உள்ளடக்கத்துக்குச் செல்

ஓலைவாலன் திருக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pastinachus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஓலைவாலன் திருக்கை
Cowtail stingray off Marsa Alam, எகிப்தின் மார்சா ஆலமில் ஓலைவாலன் திருக்கை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pastinachus
இனம்:
இருசொற் பெயரீடு
Pastinachus sephen
(Forsskål, 1775)
வேறு பெயர்கள்

ஓலைவாலன் திருக்கை[2] அல்லது இலை திருக்கை (Cowtail stingray) என்பது தஸ்யாதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை திருக்கை மீன் ஆகும். இது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பரவலாக உள்ளது. இது அவ்வப்போது நன்னீர் வாழ்விடங்களில் நுழைகிறது. ஓலைவாலையன் திருக்கையின் ஒரு தனித்துவமான அடையாளமாக இதன் வாலில் ஒரு ஓலை கட்டபட்டது போன்ற வடிவம் ஆகும். இந்த இனமானது வணிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. இதன் தோல் உயர்தரமானதாக குறிக்கப்படுகிறது. இந்த இன மீன்கள் அதிகப்படியான மீன்பிடி செயல்பாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

பரவலும், வாழ்விடமும்

[தொகு]

ஓலைவாலன் திருக்கையானது தென்னாப்பிரிக்கா மற்றும் செங்கடல் முதல் யப்பான் மற்றும் ஆத்திரேலியா வரை மெலனீசியா மற்றும் மைக்குரோனீசியா உட்பட, இந்தோ-பசிபிக் வெப்பமண்டல கடல் பகுதியில் பரவலாக வாழ்கிறது. இவை வலசை போய் முகத்துவாரங்கள் மற்றும் ஆறுகள் போன்றவற்றில் நுழைவதாக அறியப்படுகிறது. இந்த இனம் தென்கிழக்கு ஆசியாவில் நன்னீரிலிருந்தது பொதுவாக பதிவு செய்யப்பட்ட திருக்கை ஆகும். மேலும் இது கடலில் இருந்து 2,200 கிமீ (1,400 மைல்) தொலைவில் கங்கை ஆற்றில் காணப்பட்ட ஒரு பதிவு உள்ளது.[3] இவை பொதுவாக கடலோர நீரில் மணல் அடியில் புதைந்து மறைந்தும், பவளப் பாறைகள் உள்ள பகுதிகளிலும் 60 மீட்டர்கள் (200 அடிகள்) ஆழத்தில் காணப்படுகின்றன.

விளக்கம்

[தொகு]
நீந்தும் ஓலைவாலன் திருக்கையின், வாலில் உள்ள ஓலை போன்ற அமைப்பைக் காட்டுகிறது.

ஓலைவாலையன் திருக்கையானது தட்டுபோன்ற பெரிய உடலும், தடித்த வாலும் கொண்டது. இதன் உடல் வட்டவடிவில், சற்று முக்கோணமாக காணப்படும். இதன் முதன்மை உடல் நீளத்தைவிட 1.1-1.3 மடங்கு அகலம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது. இதன் மூக்கு அகன்று வட்டமானதாகவும், மழுங்கியதாகவும் இருக்கும். இதன் கண்கள் மிகவும் சிறியவையாகவும், பரந்த இடைவெளி கொண்டவை. இவற்றின் வாய் குறுகலானது, ஒவ்வொரு தாடையிலும் வரிசையாக 20 தனித்துவமான அறுகோண, நெருக்கமான பற்கள் கொண்டுள்ளது. மேலும் இதன் வாய் அடியில் சுவை தடிப்புகள் உள்ளன. இதன் மேப் பக்கமாக மூச்சுக் குழல் உள்ளது. இதன் வால் முனையில் நஞ்சுள்ள கூரிய கொடுக்கு உள்ளது. அதன்மூலம் இது எதிரிகளைக் கொட்டும்.[4][5][6]

இவற்றின் உடல் நிறம் ஓரேமாதிரியாக சாம்பல் பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேலே அடர் நிறத்திலும், பெரும்பாலும் கீழே வெள்ளை நிறத்திலும் இருக்கும். வால் முனை கருப்பாக இருக்கும். இந்த இனம் 3 மீட்டர் (9.8 அடி) நீளம் மற்றும் 1.8 மீட்டர் (5.9 அடி) அகலம், மற்றும் 250 கிலோ (550 பவுண்ட்) எடை வரை வளரும்.

உயிரியல் மற்றும் சூழலியல்

[தொகு]
ஒரு மணல் தரை மீது ஓலைவாலன் திருக்கை.

ஓலைவாலன் திருக்கையானது எலும்பு மீன்கள் ( காரல், நெமிப்டெரஸ், சோலிஸ் போன்றவை), ஓடுடைய கணுக்காலிகள், பல்நுண்முள் புழுக்கள், சிபுன்குலிட்ஸ், மெல்லுடலிகள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. இந்த திருக்கையானது பல்வேறு வகையான கொம்பன் சுறாக்கள் மற்றும் ரெக்வியாம் சுறாக்கள் , போத்தல் மூக்கு ஓங்கில்கள் போன்றவற்றால் வேட்டையாடப்படுகிறது. அச்சுறுத்தல் ஏற்படும் போது, இவை வேட்டையாடுபவரிடமிருந்து 45 ° கோணத்தில் தப்பிச் செல்கின்றன.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. Kyne, P.M., Jabado, R., Bineesh, K.K. & Spaet, J. 2017. Pastinachus sephen. The IUCN Red List of Threatened Species 2017: e.T70682503A109922153. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-2.RLTS.T70682503A109922153.en. Downloaded on 1 October 2017.
  2. "மீன்களுக்குள் மறைந்திருக்கும் தமிழ்!". Hindu Tamil Thisai. 2023-06-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
  3. Feibel, C.S. (1993). "Freshwater stingrays from the Plio-Pleistocene of the Turkana Basin, Kenya and Ethiopia". Lethaia 26 (4): 359–366. doi:10.1111/j.1502-3931.1993.tb01542.x. https://archive.org/details/sim_lethaia_1993-12_26_4/page/359. 
  4. "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} 2009 version. N.p.: FishBase, 2009.
  5. Last, P.R.; Compagno, L.J.V. (1999). "Dasyatidae". In Carpenter, K.E. (ed.). The Living Marine Resources of the Western Central Pacific. Vol. 3. Rome: Food and Agricultural Organizations of the United Nations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-5-104302-8.Last, P.R.; Compagno, L.J.V. (1999). "Dasyatidae". In Carpenter, K.E.; Niem, V.H. (eds.). The Living Marine Resources of the Western Central Pacific. 3. Rome: Food and Agricultural Organizations of the United Nations. ISBN 978-92-5-104302-8.
  6. Smith, J.L.B, Smith, M., Smith, M.M. and Heemstra, P. (2003). Smith's Sea Fishes. Struik. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86872-890-9.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. Semeniuk, C.A.D.; Dill, L.M. (2005). "Cost/benefit analysis of group and solitary resting in the cowtail stingray, Pastinachus sephen". Behavioral Ecology 16 (2): 417–426. doi:10.1093/beheco/ari005. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலைவாலன்_திருக்கை&oldid=3928423" இலிருந்து மீள்விக்கப்பட்டது