தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: new:भाइरस
சி r2.5.4) (Robot: Modifying ckb:ڤايرووس to ckb:ڤایرووس
வரிசை 114: வரிசை 114:
[[bs:Virus (biologija)]]
[[bs:Virus (biologija)]]
[[ca:Virus]]
[[ca:Virus]]
[[ckb:ڤايرووس]]
[[ckb:ڤایرووس]]
[[cs:Virus]]
[[cs:Virus]]
[[cy:Firws]]
[[cy:Firws]]

09:19, 8 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

தீ நுண்மம்
ஹெச். ஐ. வி தீநுண்மம்]]
தீநுண்ம வகைப்பாடு
குழு:
I–VII
Groups

I: dsDNA viruses
II: ssDNA viruses
III: dsRNA viruses
IV: (+)ssRNA viruses
V: (-)ssRNA viruses
VI: ssRNA-RT viruses
VII: dsDNA-RT viruses

தீ நுண்மம் அல்லது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம், அல்லது வைரசு (virus) என்பது உயிரினங்களில் நோயை உண்டாக்கும் சிறு துகள்களைக் குறிக்கும். தீ நுண்மங்கள் கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி வகையைச் சேர்ந்தவை. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான கல நுண்ணுறுப்பு கட்டமைப்பும் இல்லாததால், அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி அந்த உயிரணுக்களைத் தம் கட்டுக்குள் கொண்டு வந்து தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். வைரசு என்ற சொல் மெய்க்கருவுயிரியைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். நிலைக்கருவிலிகளைத் தாக்கும் துகள்களை நுண்ணுயிர் தின்னி என்று அழைக்கிறோம்.


அமைப்பு:

வைரசு என்ற இலத்தீன் சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்ல முடியாது, ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (inert) இருக்கும், ஆனால் தக்கவோர் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது. பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு மரபணு பொருளையும் (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ) அதனைச் சுற்றி உறை புரதத்தால் (coat protein) ஒரு கூடும் (capsid protein) உள்ளதாக இருக்கும். சில தீநுண்மங்களில் முள் (Spikes) போன்ற அமைப்பும் உள்ளன. இவை கிளைக்கோ புரதங்களாக ஆக்கப்பட்டு இருக்கும்.

பரவுதல்

தீநுண்மங்கள் பூச்சிகளாலும் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட நோய்க்காவி என அழைக்கப்படும்), காற்றின், நீர், குருதிப் பரிமாற்றம் மூலம் பரவும். ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் பாதுகாப்பற்ற உடல் உறவு, தூய்மை இல்லாத ஊசிகள் மூலமும் பரவுகிறது. வெறி நாய்க்கடி நோய் (ராபீசு) நாய், பூனைகள் சில நேரங்களில் எலிகள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது. அண்மையில் வவ்வால்கள் மூலமும் ராபீசு பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



வகைப்பாட்டியல்

வைரசுகளை அவை தாக்கும் உயிரினம், மரபு இழை, மரபு இழைகளின் செயலாக்கம் (based on the transcription) பொறுத்து பல வகைகளாக பிரிக்கலாம்.

தாக்கும் உயிர்களை பொறுத்து,

மரபு இழைகளை பொறுத்து,

இதற்குள் டி.என்.ஏ வை பொறுத்து, இவை மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.



டி.என்.ஏ வைரசுகள்

ஓரிழை டி.என்.ஏ வைரசுகள்: (ssDNA virus) எ.கா:

ஈரிழை டி.என்.எ வைரசுகள் (dsDNA virus): எ.கா: மையோ வைரசு.


ஆர்.என்.எ வைரசுகள்

இவைகள் ஒரிழையகவோ அல்லது ஈரிழையாக இருக்கிறது.

ஓரிழை ஆர்.என்.எ வைரசுகள்

எ.கா: ரெட்ரோ வைரசு, போலியோ வைரசு, போட்டி வைரசு (poty virus)

ஈரிழை வைரசுகள்

ரியோ வைரசு, ரோட வைரசு, என ஆர்.என்.எ வைரசுகள் பகுக்கப்படுகிறது.




மரபு இழைகளின் செயல்படும் செயல்களை பொருந்து வைரசுகள் நேர்மறை (+), எதிர்மறை (-) இழை வைரசுகளாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக இவைகள் ஓரிழை ஆர்.என்.எ வைரசுகளுக்கு பொருந்தும்.

சில வைரசுகள் (Ex. poty virus) தாவரங்களிலோ அல்லது விலங்குகளில் உட்சென்றவுடன் , வைரசின் ஓரிழை ஆர்.என்.எ நேரடியகாக மரபணுக்களை (direct expression) வெளிப்படுத்தும். இவகையான வைரசுகளுக்கு நேர்மறை (+) இழை வைரசு என அழைக்கப்படும்.

எதிர்மறையான (-) இழை வைரசுகள் (பாரமிக்சோ வைரசு இவைகள் அம்மை நோயெய் உண்டாக்குகின்றன) , தாவரகளிலோ அல்லது விலங்குகளில் உள்சென்றவுடன் நேரிடைய்காக தனது மரபணுவை வெளிபடுத்த முடியாது. இவைகளின் எதிர்மறை (Complementary strand) ஆர்.என்.எ நேர்மறை (virion strand) இழையாக மாற்றப்பட்டு, புரதமாக மாற்றப்படுகிறது.


அருஞ்சொற்பொருள்

  • கட்டுப்பட்ட கலத்துள் உயிருறிஞ்சி - Obligate intracellular parasite
  • கோலுரு நுண்ணுயிர் திண்ணி - Bacteriophage

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீநுண்மி&oldid=1316939" இலிருந்து மீள்விக்கப்பட்டது