உள்ளடக்கத்துக்குச் செல்

கை டி அல்விஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கை டி அல்விஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 11 31
ஓட்டங்கள் 152 401
மட்டையாட்ட சராசரி 8.00 21.10
100கள்/50கள் -/- -/2
அதியுயர் ஓட்டம் 28 59*
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
21/2 27/3
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

ரொனால்ட் கை டி அல்விஸ் (Ronald Guy de Alwis, பிப்ரவரி 15, 1959 - சனவரி 12, 2013[1]), இலங்கை அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர். வலது கை துடுப்பாட்டக்காரர், இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1983 - 1988 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

கை டி அல்விஸ் இங்கிலாந்தில் இடம்பெற்ற 1983 உலகக் கோப்பை போட்டிகளில் குச்சக்காப்பாளராகப் பங்கு பற்றினார். 1987 ஆம் ஆண்டில் ஹோபார்ட் நகரில் இலங்கை விளையாடிய முதலாவது தேர்வுப் போட்டியில் பங்கு பற்றினார். இவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கான இலங்கை துடுப்பாட்ட அணிப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 1976 முதல் 1979 வரை கொழும்பு புனித தோமையர் கல்லூரி அணிக்காகவும், பின்னர் கொழும்பு சிங்களவர் விளையாட்டுக் கழகத்திற்காகவும் போட்டிகளில் பங்கேற்றார்.

கை டி அல்விஸ் 2012 நவம்பரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் 2013, சனவரி 12 சனிக்கிழமை இரவு இறந்தார்[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cricketer Guy de Alwis no more, டெய்லி மிரர், சனவரி 13, 2013
  2. Former Sri Lanka keeper Guy de Alwis passes away பரணிடப்பட்டது 2013-01-13 at the வந்தவழி இயந்திரம், எஸ்பிஎஸ், சனவரி 13, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=கை_டி_அல்விஸ்&oldid=3356460" இலிருந்து மீள்விக்கப்பட்டது