ஐன்ரிக் ஏர்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐன்றிக் ருடோல்ஃப் ஏர்ட்ஃசு
Heinrich Rudolf Hertz
பிறப்பு(1857-02-22)பெப்ரவரி 22, 1857
ஹாம்பெர்க், செருமனி
இறப்புசனவரி 1, 1894(1894-01-01) (அகவை 36)
பான், செருமனி
வாழிடம்செருமனி
தேசியம்செருமானியர்
துறைஇயற்பியல்
இலத்திரனியல் பொறியியல்
பணியிடங்கள்கீல் பல்கலைக்கழகம்
கார்ல்சுருகே பல்கலைக்கழகம்
பான் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மூனிக் பல்கலைக்கழகம்
பெர்லின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஏர்மாண் வோன் எல்ம்ஹோல்ட்ஸ்
அறியப்படுவதுமின்காந்த அலைகள்
ஒளிமின் விளைவு
கையொப்பம்

ஐன்ரிக் ருடோல்ஃப் ஏர்ட்ஃசு (ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ், Heinrich Rudolf Hertz, பெப்ரவரி 22, 1857 – சனவரி 1, 1894) ஓர் செருமானிய இயற்பியலாளர் ஆவார். மாக்ஸ்வெல்லின் ஒளியின் மின்காந்த அலைக் கொள்கையை விளக்கி விரிவுபடுத்தினார். வானொலி அலைகளை உருவாக்கவும் கண்டறியவும் கூடிய உபகரணங்களை கட்டமைத்து மின்காந்த அலைகளின் இருப்பை பலரும் ஒப்பும் வண்ணம் எடுத்துக் காட்டிய முதல் அறிவியலாளர் ஆவார். மின்காந்தவியலில் இவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் அதிர்வெண் அலகிற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[1] ஒரு ஏர்ட்சு (குறியீடு:Hz) என்பது காலமுறை நிகழ்வொன்றில் ஓர் வினாடிக்கு ஒரு சுழற்சி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IEC History". Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2014-06-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்ரிக்_ஏர்ட்சு&oldid=3546829" இலிருந்து மீள்விக்கப்பட்டது