மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| type = Hindu
| type =
| image = SRI MADURAI VEERAN TEMPLE, SALEM - panoramio.jpg
| image = SRI MADURAI VEERAN TEMPLE, SALEM - panoramio.jpg
| caption = மதுரை வீரன் சிலை, முனீசுவரர் கோவில், கோலாலம்பூர்
| caption = மதுரை வீரன் சிலை, முனீசுவரர் கோவில், கோலாலம்பூர்
வரிசை 10: வரிசை 10:
| consort = பொம்மி, வெள்ளையம்மாள்
| consort = பொம்மி, வெள்ளையம்மாள்
| mount = வெள்ளைக் குதிரை,நாய்
| mount = வெள்ளைக் குதிரை,நாய்
| texts =
| texts =கி.பி.1608 - 1641
| region = [[மதுரை]], தமிழ்நாடு, கேரளம், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா,இலங்கை
| region = [[மதுரை]], தமிழ்நாடு, கேரளம், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா,இலங்கை
|festivals=ஆவனி - 17|parents=திரு.சின்னான்- திருமதி.செல்லி|Duration=கி.பி.1608 - 1641}}
|festivals=ஆவனி - 17|parents=திரு.சின்னான்- திருமதி.செல்லி|Duration=கி.பி.1608 - 1641}}

23:50, 24 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

மதுரை வீரன்
மதுரை வீரன் சிலை, முனீசுவரர் கோவில், கோலாலம்பூர்
இடம்மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு கோபுர வாயில்
மந்திரம்நிறைந்த பக்தியுடன் அவர் பெயரை உச்சரித்தாலே போதும்.
ஆயுதம்வாள் / அரிவாள் மற்றும் வேல் கம்பு
துணைபொம்மி, வெள்ளையம்மாள்
பெற்றோர்கள்திரு.சின்னான்- திருமதி.செல்லி
நூல்கள்கி.பி.1608 - 1641
சமயம்மதுரை, தமிழ்நாடு, கேரளம், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா,இலங்கை
விழாக்கள்ஆவனி - 17

மதுரை வீரன் தமிழ்நாட்டவர் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இருபெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தே காட்சியாளிக்கிறார்.

வீரன் ஒரு உண்மையான கதாபாத்திரத்திரம் இவர் வீரத்திற்கும் காதலுக்கும் அடையாளமாக இருக்கிறார்.

உருவ அமைப்பு

மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அருவாலுடன் முறுக்கிய மீசையுடன் கம்பிரமாக காட்சியளிக்கின்றார்.

வழிபாடு

மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். ஆண்டு தோறும் ஆவனி - 17 ம் நாள் மதுரைவீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது.[சான்று தேவை] மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு.

அருந்ததியர் இனத்தை சேர்ந்த சின்னான்,செல்லி தம்பதிகளின் மகன் ஆவர். திருச்சி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் காவல் செய்ய வேண்டும்.காவல் பொறுப்பை தந்தையின் உடல்நல குறைவால் மதுரைவீரன் ஏற்றர். பொம்மி இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் காதல் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் அவருடைய மகன் பெரும்படையுடன் மதுரைவீரனை எதிர்க்கின்றனர் அவர் அருந்ததியர்கள் படையுடன் கடுமையாக போரிட்டு வெற்றிகொள்கின்றார்,மதுரையில் திருமலைநாயக்கர் மன்னரிடம் விஷயத்தை தெரிவிக்கின்றார். அன்றைக்கு கள்வர்களால் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ராஜ்ஜியங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின, அவர்களை அடக்கமுடியாமல் ராஜ்ஜியங்கள் மிரண்டுஇருந்தன. அந்த நேரத்தில் மதுரைவீரனின் வீரத்தைஅறிந்து திருமலை நாயக்கர் கள்வர்களின் அட்டூழியங்களை அடக்க மதுரைவீரனை பயன்படுத்திக்கொண்டார், மதுரைவீரனின் அருந்ததியர் படை மதுரை சுற்றுவட்டார பகுதியில் இருந்த கள்வர்கள் கொட்டத்தை ஓடுக்கி மதுரை மக்களை காத்தது.இந்நிலையில் திருச்சி புதுக்கோட்டை பகுதிகளில் கள்வர்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்,இவரின் வீரத்தை அறிந்த புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் கேட்டு கொண்டதற்கிணங்க திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அருந்ததியர்கள் படையுடன் சென்று போரிட்டு மக்களுக்கு பெரும்துன்பத்தை கொடுத்துக்கொண்டிருந்த கள்வர்கள் கூட்டத்தை ஒடுக்கி மக்களை பாதுகாத்தார், அதனாலேயே தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து இனத்தவரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் சூதுசெய்து மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் மதுரை வீரனை பிடித்து மாறுகால், மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றனர்,நடந்த அநியாயத்தை பார்த்து மீனாட்சியம்மன் நேரடியாக தரிசனம் வழங்கி மதுரையை அழிக்க முற்பட்டாள். மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு மனமிறங்கி அவரை ஆட்கொண்டு கிழக்கு கோபுரவாசலில் கம்பத்தடி வீரனாக வைத்துக்கொண்டார். முதல் பூஜை அவருக்கு நடந்தபின்புதான் மீனாட்சிக்கே பூஜை நடக்கும். மதுரைவீரன் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டதை அறிந்த அருந்ததியர் படை மதுரையை துவம்சம் செய்தது. அவர்களிடமும் மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அருந்ததியர்கள் போரை கைவிட்டனர் என்பது வரலாறு. கள்வர்களிடம் இருந்து மக்களை பாதுகாத்ததினால் தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து இனத்தவரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மேலும் மதுரை வீரனை மாறுகால் மாறுகை முறையில் கொன்றவர்களுக்கு மன்னன் பரிசாக ரத்த பட்டயம் மூலம் நிலங்களை வழங்கியதாகவும் அந்நிலங்களை இன்று வரை அவர்களது வாரிசுகள் வழிவழியாக அனுபவித்து வருவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

நூல்களில்

  • வாய்மைநாதன் எழுதிய மதுரை வீரன் நூல்[1]

திரைப்படங்களில்

  1. எம். ஜி. ஆர். நடித்த மதுரை வீரன்
  2. மதுரை வீரன் (1939 திரைப்படம்)

மேற்கோள்கள்

  1. "Madurai Veeran - மதுரை வீரன் » Buy tamil book Madurai Veeran online". www.noolulagam.com.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மதுரை வீரன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_வீரன்&oldid=3203588" இலிருந்து மீள்விக்கப்பட்டது