சற்குணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சற்குணம் (ஆங்கில மொழி: Sarkunam) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். விமல், ஓவியா நடித்த களவாணி திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். வாகை சூட வா, நையாண்டி முதலான திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது அதர்வா நடிக்கும் சண்டி வீரன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

திரை வாழ்க்கை[தொகு]

2009 ஆவது ஆண்டில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான, காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான களவாணி திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும்.இத்திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[1][2] 2011 ஆவது ஆண்டில் வெளியான வாகை சூட வா திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தில், களவாணி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த விமல் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.[3][4] வாகை சூட வா திரைப்படம் இவரது கனவுத் திரைப்படம் என்கிறார் இயக்குநர் சற்குணம்.[5] அதற்குப் பிறகு இவர் இயக்கிய நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான நையாண்டி திரைப்படத்தை இயக்கினார்.[6] இத்திரைப்படத்தில் தனுஷ், நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[7][8] அதர்வா, ஆனந்தி நடிப்பில் பாலாவின் தயாரிப்பில் 2015ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் சண்டி வீரன் திரைப்படம் இவர் இயக்கும் நான்காவது திரைப்படமாகும்.[9]

2014 ஆவது ஆண்டில் சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, இவரது சகோதரர் ஏ. நந்தகுமாரை திரைப்படத் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தினார். சற்குணத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய என். ராகவன் இயக்கிய மஞ்சப்பை திரைப்படம் இவர்களது நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.[10]

திரைப்பட விபரம்[தொகு]

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது குறிப்புகள்
இயக்குநர் கதாசிரியர்
2010 களவாணி Green tickY Green tickY
2011 வாகை சூட வா Green tickY Green tickY சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2013 நையாண்டி Green tickY Green tickY
2015 சண்டி வீரன் (திரைப்படம்) Green tickY Green tickY

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. M Suganth, Sarkunam's movie succeed at box office. The Times of India, 19 July 2010.
  2. Kalavani - Tamil Movie News - "Please do not compare me with Mani Ratnam!!!" - Kalavani | Sarkunam | Mani Ratnam. Behindwoods.com (2010-07-15). Retrieved on 2011-09-26.
  3. In quest of victory! - Times Of India Articles.timesofindia.indiatimes.com (2011-05-08). Retrieved on 2011-09-26.
  4. National Film Award for Best Feature Film in Tamil
  5. "Director Sargunam and Vimal - Tamil Cinema Director and Actor Interview - Sargunam | Vimal | Vaagai Sooda Vaa | Kalavani | Amala Paul". Videos.behindwoods.com. பார்த்த நாள் 10 November 2011.
  6. "Dhanush film title changed to 'Naiyaandi'". Times of India. பார்த்த நாள் 20 February 2013.
  7. "Dhanush joins 'Naiyaandi' unit in Tanjavur". Sify. பார்த்த நாள் 20 February 2013.
  8. "Nazriya Nazim is Dhanush’s heroine!". Times of India. பார்த்த நாள் 20 February 2013.
  9. http://www.sify.com/movies/atharavaa-sargunam-film-gets-a-title-and-buyer-news-tamil-pb2iQWaagfgfh.html
  10. A Sarkunam Cinemaz's Manja Pai Movie Details
"https://ta.wikipedia.org/w/index.php?title=சற்குணம்&oldid=2677394" இருந்து மீள்விக்கப்பட்டது