உள்ளடக்கத்துக்குச் செல்

சாசூ மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் ராமேசஸ் சசூ மக்களை போர்க்கைதிகளாக பிடித்துச் செல்லும் காட்சி, மெடிநெத் அபு கோயில் கல்வெட்டு

சாசூ மக்கள் (Shasu), எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் |(கிமு 1069 - கிமு 664) போது, பண்டைய அண்மை கிழக்கின், தெற்கு லெவெண்ட் பிரதேசத்தில் செமித்திய மொழி பேசும் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு, கூடாரங்களிள் தங்கி வாழும் நாடோடிக் குழுவினர் ஆவார். சாசூ மக்கள் அதிகமாக சினாய் தீபகற்பம்[1], கானான் தேசம் மற்றும் தற்கால இஸ்ரேல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிகம் வாழ்ந்தனர்.இமக்களில் சிலர் பண்டைய எகிப்திய இராச்சியத்தினருக்கும் மற்றும் மெசொப்பொத்தேமியா இராச்சியத்தினருக்கும் கூலிப்படையினராக செயல்பட்டனர்..[2] சில அறிஞர்கள் சாசூ மக்களை இசுரயேலர் மற்றும் யாவே கடவுளுடன் தொடர்புறுத்தி பேசுகின்றனர்.

வரலாறு

[தொகு]

கிமு 15ம் நூற்றாண்டுகளில் சாசூ மக்கள் குறித்த குறிப்புகள் ஜோர்டான் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் பண்டைய எகிப்தியர்களின் எதிரிகளின் பட்டியலில் சாசூ மக்கள் உள்ளனர் என்பதை மூன்றாம் அமென்கோதேப் (கிமு 1391–1353) தற்கால வடக்கு சூடான் நாட்டின் சொலெப் கோயில் தூண்களில் பொறிக்கப்பட்டதன் மூலம் அறியப்படுகிறது.[3][4] . எகிப்திய மன்னர்களான இரண்டாம் ராமேசஸ் மற்றும் மெர்நெப்தா ஆட்சிக் காலங்களில் சாசூ மக்கள் எகிப்து, கானான் தேசங்களிலிருந்து தறால ஜோர்டான் பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். எகிப்து இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர் சாசூ மக்கள் மீண்டும் சாசூ மக்கள் கானான் தேசத்தின் குடியேறினர்.[2] கடல் மக்களின் வருகையால் இறுதியில் சாசூ மக்கள் மறைந்து போயிருக்கலாம் எனக்கருதப்படுகிறது..[2]

சாசூ மக்களின் யாவே (Yhw) கடவுள்

[தொகு]
காதேஷ் போரில் எகிப்திய வீரர்கள், சாசூ போர்க் கைதிகளை அடிக்கும் காட்சி, கிமு 1274

மூன்றாம் அமென்கோதேப் (கிமு 14ம் நூற்றாண்டு) மற்றும் இரண்டாம் ராமேசஸ் (கிமு 13ம் நூற்றாண்டு) காலத்திய இரண்டு எகிப்திய நூல்களில் சாசூ மக்கள் வழிபட்ட யாவே கடவுள் குறித்த குறிப்புகள் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Miller 2005, ப. 95.
  2. 2.0 2.1 2.2 Younker 1999, ப. 203.
  3. Sivertsen 2009, ப. 118.
  4. Hasel 1998, ப. 219.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசூ_மக்கள்&oldid=3854363" இலிருந்து மீள்விக்கப்பட்டது