வார இதழ்

குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன், கலைமாமணி விக்கிரமன், தினமணி, நவம்பர் 21, 2010

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்வாணன்&oldid=634979" இலிருந்து மீள்விக்கப்பட்டது