உள்ளடக்கத்துக்குச் செல்

கிரண் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரண் சேத்
2014இல் கிரண் சேத்
பிறப்பு27 ஏப்ரல் 1949 (1949-04-27) (அகவை 75)
தேசியம் இந்தியா
கல்விமுனைவர் (1974) கொலம்பியா பல்கலைக்கழகம்
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர், கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிஓய்வு பெற்ற பேராசிரியர்
பணியகம்இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
அறியப்படுவதுஇசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம்

கிரண் சேத் (Kiran Seth; பிறப்பு 1949) ஒரு இந்திய கல்வியாளர் ஆவார். தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை, இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பிற அம்சங்களை ஊக்குவிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தை (1977) இன் நிறுவனராக இவர் மிகவும் அறியப்படுகிறார்.[1][2]

2009 ஆம் ஆண்டு, கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

1951 இல் நிறுவப்பட்ட கரக்பூர், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணிதவியலாளரும் முதல் பேராசிரியருமான போஜ்ராஜ் சேத் என்பவருக்கும் பகவதி என்பவருக்கும் மகனாக 27 ஏப்ரல் 1949 இல் பிறந்தார்.

தொழில்

[தொகு]

சேத் 1974 இல் நியூ செர்சியில் உள்ள பெல் ஆய்வகங்களில் தொழில்நுட்ப ஊழியர்களில் ஒரு உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கினார். 1976 இல் இந்தியாவுக்குத் திரும்பிய இவர் புது தில்லி இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில்உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இங்கு இவர் பணி புர்யும்போதுதான் இவர் 1977 இல் இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கத்தை நிறுவினார் [4] [5]

2012 முதல் 2014 வரை புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார் [6]

இன்று இந்த இயக்கம் தொடர் இசை நிகழ்ச்சிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேசிய மாநாடுகள், தேசியத் தீவிரப் பள்ளி, பூங்காவில் இசை, உதவித் தொகைத் திட்டம், பாரம்பரிய நடைகள், சிறந்த சிந்தனையாளர்களின் பேச்சுக்கள், யோகக் கலை முகாம்கள், பாரம்பரிய திரைப்படங்கள் திரையிடல் முதலியனவற்ற நடத்துகின்றன.[7][8][9][10]

சான்றுகள்

[தொகு]
  1. Kumar, Ranee (23 October 2003). "Catch 'em young: Kiran Seth, the founder of Spicmacay, has a focused agenda of shaping young minds". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 April 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040413231509/http://www.hindu.com/thehindu/mp/2003/10/23/stories/2003102301110200.htm. 
  2. Chaudhuri, Shatarupa (5 March 2010). "Stay connected with culture". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418091651/http://www.newindianexpress.com/cities/bengaluru/article254842.ece. 
  3. Datta, Sravasti (10 October 2014). "An artistic endeavour". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/an-artistic-endeavour/article6486274.ece. 
  4. Bajoria, Jayshree (4 June 2004). "Young converts to Indian classics". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3778005.stm. 
  5. Ramchandra Guha (5 December 2004). "The education of a Philistine:SPIC MACAY" இம் மூலத்தில் இருந்து 8 ஏப்ரல் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050408031639/http://www.hindu.com/thehindu/mag/2004/12/05/stories/2004120500380300.htm. 
  6. URL=http://timesofindia.indiatimes.com/city/pune/Mirza-aims-at-centre-of-excellence-status-for-FTII/articleshow/8094611.cms
  7. Quraishi, Humra (12 December 2007). "Kiran Seth: Without playing a note, he makes music touch the lives of many". Mint.
  8. "Keeping our virasat alive". The Tribune. 7 December 2003. Archived from the original on 28 October 2014.
  9. Kumar, Mala (30 October 2003). "From rap to raga". The Hindu இம் மூலத்தில் இருந்து 5 April 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040405115855/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/10/30/stories/2003103000960300.htm. 
  10. "Discovery of India". தி இந்து. 28 May 2009 இம் மூலத்தில் இருந்து 7 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107180026/http://www.hindu.com/mp/2009/05/28/stories/2009052850390100.htm. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_சேத்&oldid=4109095" இலிருந்து மீள்விக்கப்பட்டது