களவாணி 2 (திரைப்படம்)
களவாணி 2 | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | சற்குணம் |
தயாரிப்பு | ஏ. சற்குணம் |
இசை | மணி அமுதவன் (பாடல்கள்) வி2 (பாடல்கள்) வி. ரொனால்ட் ரீகன் (பாடல்கள்) நடராஜன் சங்கரன்(பின்னணி இசை) |
நடிப்பு | விமல் ஓவியா விக்னேஷ்காந்த் |
ஒளிப்பதிவு | மாசாணி |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | வர்மாஸ் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 5 சூலை 2019 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
களவாணி 2 (Kalavani 2) 2019 இல் வெளியான ஓர் இந்தியத் தமிழ் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியவர் சற்குணம் ஆவார். இத்திரைப்படத்தில் விமல் மற்றும் ஓவியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் விக்னேஷ்காந்த், கஞ்சா கறுப்பு ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் வெளியான களவாணி திரைப்படத்தின் தொடர் படமாகும். இத்திரைப்படத்தின் தயாரிப்பு 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இப்படம் சராசரியான விமர்சனங்களைப் பெற்றது [1]
கதைக்களம்
[தொகு]அறிவழகன்(விமல்) தனது பழைய ஏமாற்றும் கதாபாத்திரத்தில் தொடர்கிறார். இந்த முறை விக்கி என்ற நண்பராக (விக்னேஷ்காந்த்) வருகிறார். உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, அறிவழகனின் மாமாவும், அறிவழகனின் காரலி மகேஸ்வரியின் (ஓவியா) தந்தையாரும் போட்டியிடுகின்றனர். அறிவழகனும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யத் திட்டமிடுகிறார். வாக்குகள் சிதறுவதைத் தடுக்க இரு தரப்பினரும் தனக்குப் பணம் தர முன் வருவார்கள் என்பது அறிவழகனின் திட்டம். இதற்காக பஞ்சாயத்தை (கஞ்சா கறுப்பு) ஏமாற்றி பண உதவி பெறுகிறார். ஆனால், அறிவழகன் வேட்புமனு தாக்கல் செய்தது அறிவழகனின் மாமாவிற்கோ, மகேஷ்வரியின் தந்தைக்கோ தெரியாமல் போகிறது. அவர்கள் இருவருமே அறிவழகனை ஏளனமாகப் பேசுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அறிவழகன் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று சபதம் செய்கிறார். இதன் பிறகு அறிவழகன் செய்யும் களவாணித் தனங்கள், நிறைய அதிரடிகள் ஆகியவையே களவாணி 2 திரைப்படத்தின் மீதிக்கதையாகும்.
நடிப்பு
[தொகு]- அறிவழகனாக விமல்
- மகேஷ்வரியாக ஓவியா
- விக்கியாக விக்னேஷ்காந்த்
- இலட்சுமியாக சரண்யா பொன்வண்ணன்
- இராமசாமியாக இளவரசு
- பஞ்சாயத்தாக கஞ்சா கறுப்பு
- வினோதினி வைத்தியநாதன்
- மண்ணை சாதிக்
- வசந்த்
தயாரிப்பு
[தொகு]2010 ஆம் ஆண்டில் நசீர் தயாரிப்பில் வெளியான களவானி திரைப்படம் ஆச்சர்யமூட்டும் வகையில் ஒரு வெற்றியையும், வசூலில் சாதனையையும் செய்தது. இதன் மூலமாக இயக்குநர் சற்குணம், நடிகர் விமல் மற்றும் நடிகைஓவியா ஆகியோருக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியது. நவம்பர் 2016 இல், சற்குணம் மற்றம் விமல் களவாணியின் இரண்டாம் பாகத்திற்காக இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் சற்குணம் நடிகர் மாதவன் நடிப்பதாக இருந்த திரபை்படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அக்டோபர் 2017 இல், நடிகர் விமல் இப்படத்தில் ஒப்பந்தமானதை மறுத்தார். நசீர் களவாணியின் தொடர் படத்தை தயாரிப்பதையும் மறுத்தார்.[2]
2018 இல் சற்குணம் மாதவனுடன் செய்வதாக இருந்த திரைப்படத்தை ஒத்தி வைத்து விட்டு களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வர்மன் தயாரிப்பு நிறுவனம் மூலமாகத் தொடங்க இருப்பதை முன்மொழிந்தார். இத்திரைப்படத்திற்காக விமல் மற்றும் ஓவியாவை ஒப்பந்தம் செய்தார். இத்திரைப்படத்திற்கு கே2.[3][4] சற்குணத்தின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து நசீர் இது குறித்து தனது வருத்தத்தை வெளியிட்டார். அவர் களவானி 2 திரைப்படத்தைத் தான் தொடங்க இருப்பதாகவும், இதற்கான அசலான உரிமைகள் தன்னிடமே இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பூனம் கவுர் நடித்துக் கொண்டிருக்கும் வடம் என்ற திரைப்படம் முடிந்தவுடன் 2018 ஆம் ஆண்டின் மத்தியில் இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார்.[5][6]
இந்தப் பிரச்சனை இவ்வாறாக இருக்க சற்குணம் விமலை வைத்து பிப்ரவரி 2018 இல் தனது படப்பிடிப்பைத் தொடங்கினார். மே 2018 இல் ஓவியா இப்படக்குழுவினருடன் இணைந்தார்.[7] களவாணி திரைப்படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இப்படத்தில் மீண்டும் இணைந்தனர். சூரி இப்படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக விக்னேஷ்காந்த் ஒப்பந்தமானார்.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.cinemaexpress.com/reviews/tamil/2019/jul/07/kalavani-2-movie-review-vimal-oviyaa-star-in-yet-another-pointless-sequel-12807.html
- ↑ "Vimal Dismisses Reports Of 'Kalavani 2', Says He Is Not Part Of The Film". 8 September 2017.
- ↑ "Sarkunam announces 'K2' with Oviya and Vemal - Times of India".
- ↑ "Sarkunam announces 'Kalavani-2' with Oviya and Vemal!". Archived from the original on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
- ↑ KR, Manigandan. "Producer, director spar over right to make sequel to superhit film Kalavaani". Cinestaan.
- ↑ "Sarkunam in a fix! 'Kalavani 2' title does not belong to him". Archived from the original on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
- ↑ "Oviya joins the shoot of 'Kalavani 2'". Archived from the original on 2018-05-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
- ↑ "Ancient house sets for Kalavani 2 song - Times of India".
- ↑ "'Kalavani 2': Makers release a lyrical video titled, 'Ottaram Pannatha' - Times of India".