கம்பிரிசாட் பச்சை குழிவிரியன்
கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் | |
---|---|
திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி ஆண் | |
திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | விவிபேரிடே
|
பேரினம்: | திரிமெரெசுரசு
|
இனம்: | தி. கம்பிரிக்ட்டி
|
இருசொற் பெயரீடு | |
திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி டேவிட் மற்றும் பலர், 2002 | |
வேறு பெயர்கள் [2] | |
|
கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் (Gumprecht's green pit viper) என்று பொதுவாக அழைக்கப்படும் திரிமெரெசுரசு கம்பிரிக்ட்டி (Trimeresurus gumprechti), வைபரிடே குடும்பத்தைச் சேர்ந்த நச்சுப் பாம்பு சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் ஆசியாவில் மட்டுமே காணப்படுகிறது.
புவியியல் வரம்பு
[தொகு]கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் தெற்கு சீனாவில் (யுன்னான் லாவோஸ், மியான்மர், தாய்லாந்து,வியட்நாம்) காணப்படுகிறது.
வாழிடம்
[தொகு]கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் பாம்பின் விருப்பமான இயற்கை வாழ்விடம் காடுகளாகும். இது 300-1,570 மீ (′ID2] ) உயரத்தில் உள்ளக் காடுகளில் வாழ்கின்றது.
வகைப்பாட்டியல்
[தொகு]கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் 2002ஆம் ஆண்டில் ஒரு புதிய சிற்றினமாக விவரிக்கப்பட்டது
விளக்கம்
[தொகு]கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் பிரகாசமான பச்சை நிறத்தில் காணப்படும். "பெரும் மெகாங்கில் முதல் தொடர்பு: புதிய சிற்றினங்கள் கண்டுபிடிப்புகள்" என்ற உலக வனவிலங்கு நிதியத்தால் வெளியிடப்பட்ட 2008 அறிக்கையின் அட்டைப் படமாக இந்தப் பாம்பின் புகைப்படம் வெளியானது.[3] இப்பாம்பு 1.3 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.[2]
நடத்தை
[தொகு]கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் மரங்களில் வாழக்கூடிய விலங்காகும்.
இனப்பெருக்கம்
[தொகு]கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் சீவசமுளைத்தல் முறையில் இனப்பெருக்கம் செய்யக்கூடியது.
சொற்பிறப்பியல்
[தொகு]கம்பிரிசாட் பச்சை குழிவிரியன் சிற்றினப் பெயரான கும்ப்ரெக்டி, செருமன் ஊர்வனவியலாளர் ஆண்ட்ரியாசு கும்ப்ரெக்ட்டின் நினைவாக இடப்பட்டது.[4]
படங்கள்
[தொகு]-
பூ கின் உரோங் கிளா தேசிய பூங்காவில் முதிர்ச்சியடைந்த பெண் பாம்பு
-
பூ கின் உரோங் கிளா தேசிய பூங்காவில் ஆண் பாம்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ species:Bryan Lynn Stuart; species:Tanya Chan-ard; species:Truong Quang Nguyen (2022). "Trimeresurus gumprechti ". IUCN Red List of Threatened Species 2022: e.T192108A217767991. doi:10.2305/IUCN.UK.2022-1.RLTS.T192108A217767991.en. https://www.iucnredlist.org/species/192108/217767991. பார்த்த நாள்: 28 February 2023.
- ↑ 2.0 2.1 Trimeresurus gumprechti at the Reptarium.cz Reptile Database
- ↑ Thompson, Christian (2008). First Contact in the Greater Mekong: New Species Discoveries (PDF) (Report). WWF Greater Mekong. Archived from the original (PDF) on 30 December 2008. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).
மேலும் வாசிக்க
[தொகு]- species:Patrick David; species:Gernot Vogel; species:Olivier Sylvain Gérard Pauwels; species:Nicolas Vidal (2002). "Description of a New Species of the Genus Trimeresurus from Thailand, Related to Trimeresurus stejnegeri Schmidt, 1925 (Serpentes, Crotalidae)". The Natural History Journal of Chulalongkorn University 2 (1): 5–19. https://li01.tci-thaijo.org/index.php/tnh/article/view/102858. (Trimeresurus gumprechti, new species).
- Gumprecht A, Tillack F, Orlov NL, Captain A, Ryabov S (2004). Asian Pitvipers. (First Edition). Berlin: GeitjeBooks. 368 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-937975-00-4.
- Nguyen SV, Ho CT, Nguyen TQ (2009). Herpetofauna of Vietnam. Frankfurt am Main: Edition Chimaira / Serpents Tale. 768 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3899734621.