உள்ளடக்கத்துக்குச் செல்

காமதா இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமதா இராச்சியம் (Kamata kingdom) (pron: ˈkʌmətɑ), காமரூப பால வம்சத்தினரின் காமரூபப் பாலப் பேரரசின் ( 350–1140) வீழ்ச்சிக்குப் பின்னர் கிபி 13-ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற இராச்சியமாகும்.[1]

காமதா இராச்சியத்தின் இறுதி மன்னரை, தில்லி சுல்தானகத்தின் வங்காளப் பிரதேச ஆளுநர் அலாவுத்தீன் உசைன் ஷா, ஆட்சியிலிருந்து அகற்றினாலும், அவரால் காமரூபப் பேரரசில் தனது ஆட்சியை நிலைநிறுத்த இயலவில்லை. இதனால் 1586-இல் காமதாப் பேரரசை அகோம் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர். சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் காமதா இராச்சியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கூச் பெகர் தலைநகராகக் கொண்டு 1586-இல் கூச் பெகர் இராச்சியம் நிறுவப்பட்டது.

கென் வம்சத்தினர் கூச் பெகர் தலைநகராகக் கொண்டு கூச் பெகர் இராச்சியத்தை, இந்திய விடுதலை வரை ஆண்டனர். பின்னர் 1948-இல் தங்கள் இராச்சியத்தை இந்தியாவுடன் இணைத்தனர்.[2]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  • Boruah, Nirode (2011). "Kamarupa to Kamata: The political Transition and the New Geopolitical Trends and Spaces". Proceedings of the Indian History Congress 72: 78–86. 
  • Sarkar, J. N. (1992), "Chapter II The Turko-Afghan Invasions", in Barpujari, H. K. (ed.), The Comprehensive History of Assam, vol. 2, Guwahati: Assam Publication Board, pp. 35–48
  1. "காமரூப பேரரசு was reorganized as a new state. 'Kamata' by name with Kamatapur as capital. The exact time when the change was made is uncertain. But possibly it had been made by Sandhya (c1250-1270) as a safeguard against mounting dangers from the east and the west. Its control on the eastern regions beyond the Manah (Manas river) was lax." (Sarkar 1992, pp. 40–41)
  2. http://coochbehar.nic.in/htmfiles/royal_history2.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதா_இராச்சியம்&oldid=3374321" இலிருந்து மீள்விக்கப்பட்டது