சண்முகம் காமேசுவரன்
சண்முகம் காமேசுவரன் (1923-26 ஜூன் 2021) சென்னை, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]காமேசுவரன் 1923இல் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள இலயோலாக் கல்லூரி மற்றும் சென்னை மதராசு மருத்துவக் கல்லூரியில் தனது கல்லூரிக் கல்வியைப் பெற்றார். இங்கிலாந்தில் மருத்துவப் பயிற்சி பெற்ற இவர், எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவிலிருந்து தனது எஃப்.ஆர்.சி.எஸ். பட்டத்தினைப் பெற்றார்.
தொழில்
[தொகு]காமேஸ்வரன் மதராசு மருத்துவக் கல்லூரியில் செவிநாசிமிடற்றியல் (otorhinolaryngology) நிறுவனத்தின் இயக்குநராகச் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காது மூக்கு தொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டிய இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணியில் அடிப்படை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஆலோகசராக குறுகிய காலம் பணியாற்றியுள்ளார்.
விருதுகள்
[தொகு]இந்திய அரசு காமேசுவரனுக்கு நாட்டின் குடிமக்களுக்கு வழங்கும் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதினை 1990ஆம் ஆண்டு வழங்கியது.[1] இவர் 1981ஆம் ஆண்டில் மருத்துவர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான பி.சி. ராய் விருதையும் பெற்றார்.[2]
குடும்பம்
[தொகு]தமிழ் அறிஞர் சோமசுந்தர பாரதியின் மகள் மற்றும் பி. சி. ராய் விருது பெற்றவரான (1983) மருத்துவர் லலிதாவை, காமேசுவரன் மணந்தார். லலிதா காமேசுவரன் 1988ஆம் ஆண்டில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார். இந்த தம்பதியரின் மகன், சென்னை மெட்ராஸ் ஈ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் தலைமை அறுவைசிகிச்சை நிபுணருமான மோகன் காமேஸ்வரன் ஆவார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக இருக்கும் சித்ரா சங்கரன் இவர்களது மகள் ஆவார்.
இறப்பு
[தொகு]98 வயதான காமேசுவரன் 26 ஜூலை 2021 அன்று காலை வயது முதிர்வின் காரணமாகக் சென்னையில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-06-27. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ https://www.thehindu.com/news/cities/chennai/keeping-it-in-the-family/article8661854.ece
- ↑ https://www.thehindu.com/news/cities/chennai/renowned-ent-surgeon-kameswaran-passes-away/article34983962.ece