குப்பிளான்
குப்பிளான்
Kuppilaan | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலகம் | வலிகாமம் தெற்கு |
குப்பிளான் (Kuppilan) அல்லது குப்புழான் (Kuppuzhan) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாண நகரில் இருந்து மேற்கே ஏறத்தாழ 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். வடக்கே குரும்பசிட்டி, கிழக்கே புன்னாலைக்கட்டுவன், மேற்கே ஊரெழு, மற்றும் புன்னாலைக்கட்டுவனின் ஒரு பகுதி, மேற்கே ஏழாலை ஆகிய கிராமங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் கிழக்கே பலாலி வீதியும் மேற்கே காங்கேசன்துறை வீதியும் அமைந்துள்ளன.
பெயர்க் காரணம்
[தொகு]அக்காலத்தில் இக்கிராமத்தில் குப்பிழாய் என்ற புல் வகையினம் ஏராளமாகக் காணப்பட்டது. குப்பிழாய் என்ற சொல் காலப்போக்கில் மருவி குப்பிளான் என்று வந்ததாக வரலாறு ஒன்று உள்ளது.[1][2]
கிராம அலுவலர் பிரிவுகள்
[தொகு]குப்பிளானில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவையாவன:
- யா/210 குப்பிளான் தெற்கு
- யா/211 குப்பிளான் வடக்கு
இங்குள்ள கோயில்கள்
[தொகு]இக்கிராம நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவைகளாக,
- கற்கரை கற்பக விநாயகர் கோயில்,
- சொக்கவளவு சோதி விநாயகர் கோவில்,
- கன்னிமார் கௌரி அம்பாள் கோவில்
ஆகியவை விளங்குகின்றன.
கல்வி நிலையங்கள்
[தொகு]- குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்
சமூக நிலையங்கள்
[தொகு]- விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமும்
- குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமும்
விக்னேஸ்வரா சனசமூக நிலையம் ஈழப்போரின் பின் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு நூல் நிலையமும் அமைந்துள்ளது.
பொருளாதாரம்
[தொகு]இங்குள்ள மக்கள் தமது விவசாய நிலங்களில் புகையிலை, வெங்காயம், மிளகாய், போஞ்சி, குரக்கன் ஆகிய பயிர்வகைகளைப் பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் வரிக்கை இனப்பலாப்பழம், கறுத்தக்கொழும்பான் மாம்பழம் போன்றவை சிறப்பாக வளருகின்றன.
வெளி இணைப்புகள்
[தொகு]- குப்பிளான் இணையதளம் பரணிடப்பட்டது 2010-10-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "குப்பிழான் கிராமம்". http://www.tamilmurasuaustralia.com/2010/07/blog-post_4218.html.
- ↑ "Kuppuzhaan". TamilNet. September 22, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30289.