அருண் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: தகவற்பெட்டி இணைப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
| name = அருண் நேரு
| image =
| imagesize =
| birth_name =
| birth_date = {{Birth date|df=yes|1944|4|24}}
| birth_place = [[இலக்னோ]], [[பிரித்தானிய இந்தியா]]
| residence =
| death_date = {{Death date and age|df=yes|2013|7|25|1944|4|24}}
| death_place = [[குர்கான்]], [[இந்தியா]]
| occupation = அரசியல்வாதி, பத்தியாளர்
| nationality = இந்தியர்
| salary =
| networth =
| yearsactive=
| othername =
| spouse = சுபத்ரா நேரு<ref name=TOIdeath>{{cite news | url=http://timesofindia.indiatimes.com/india/Arun-Nehru-former-Union-minister-dies/articleshow/21346560.cms | title=Arun Nehru, former Union minister, dies | work=The Times of India| date=25 July 2013 | accessdate=26 July 2013}}</ref>
| children = 2
| relatives =
| website =
}}

'''அருண் நேரு''' (24 ஏப்பிரல் 1944--25 சூலை 2013) இந்திய அரசியல் வாதி ஆவார். நடுவணரசு அமைச்சராக இருந்தவர். <ref>http://www.in.com/arun-nehru/biography-27411.html</ref>1984 ஆம் ஆண்டில் இராசீவ் காந்தி இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அருண் நேரு கருதப்பட்டார். நேரு குடும்பத்தாருக்கு இவர் உறவினர் ஆவார்.
'''அருண் நேரு''' (24 ஏப்பிரல் 1944--25 சூலை 2013) இந்திய அரசியல் வாதி ஆவார். நடுவணரசு அமைச்சராக இருந்தவர். <ref>http://www.in.com/arun-nehru/biography-27411.html</ref>1984 ஆம் ஆண்டில் இராசீவ் காந்தி இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அருண் நேரு கருதப்பட்டார். நேரு குடும்பத்தாருக்கு இவர் உறவினர் ஆவார்.



14:48, 25 மே 2016 இல் நிலவும் திருத்தம்

அருண் நேரு
பிறப்பு(1944-04-24)24 ஏப்ரல் 1944
இலக்னோ, பிரித்தானிய இந்தியா
இறப்பு25 சூலை 2013(2013-07-25) (அகவை 69)
குர்கான், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி, பத்தியாளர்
வாழ்க்கைத்
துணை
சுபத்ரா நேரு[1]
பிள்ளைகள்2

அருண் நேரு (24 ஏப்பிரல் 1944--25 சூலை 2013) இந்திய அரசியல் வாதி ஆவார். நடுவணரசு அமைச்சராக இருந்தவர். [2]1984 ஆம் ஆண்டில் இராசீவ் காந்தி இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அருண் நேரு கருதப்பட்டார். நேரு குடும்பத்தாருக்கு இவர் உறவினர் ஆவார்.

வரலாறு

அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஜென்சன் அண்டு நிக்கல்சன் என்னும் குழுமத்தின் தலைவராக 17 ஆண்டுகள் இருந்தார். [3] 1984 இல் இந்திரா காந்தி விருப்பத்திற்கிணங்க காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார். ஏழாவது மக்களவையிலும் எட்டாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.

1984 -86 இல் காங்கிரசு நடுவணரசிலும் 1989-90 இல் சனதாதள அரசிலும் அமைச்சராகவும் இருந்தார். 1987 இல் இராசீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரசிலிருந்து பிரிந்து வி. பி. சிங் தலைமையில் இருந்த முன்னணியான ஜன மோர்ச்சாவில் அருண் நேரு சேர்ந்தார். 1989 இல் சனதா தளம் அரசு அமையப் பெரும் பங்காற்றினார். 1990 வரை நடுவணரசு அமைச்சராக இருந்தார்.

1999 இல் பி.ஜே.பி. சார்பாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். செக்கோசிலோவாக்கியா குழுமத்திலிருந்து துப்பாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அருண் நேரு மீது குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.[4]

பிற்காலத்தில் ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். வரலாறு, இலக்கியம், வேளாண்மை போன்ற துறைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார்.

சான்றாவணம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_நேரு&oldid=2067520" இலிருந்து மீள்விக்கப்பட்டது