ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்
ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் (Asian Clearing Union) | |
---|---|
தலைமையிடம் | தெஹ்ரான், ஈரான் |
வகை | கணக்குத் தீர்வக ஒன்றியம் |
பொருளாதார உறுப்பினர்கள் | ஒன்பது |
தலைவர்கள் | |
• ஏசீயூ அவைத்தலைவர் | பூட்டான் |
உருவாக்கம் | 1974 ஆம் ஆண்டு |
ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் (ACU) என்பது பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பொருளாதார, சமூக ஆணைக் குழுவின் (ESCAP) முன்முயற்சியால் 1974 டிசம்பர் 9 அன்று ஈரானில் உள்ள டெஹ்ரானில் அமைக்கப்பட்ட ஆசிய ஒன்றியம் ஆகும்.[1] சாதாரணமாக அந்நியச் செலாவணி பரிமாற்றங்களில் கடைப்பிடிக்கப்படும் அதேமுறையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் வகை ஒன்றின் அனைத்து பரிமாற்றங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தினால் கையாளப்படுகின்றன.[2]
நோக்கம்
[தொகு]- பங்குபெறும் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவித்தல்
- அந்நியச் செலாவணி இருப்புகளையும் மாற்றுக்கட்டணங்களையும் சிக்கனமாக பயன்படுத்தல்
- பரஸ்பர அடிப்படையில் பரிவர்த்தனைகளை ஏற்படுத்த ஒரு தீர்வு காணுதல்
ஆகியன இவ்வொன்றியத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
உறுப்பினர்கள்
[தொகு]ஈரான், இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மார் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளும், பணம் சார் ஆணையுரிமங்களும் ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
நாடு | மத்திய வங்கி | ஆண்டு |
---|---|---|
வங்காளதேசம் | வங்களாதேச வங்கி | 1974 |
பூட்டான் | ராயல் மானிட்டரி அதாரிட்டி ஆஃப் பூடான்(Royal Monetary Authority of Bhutan)] | 1999 |
இந்தியா | இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) | 1974 |
ஈரான் | ஈரான் இஸ்லாமியக் குடியரசு மத்திய வங்கி (Central Bank of the Islamic Republic of Iran) | 1974 |
மாலைத்தீவுகள் | மாலத்தீவுகள் நாணயஞ் சார்ந்த ஆணையம் (Maldives Monetary Authority) | 2009 |
மியான்மர் | மியான்மர் மத்திய வங்கி (Central Bank of Myanmar) | 1977 |
நேபாளம் | நேபாள ராஷ்டிரீய வங்கி (Nepal Rastra Bank) | 1974 |
பாக்கித்தான் | பாக்கிஸ்தான் ஸ்டேட் வங்கி (State Bank of Pakistan) | 1974 |
இலங்கை | இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) | 1974 |
தீர்வுக்குரிய அடிப்படை பண அலகு
[தொகு]ஆசிய பண அலகு என்பது ஆசிய கணக்குத் தீர்வு ஒன்றியத்தின் கணக்குக்குரிய பொது அலகாகும். அது ஏசீயூ டாலர் மற்றும் ஏசீயூ யூரோ என்ற மதிப்பிலக்கங்களில் ஒரு அமெரிக்க டாலருக்கும், ஒரு யூரோவுக்கும் முறையே ஈடானதாகும்.[3] பணம் செலுத்தும் அனைத்துச் செயல்முறைகளிலும், ஆசிய பண அலகே இலக்க மதிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும். அத்தகைய செயல் முறைகளின் தீர்வுகள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால், ஏசீயூ டாலர் (ACU dollar) கணக்குகளின் வழிச் செயல்பாடுகளால் முடிவு செய்யப்படலாம்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்". asianclearingunion. பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்". இந்திய ரிசர்வு வங்கி. பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Definition of 'Asian Currency Unit - ACU'". investopedia. பார்க்கப்பட்ட நாள் 01 சனவரி 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)