சீமான் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13: வரிசை 13:
|homepage = [http://www.naamtamilar.org/ naamtamilar.org]
|homepage = [http://www.naamtamilar.org/ naamtamilar.org]
|வாழ்க்கை துணை = கயல்விழி சீமான்}}
|வாழ்க்கை துணை = கயல்விழி சீமான்}}
'''சீமான்''' தமிழக அரசியல்வாதியும், தமிழ் தேசியதலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் [[திரைப்பட இயக்குனர்|திரைப்பட இயக்குநரும்]], நடிகரும் ஆவார். தமிழர் தந்தை சி்.பா.ஆதித்தனார் அவர்கள் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வழியில் நடத்துபவர். தமிழ் தேசியத்தை இன்றைய இளைஞர்களிடம் தீவிரமாக புகுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்{{cn}}. தமிழையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவது உலகமக்களின் கடமை என உணர்த்தியவர்,தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்னும் கொள்கையினை இன்றைய இளைஞர்களிடம் விதைத்தவர்.{{cn}} பிற மொழி கலப்பின்றி தூய தமிழிலேயே எப்பொழுதும் பேசுபவர். மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர். இவருடைய பேச்சுக்களே நாம் தமிழர் கட்சியின் மூலமாகவும் பலமாகவும் விளங்குகிறது.{{cn}}
'''சைமன்/சீமான்''' தமிழக அரசியல்வாதியும், தமிழ் தேசியதலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் [[திரைப்பட இயக்குனர்|திரைப்பட இயக்குநரும்]], நடிகரும் ஆவார். தமிழர் தந்தை சி்.பா.ஆதித்தனார் அவர்கள் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வழியில் நடத்துபவர். தமிழ் தேசியத்தை இன்றைய இளைஞர்களிடம் தீவிரமாக புகுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்{{cn}}. தமிழையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவது உலகமக்களின் கடமை என உணர்த்தியவர்,தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்னும் கொள்கையினை இன்றைய இளைஞர்களிடம் விதைத்தவர்.{{cn}} பிற மொழி கலப்பின்றி தூய தமிழிலேயே எப்பொழுதும் பேசுபவர். மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர். இவருடைய பேச்சுக்களே நாம் தமிழர் கட்சியின் மூலமாகவும் பலமாகவும் விளங்குகிறது.{{cn}}


==வாழ்க்கை==
==வாழ்க்கை==

19:07, 12 மே 2016 இல் நிலவும் திருத்தம்

சைமன்
பிறப்புநவம்பர் 10, 1970 (அகவை 46)
அரனையூர், சிவகங்கை, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்சீமான்
பணிஅரசியல்வாதி, திரைப்பட இயக்குனர், நடிகர்
அறியப்படுவதுநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
வலைத்தளம்
naamtamilar.org

சைமன்/சீமான் தமிழக அரசியல்வாதியும், தமிழ் தேசியதலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். தமிழர் தந்தை சி்.பா.ஆதித்தனார் அவர்கள் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வழியில் நடத்துபவர். தமிழ் தேசியத்தை இன்றைய இளைஞர்களிடம் தீவிரமாக புகுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்[சான்று தேவை]. தமிழையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவது உலகமக்களின் கடமை என உணர்த்தியவர்,தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்னும் கொள்கையினை இன்றைய இளைஞர்களிடம் விதைத்தவர்.[சான்று தேவை] பிற மொழி கலப்பின்றி தூய தமிழிலேயே எப்பொழுதும் பேசுபவர். மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர். இவருடைய பேச்சுக்களே நாம் தமிழர் கட்சியின் மூலமாகவும் பலமாகவும் விளங்குகிறது.[சான்று தேவை]

வாழ்க்கை

சீமான் அவர்கள் 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார்.இவர் பெற்றோர் செந்தமிழன்,அன்னம்மாள் ஆவர். இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் திரு.பழ நெடுமாறன் அவர்களின் தலைமையில் YMCA திடலில் நடைபெற்றது.

திரைத்துறை வாழ்க்கை

கல்லூரி முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை சென்றார்.அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.சில படங்களில் வசனகர்த்தாவாகயும் திகழ்ந்துள்ளார்.இவரின் முதல் படமான பிரபு மதுபாலா கொண்டு இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது.மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய இனியவளே மற்றும் சத்தியராஜை கொண்டு இயக்கிய வீரநடை தோல்வியை ஏற்றது. நீண்ட கால இடைவேளைக்கு பின் மாதவன் பூஜா வடிவேலு போன்றோர்களை கொண்டு இயக்கிய தம்பி படம் பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது.அதே ஆண்டில் மாதவனை வைத்து இயக்கிய வாழ்த்துக்கள் திரைப்படம் பெரும் இழப்பை சந்தித்தது.இப்படம் முழுவதும் கலப்படம்மற்ற தூயத்தமிழ் வசன நடைக்கொண்டு உருவாகியுள்ளார்.மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் தன் நடிப்பு திறனையும் வெளிக்காட்டியுள்ளார்.மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.

ஈழ ஆதரவு

சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனுக்குத் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார். ஈழ ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்தியமைக்காக ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்டார்[சான்று தேவை].

நாம் தமிழர் கட்சி

சில காலம் திராவிடக் கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளை பரப்பிக்கொண்டுவந்தார்.பின் தன் தலைமையில்[சான்று தேவை] நாம் தமிழர் இயக்கத்தை துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார்.சீமான் அவர்கள் மே10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார்.இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன் முருகன் பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரள,கர்நாடக அரசுகளை கண்டித்தும், இந்தி திணிப்பு மற்றும் சமஸ்கிருத வாரத்தை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களை தமிழகத்தில் நிகழ்த்தியுள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்தும் ஆஇஅதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்.2016ஆம் ஆண்டு நடைபெறயுள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியை காணும் என்று சீமான் அவர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இயக்கிய திரைப்படங்கள்

  • பாஞ்சாலங்குறிச்சி (1997)
  • இனியவளே (1998)
  • வீரநடை (1999)
  • தம்பி (2006)
  • வாழ்த்துகள் (2008)

நடித்த திரைப்படங்கள்

  • பொறி (2007)
  • எவனோ ஒருவன் (2007)
  • பள்ளிக்கூடம் (2007)
  • மாயாண்டி குடும்பத்தார் (2009)
  • மகிழ்ச்சி (2010)
  • நாக ராச சோழன்(2013)

நூல்கள்

  • வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010)
  • திருப்பி அடிப்பேன்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமான்_(அரசியல்வாதி)&oldid=2063148" இலிருந்து மீள்விக்கப்பட்டது