கரூர் கல்யாணபசுபதீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
| பெயர் = கருவூர் பசுபதீஸ்வரர் கோவில்
| பெயர் = கருவூர் ஆநிலையப்பர் கோவில்
| படிமம் = Kalyana Pasupatheewarar Temple.JPG
| படிமம் =
| படிமத்_தலைப்பு = பசுபதீஸ்வரர் கோவில்
| படிமத்_தலைப்பு = ஆநிலையப்பர் கோவில்
| படிம_அளவு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| தலைப்பு =
வரிசை 25: வரிசை 25:
| நாடு = [[இந்தியா]]
| நாடு = [[இந்தியா]]
| மூலவர் =பசுபதீஸ்வரர்
(ஆநிலையப்பர்,பசுபதிநாதர்)
| மூலவர் =ஆநிலையப்பர்
(சுபதிநாதர்)
| உற்சவர் =
| உற்சவர் =
| தாயார் = கிருபாநாயகி,
சௌந்தரியநாயகி (அலங்காரவல்லி)
: இரு சந்நிதிகள்
| தாயார் = கிருபாநாயகி,
அலங்காரவல்லி(சொந்தரநாயகி)
: இரு சந்நிதிகள்
| உற்சவர்_தாயார் =
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = வஞ்சி
| விருட்சம் = வஞ்சி
வரிசை 52: வரிசை 52:
'''கல்யாணபசுபதீசுவரர் கோயில்''' என்பது தமிழ்நாட்டில் [[கரூர் (கரூர் மாவட்டம்)|கரூர்]] நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் [[தேவாரம்]] பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.
'''ஆநிலையப்பர் கோயில்''' என்பது தமிழ்நாட்டில் [[கரூர் (கரூர் மாவட்டம்)|கரூர்]] நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் [[தேவாரம்]] பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.
இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
14:01, 11 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற
கருவூர் ஆநிலையப்பர் கோவில்
பெயர்
பெயர்:கருவூர் ஆநிலையப்பர் கோவில்
அமைவிடம்
ஊர்:கரூர்
மாவட்டம்:கரூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆநிலையப்பர்
(சுபதிநாதர்)
தாயார்:கிருபாநாயகி,
அலங்காரவல்லி(சொந்தரநாயகி)
: இரு சந்நிதிகள்
தல விருட்சம்:வஞ்சி
தீர்த்தம்:தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி நதி)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர்
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்
ஆநிலையப்பர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கரூர் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் தேவாரம் பாடல் பெற்ற கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலம் காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு தனி ஆலயம் உள்ளது.
இத்தலத்தின் புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபக்த நாயனார் தொண்டு செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது.
சன்னதிகள்
கரூர் பசுபதீசுவரர் ஆலயம்
மூலவர் பசுபதீசுவரர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி , சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.
மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில் புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் கருவூரார் சன்னதியும், ராகு கேது பாம்பு சிலைகளும் உள்ள சன்னதியும் உள்ளது.
புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன.
அமைவிடம்
கரூர் மாவட்டத்தின் தலைமையிடமாக அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரூரில், நகரின் மையப் பேருந்து நிலையத்துக்கு மிக அருகாமையில் இக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு
இக்கோவிலின் கொடிமரம் கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில் தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும் மறுபுறம் சிவலிங்கமும் சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன.
இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.
தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும்.
இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கோவிலின் தென்மேற்கு மூலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால் கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.
தல வரலாறு
படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கேத் திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.
காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பாடல் பெற்ற தலம்
எறிபத்த நாயனார் தோன்றியதும் புகழ்ச்சோழ நாயனார் ஆண்டதும் இத்தலமாகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் பிறந்தது இவ்வூரில்தான். இது திருஞான சம்பந்தரால் தேவாரத்திலும் அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடப் பெற்றுள்ளது.
திருவிழாக்கள்
இங்கு பங்குனி உத்திரம், ஆருத்தரா தரிசனம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆதாரங்கள்
கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோவில் தினமணி, நவம்பர் 02, 2012
கருவிநூல்
தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006
வெளி இணைப்புகள்
பசுபதீஸ்வரர் கோவில், கரூர்