உள்ளடக்கத்துக்குச் செல்

சி. என். பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. என். பாலகிருஷ்ணன்
சி.என்.பி
கூட்டுறவுத் துறை, காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை- அமைச்சர், கேரள அரசு
பதவியில்
18 மே 2011 – 20 மே 2016
ஆளுநர்ப. சதாசிவம்
முன்னையவர்ஜி. சுதாகரன்
பின்னவர்ஏ. சி. மொய்தீன்
தொகுதிவடக்காஞ்சேரி, திருச்சூர்
பெரும்பான்மை6685
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-11-18)18 நவம்பர் 1934
திருச்சூர், கேரளா
இறப்பு10 திசம்பர் 2018(2018-12-10) (அகவை 84)
கொச்சி, கேரளம்
குடியுரிமைஇந்திய
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தங்கமணி
உறவுகள்திருமணம்
பிள்ளைகள்சி. பி. கீதா, மினி பல்ராம்
தொழில்அரசியல்வாதி, சமூகப்பணி

சி. என். பாலகிருஷ்ணன் (C. N. Balakrishnan) (18 நவம்பர் 1934 – 10 திசம்பர் 2018) [1] ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும் ஆவார். இவர் கூட்டுறவுத் துறை, காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை, மாசு கட்டுப்பாடு துறை ஆகியவற்றின் அமைச்சராக உம்மன் சாண்டி அமைச்சகத்தின் கீழ் கேரள அரசின் அமைச்சராக இருந்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கேரளாவின் வடக்காஞ்சேரி தொகுதியின் பிரதிநிதியானார்.

சி. என். பாலகிருஷ்ணன்

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

நாராயணன் எழுத்தச்சன்-திருமதி. பாரு அம்மா தம்பதியினரின் மகனாக 1934 நவம்பர் 18 அன்று திருச்சூர் அருகே உள்ள புழக்கலில் பிறந்தார். இராமகிருஷ்ண ஆசிரமப் பள்ளியில் தனது கல்வியை முடித்த இவர் காதித் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அரக்கால் குடும்பத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற ஆசிரியரை மணந்தார் இவர்களுக்கு சி. பி. கீதா (அரசியல்வாதி), மினி பல்ராம் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.

கே. கருணாகரனுடன் இவர் எப்போதும் நெருக்கமாக இருந்தார். கருணாகரனுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். பாலகிருஷ்ணன் கூட்டுறவு சங்கங்களில் வலுவான தலைவராக இருந்தார். மீனவர் சமுதாயத்தை ஒன்றிணைத்து அவ்ர்களை கூட்டுறவு சங்கங்களுக்குள் கொண்டு வந்தார். திருச்சூர் பால் விநியோகத் தொழிற்சங்கம், புறநாட்டுகரை சேவை கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுக்கு தலைமை தாங்கினார். இவர், கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராகவும், பின்னர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் ஆனார்.

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
C. N. Balakrishnan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._என்._பாலகிருஷ்ணன்&oldid=3398214" இலிருந்து மீள்விக்கப்பட்டது