குரங்கு கை மரம்
குரங்கு கை மரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Lecythis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LecythisL. ollaria
|
இருசொற் பெயரீடு | |
Lecythis ollaria Loefl. |
குரங்கு கை மரம் (Lecythis ollaria) என்பது பிரேசில், கயானா மற்றும் வெனிசுலாவில் உள்ள காடுகளில் வளரும் ஒரு வகை மரமாகும். இந்த மரம் உள்நாட்டில் கோகோ டி மோனோ என்று அழைக்கப்படுகிறது, மேலும் அதன் திசுக்களில் செலீனியம் குவிந்துள்ளது. இது பிரேசில் கொட்டை மரத்தின் ( இந்த மரத்தின் அறிவியல் பெயர் Bertholletia excelsa ) குடும்பத்தில் உள்ளது. இதன் விதைகள் பழுத்தவுடன் வெடிக்கும். எண்ணெய் நிறைந்த சதைப்பற்றுள்ள உட்புறம் மற்றும் மரத்தாலான வெளிப்புற உறை ஆகியவற்றைக் கொண்ட விதைகளைப் பிரித்தெடுப்பதற்காக குரங்குகள் கொட்டைகளுக்குள் தங்கள் கைகளை பயன்படுத்துவதகக் கூறப்படுகிறது
மரத்தின் அமைவு முறை
[தொகு]இது பெரு மரம் ஆகும். இதனுடைய தன்மை மிகவும் கடினமானது. இதில் வெள்ளை நிறப் பூக்கள் வருகிறது. கொட்டைகள் ஒரு இனிமையான சுவையுடன் இருப்பதால் மனிதர்களால் உண்ணப்படுகின்றன.[2] மேல் ஓடு கடினமாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ளது. பார்ப்பதற்கு பானை போன்ற வடிவில் உள்ளது. காய் கனிந்தவுடன் மூடி திறந்து கீழே விழுந்து விடுகிறது. உள்ளே உள்ள விதைகள் கீழே கொட்டிவிடுகிறது. இதனால் இதனுடைய விதையை சேகரிப்பது மிகவும் கடினம். ஆகையால் இதன் விதைகள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும்.
இதனுடைய சுவைக்காக குரங்கு தலையை வெளியே விட்டப்பிறகு வெளியே எடுக்க முடியாமல் மாட்டிக்கொள்கிறது. இந்தப் பழத்தை வைத்து குரங்கையும், நாயையும் பிடிக்கிறார்கள்.
நச்சுத்தன்மை
[தொகு]தென் அமெரிக்காவில் முன்பு ஆரோக்கியமான இரண்டு பெண்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் நரம்பியல் அறிகுறிகள் தோன்றியது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதிக முடி உதிர்தலுக்குப் பிறகு, முதலில் எந்த காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மரத்தின் கொட்டைகளை சாப்பிட்டதால் ஏற்பட்ட கடுமையான செலினியம் நச்சுத்தன்மையால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பின்னர் கண்டறியப்பட்டது. அவர்கள் கொட்டைகளை சாப்பிட்ட எட்டு வாரங்களுக்குப் பிறகும் அவர்களின் இரத்தத்தில் செலினியம் அளவு அதிகரித்தது.[3] இதன் பட்டை, இலைகள், கொட்டைகள் மற்றும் விதைகளின் திசுக்கள் அனைத்திலும் செலினியம் உள்ளது. ஆனால் அதிக செறிவு ஒரு கிலோவிற்கு ஐந்து கிராம் கொண்ட கொட்டைகளில் இருந்தது. அதில் பாதி தண்ணீரில் கரையக்கூடியது.[4] மரம் ஒரு செலினியம் திரட்டியாகக் கருதப்படுகிறது மற்றும் தனிமத்தின் ஒரு பகுதி செலினியம் நிறைந்த புரதங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.[5]
பொருளாதாரப் பயன்கள்
[தொகு]இம்மரம் பிரேசில் நாட்டில் வளர்கிறது. இதனுடைய பழம் சாக்லேட் தயாரிக்கப் பயன்படுகிறது.
நிலை
[தொகு]ஆபத்தான உயிரினங்களின் செம்பட்டியலில் இந்த கொட்டைகள் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என பட்டியலிட்டுள்ளது. ஏனெனில் இது வெப்பமண்டல மழைக்காடுகளில் பரவலான புவியியல் பரவலைக் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 Pires O'Brien, J. (1998). "Lecythis ollaria". IUCN Red List of Threatened Species 1998: e.T35587A9937117. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T35587A9937117.en. https://www.iucnredlist.org/species/35587/9937117. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Armstrong, W. P. "Brazil, Paradise & Cashew Nuts". Wayne's Word. Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2012-08-27.
- ↑ Müller, D; Desel, H. (2010). "Acute selenium poisoning by paradise nuts (Lecythis ollaria)". Human & Experimental Toxicology 29 (5): 231–234. doi:10.1177/0960327109360046. பப்மெட்:20106940. http://resolver.sub.uni-goettingen.de/purl?gs-1/13072.
- ↑ Ferri, T.; Coccioli, F.; De Luca, C.; Callegari, C. V.; Morabito, R. (2004). "Distribution and speciation of selenium in Lecythis ollaria plant". Microchemical Journal 78 (2): 195–203. doi:10.1016/j.microc.2004.06.001.
- ↑ Hammel, C.; Kyriakopoulos, A.; Behne, D.; Gawlik, D.; Brätter, V. (1996). "Protein-bound selenium in the seeds of coco de mono (Lecythis ollaria)". Journal of Trace Elements in Medicine and Biology 10 (2): 96–102. doi:10.1016/S0946-672X(96)80017-4. பப்மெட்:8829132.
[1] சிறியதும் பெரியதும் ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ வெளியீடு:அறிவியல் வெளியீடு, ஜூன் 2001[1]
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.