டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''டி. டி. வி. தினகரன்''' (T. T. V. Dhinakaran) என்பவர் தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரும் [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ஆர்.கே.நகர்]] தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் இவர் தலைமையில் ஒரு புதிய [[அணி|டிடிவி தினகரன் அணி]] உருவானது. இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.<ref>[http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/80353/ttv-dinakaran-background டி.டி.வி. தினகரனின் பின்னணி]</ref><ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-ttv-dinakaran/slider-pf222085-274231.html எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?]</ref> இவரது இளைய தம்பி [[வி. என். சுதாகரன்]], முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]]வின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.
'''டி. டி. வி. தினகரன்''' (T. T. V. Dhinakaran) என்பவர் தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரும் [[டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)|ஆர்.கே.நகர்]] தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் இவர் தலைமையில் ஒரு புதிய [[டிடிவி தினகரன் அணி|அணி]] உருவானது. இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூத்த மகன் ஆவார்.<ref>[http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/80353/ttv-dinakaran-background டி.டி.வி. தினகரனின் பின்னணி]</ref><ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-ttv-dinakaran/slider-pf222085-274231.html எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?]</ref> இவரது இளைய தம்பி [[வி. என். சுதாகரன்]], முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]]வின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.


==அரசியல் வாழ்க்கை==
==அரசியல் வாழ்க்கை==

13:02, 1 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

டி.டி.வி. தினகரன்
பிறப்புதிசம்பர் 13, 1963 ( 1963 -12-13) (அகவை 60)
திருத்துறைப்பூண்டி
இருப்பிடம்5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை
பட்டம்துணைப் பொதுச் செயலாளர், அதிமுக (அம்மா)
அரசியல் கட்சிஅதிமுக அம்மா
வாழ்க்கைத்
துணை
டி. அனுராதா
பிள்ளைகள்1
உறவினர்கள்வி. என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி. கே. சசிகலா, எம். நடராஜன், ஜெ. இளவரசி, டாக்டர். எஸ். வெங்கடேஷ்

டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran) என்பவர் தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரும் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் இவர் தலைமையில் ஒரு புதிய அணி உருவானது. இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூத்த மகன் ஆவார்.[1][2] இவரது இளைய தம்பி வி. என். சுதாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.

அரசியல் வாழ்க்கை

டி. டி. வி. தினகரன் 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999 – 2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004-2010 காலக்கட்டத்தில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும் அதிமுகவின் பொருளாளராகவும் சில காலம் பதவி வகித்து வந்தார்.[3]

ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர். [4]. பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, தாம் சிறை செல்ல நேர்ந்ததால் பிப்ரவரி 2017-இல் டி. டி. வி. தினகரனை, துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[5][6]

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[7] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[8]

23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை மதுசூதனனை அவைத்தலைவராக கொண்ட எடப்பாடி-பன்னீர்செல்வம் அணிக்கு கிடைத்தது. ஆனால் அந்தத் தீர்ப்பில் பாரபட்சம் உள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

21.12.2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரனுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதில் 89,063 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டிடிவி தினகரன் தாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று நிரூபித்து விட்டதாகக் கருதப்பட்டது.

வழக்குகள்

1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[9]

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[10] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவருக்கு டெல்லி தீஸ் ஹசாரி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

மேற்கோள்கள்

  1. டி.டி.வி. தினகரனின் பின்னணி
  2. எம்ஜிஆரின் அதிமுகவை வழிநடத்தப்போகும் டிடிவி தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?
  3. http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu
  4. Jayalalithaa expels TTV Dinakaran
  5. VK Sasikala Placed Nephew In Charge Of Party. It Can't Get Enough Of Him
  6. Life and times of TTV Dinakaran — Sasikala's new pawn in TN's political battle
  7. RK Nagar bypoll: Dinakaran is AIADMK candidate
  8. பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை
  9. How TTV Dinakaran got relief from Jayalalithaa wealth case
  10. "AIADMK's TTV Dinakaran Arrested At Midnight After 4 Days Of Questioning". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 25, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._டி._வி._தினகரன்&oldid=2465255" இலிருந்து மீள்விக்கப்பட்டது