உள்ளடக்கத்துக்குச் செல்

ஏற்காடு இளங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஏற்காடு இளங்கோ
Yercaud-elango
பிறப்பு19 மார்ச்சு 1961 (1961-03-19) (அகவை 63)
தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம்,
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைஅறிவியல் கட்டுரைகள்,

ஏற்காடு இளங்கோ (Yercaud-elango) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1961 ஆம் ஆண்டு மார்சு மாதம் 19 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அறிவியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.[1] ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இவர் மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராக விளங்கி வருகிறார். அறிவியல் உண்மைகளை மாணவர்கள் மத்தியில் பரப்புரை செய்துவருவதோடு துளிர் என்ற அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[2] 2000ஆம் ஆண்டில் வெளிவந்த அதிசயத் தாவரங்கள் என்ற நூலில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து தமிழில் எழுதி வருகிறார். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலையின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை குறித்து ஆராய்ந்து எழுதியும் வருகிறார்.[3][4][5][6] [7]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் இளங்கோ பிறந்தார். தொடக்கக் கல்வியை பேளுக்குறிச்சியிலும் அறிவியல் இளையர் பட்டவகுப்பை நாமக்கல்லிலும், முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தார். இவருக்கு ஜார்ஜ் டிமிட்ரோவ், ஹோசிமின் என இரு மகன்கள் உள்ளனர். நடுவணரசின் தாவரவியல் ஆராய்ச்சி துறையில் பணிபுரிந்து 2021 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 118 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 100 நூல்கள் அறிவியல் மற்றும் பொது அறிவுத் தகவல் தொடர்புடைய நூல்களாகும். அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள், பன்னாட்டு தினங்கள், பறவைகள்[8] குறித்த தகவல் போன்றவை இவருடைய நூல்களின் மையக்கருத்தாகும்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  1. விண்வெளியில் ஆய்வு நிலையம்[9]
  2. அந்தமான் அழகு
  3. அல்பினோ விலங்குகள்
  4. உள்ளே இரு! இப்படிக்கு கொரோனா
  5. ஏற்காட்டின் வண்ணச் சிறகிகள்
  6. சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்
  7. சுற்றுச்சூழல் அறிஞர்களின்
  8. செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்[10]
  9. பனிமனிதன் ஓட்சி
  10. பார்வையற்ற முதல் பட்டதாரிப் பெண் ஹெலன் கெல்லர்
  11. மூன்றாம் கண்
  12. உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்
  13. விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண்
  14. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா
  15. விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்
  16. இந்திய தேசியச் சின்னங்கள்
  17. பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்
  18. ஏற்காட்டின் வண்ணச் சிறகிகள்[11]
  19. சர்வதேச தினங்கள்
  20. ஸ்டீபன் ஹாக்கிங்[12]
  21. தாமஸ் ஆல்வா எடிசன்
  22. விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்
  23. பூகம்பமும் சுனாமியும்
  24. உலகை மாற்றிய விஞ்ஞானிகள்
  25. வானவில் மலைகள்[13]
  26. இயற்கை வளைவு [14]
  27. காந்த மலை[15]
  28. புதுமை உயிரிகள்
  29. நாட்டு நலப்பணித் திட்டம்
  30. மானிடப் பயணம்
  31. விண்வெளியில் பெண்கள்
  32. ஏற்காடு வரலாறும் பண்பாடும்[16]
  33. பாம்பு போபியா[17]
  34. ராபர்ட் புரூஸ் ஃபூட்[18][19]
  35. இந்திய மாநிலப் பறவைகள்[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஏற்காட்டில் அரியவகை அந்துப்பூச்சி கண்டுபிடிப்பு க". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/Aug/08/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3447220.html. பார்த்த நாள்: 14 October 2024. 
  2. "இந்த வார வல்லமையாளர்!". வல்லமை. https://www.vallamai.com/?p=53227. பார்த்த நாள்: 6 December 2024. 
  3. "முதுமக்கள் தாழிகள் ஏற்காட்டில் கண்டுபிடிப்பு". தினமலர். https://temple.dinamalar.com/news_detail.php?id=69875. பார்த்த நாள்: 14 October 2024. 
  4. "ஏற்காட்டில் புதிய கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு". தீக்கதிர். https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/discovery-of-new-modern-tools-in-yercaud. பார்த்த நாள்: 14 October 2024. 
  5. "For the ailing in Kedakkadu village, ride to hospital is hell". The Times of India. 2023-11-12. பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
  6. "பைபிளை தமிழில் மொழிபெயர்த்த பீட்டர் பெர்சிவலின் 135 ஆவது நினைவு தினம்". தினமணி. https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2017/Jul/13/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-135-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2736717.html. பார்த்த நாள்: 6 December 2024. 
  7. "125 ஆண்டு ஆங்கிலேயர் கால ஏற்காடு காவல் நிலையம் சீரமைக்கப்படுமா?". தினமணி. https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2019/Sep/17/125-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3236350.html#amp_tf=From%20%251%24s&aoh=17332391285918&referrer=https%3A%2F%2Fwww.google.com. பார்த்த நாள்: 6 December 2024. 
  8. "2,500 கி.மீ பறந்து வரும்... விகடகவி செய்யும் பழுப்பு கீச்சான் பறவை!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/environment/111428-2500-kms-of-flying-brown-keecht-bird. பார்த்த நாள்: 6 December 2024. 
  9. "விண்வெளியில் ஆய்வு நிலையம்". Goodreads (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
  10. "ஏற்காடு இளங்கோ - Free Tamil Ebooks". freetamilebooks.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
  11. இளங்கோ, ஏற்காடு. "ஏற்காட்டின் வண்ணச் சிறகிகள் – அறிவியல்". Free Tamil Ebooks. பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
  12. "ஏற்காடு இளங்கோ". நூல் உலகம். https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B&si=2. பார்த்த நாள்: 25 November 2024. 
  13. BookDay (2024-10-08). "வானவில் மலைகள் - ஏற்காடு இளங்கோ". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-14.
  14. BookDay (2024-10-28). "இயற்கை வளைவு (Natural Arch) - ஏற்காடு இளங்கோ". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
  15. BookDay (2024-10-26). "காந்த மலை (Magnetic Hill) - ஏற்காடு இளங்கோ". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
  16. "நூல் வெளியீட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2023/Jan/07/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3980480.html. பார்த்த நாள்: 6 November 2024. 
  17. Bookday (2024-11-17). "பாம்பு போபியா - நூல் அறிமுகம்". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-17.
  18. "வரலாற்று நாயகன் ராபர்ட் புரூஸ் ஃபூட்..! நூல்வெளியீட்டு விழாவில் பெருமிதம்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/amp/story/government-and-politics/112724-historian-robert-bruce-foote. பார்த்த நாள்: 19 November 2024. 
  19. "தொல் பழங்கால வரலாற்று தந்தை புத்தகம் கல்லறையில் வெளியிடல்". தினமலர். https://www.dinamalar.com/amp/news/tamil-nadu-district-news-salem/news/1929508. பார்த்த நாள்: 19 November 2024. 
  20. "புத்தகம் அறிவோம்… இந்திய- மாநிலப்பறவைகள் என்ன என்று தெரியுமா..". தமிழ்மணி.நியூஸ். https://tamilmani.news/book-arena/199848/. பார்த்த நாள்: 6 December 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்காடு_இளங்கோ&oldid=4156627" இலிருந்து மீள்விக்கப்பட்டது