உள்ளடக்கத்துக்குச் செல்

அல் காயிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்-காய்தா

அல் காய்தா
القاعدة
தலைவர்அய்மன் அல் ழவாகிரி
நிறுவனர்ஒசாமா பின் லாடன்
தொடக்கம்1988
உறுப்பினர்தெரியாது
பன்னாட்டு சார்புஆப்கானிஸ்தான், ஈராக், பாகிசுத்தான், சோமாலியா, ஏமன் மற்றும் உலகமுழுவதும்

அல்-காய்தா ஜிகாத் கொள்கையுடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஒன்றியமாகும். இவ்வியக்கம் 1989 ஆம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற்ற காலத்தில் ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் பாகிஸ்தானின் பெஷாவரில் 1988 ஆகத்து மாதத்துக்கும் 1989ஆம் ஆண்டுகடைசிக்கும் இடையில் தொடக்கப்பட்டதாகும். [1] முஸ்லிம் நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளைக் இல்லாதொழித்து முகமது நபியின் காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழான இசுலாமிய இராச்சியத்தை உருவாகுதல் அல்-காய்தாவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றகும்.உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் மீதும் ராணுவத்தின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

அல்-காய்தா பல உலக நாடுகளிலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை,[2] நேட்டோ,[3][4] ஐரோப்பிய ஒன்றியம்,[5] ஐக்கிய அமெரிக்க நாடுகள்,[6] அவுஸ்திரேலியா,[7] கனடா,[8] இசுரேல்,[9] யப்பான்,[10] the நெதர்லாந்து,[11] ஐக்கிய இராச்சியம்,[12] ரஷ்யா,[13] சுவீடன்,[14] சுவிட்சர்லாந்து[15] என்பவை முக்கியமானவையாகும். அல்-காய்தா உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் முக்கியமானவையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க அரசு அல் கைதாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நிதி

[தொகு]

தொடக்ககாலத்தில் பின் லாடன் தனது சொந்தப்பணத்தை இந்த இயக்கத்திற்காக செலவளித்துள்ளார். 2001-இல் ஆப்கான் நடவடிக்கைகளுக்குப் பின் இவ்வியக்கத்திற்கு வரும் நிதியின் அளவு முடக்கப்பட்டது. குவைத், சவுதி அரேபியா மற்றும் பிற இஸ்லாமிய நாடுகள் இவ்வியக்கத்திற்கு முக்கிய நன்கொடையாளர்களாக இருந்துள்ளனர்.ஹெராயின் போதைப் பொருள் வணிகம் மூலமும் அதிக அளவு நிதியைத் திரட்டியுள்ளனர். விக்கிலீக்ஸ் -ன் ஆவணங்களின் படி சவுதி அரேபியா சுணி இஸ்லாமியக் குழுக்களுக்கு அதிக நன்கொடை வழங்கியுள்ளது..[16] அல்-காய்தாவின் தனித்தியங்கும் சிறு குழுக்கள் காரணமாகத் தாக்குதல்களுக்கான சூத்திரதாரிகளை இனம்காண்பது கடினமாகும். அல்-காய்தாவுக்கு எதிரான அரசுகள் அல் கைடாவின் உலக நீட்சியை ஏற்றுக் கொள்கின்றன.[17] இருப்பினும் அல்-காய்தாவின் உறுப்பினர் தொகை அதிகரிக்கப்பட்டு காண்பிக்கப்படுவதாக கருத்தும் உண்டு.[18] என்பது அல் கைடாவுக்கு ஆதாரவாகவோ அல்லது அவர்களைப் பின்பற்றி அதே பாணியிலும் அல் கைடாவுடன் தொடர் பற்ற வேறு சிறு குழுக்கள் பயங்கரவாத நடவடிகைகளில் ஈடுபடுவதை "அல் கைடாயிசம்" எனலாம்.[19]

அல் கைதாவின் இரட்டை கோபுர தாக்குதல்கள்

[தொகு]
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் தரைமட்டமான உலக வணிக மையக் கட்டிடங்கள்

அல் கைதா அமைப்பு நடத்திய தாகுதல்களில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உலகை அதிர வைத்தது. நான்கு பயணி விமானங்களைக் கடத்திக் கொண்டு சென்று ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மிக உயரமான உலக வணிக மையத்தின் இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்கியதுடன் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழக்க காரணமாயினர். மேலும் வாசிங்டன் டி. சி.யில் உள்ள அமெரிக்காவின் இராணுவ அலுவலகமாக பெண்டகன் மாளிகையையும் ஒரு பயணி விமானத்தை கடத்திச் சென்று மோதி பெருஞ்சேதப்படுத்தினர்.[20] இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்கா நாட்டிற்கு பத்து பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டது.[21] இத்தாக்குதலுக்கு அல்கைதா அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.[22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அல்-கைடாவின் ஆரம்பமும் தொடர்புகளும்". BBC. 2004-07-20. பார்க்கப்பட்ட நாள் 2007-05-08. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. NATO. "Press Conference with NATO Secretary General, Lord Robertson". பார்க்கப்பட்ட நாள் 2006-10-23.
  3. NATO Library (2005). "AL QAEDA" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-06-11.
  4. ஐரோப்பிய ஆணையம் (2004-10-20). "COMMUNICATION FROM THE COMMISSION TO THE COUNCIL AND THE EUROPEAN PARLIAMENT". Archived from the original on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2007-06-11.
  5. United States Department of State. "Foreign Terrorist Organizations (FTOs)". Archived from the original on 2005-03-24. பார்க்கப்பட்ட நாள் 2006-07-03.
  6. Australian Government. "Listing of Terrorist Organisations". Archived from the original on 2014-02-04. பார்க்கப்பட்ட நாள் 2006-07-03.
  7. Public Safety and Emergency Preparedness Canada. "Entities list". Archived from the original on 2006-11-19. பார்க்கப்பட்ட நாள் 2006-07-03.
  8. Israel Ministry of Foreign Affairs (21 Mar 2006). "Summary of indictments against Al-Qaeda terrorists in Samaria". பார்க்கப்பட்ட நாள் 2007-06-10.
  9. Diplomatic Bluebook (2002). "B. TERRORIST ATTACKS IN THE UNITED STATES AND THE FIGHT AGAINST TERRORISM" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-06-11.
  10. General Intelligence and Security Service. "Annual Report 2004" (PDF). Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2007-06-11.
  11. United Kingdom Home Office. "Proscribed terrorist groups". Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2006-07-03.
  12. "Russia Outlaws 17 Terror Groups; Hamas, Hezbollah Not Included" இம் மூலத்தில் இருந்து 2006-11-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20061114154904/http://www.mosnews.com/news/2006/07/28/russiaterrorlist.shtml. 
  13. Ministry for Foreign Affairs Sweden (March June 2006). "Radical Islamist Movements in the Middle East" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2007-06-11. {{cite web}}: Check date values in: |date= (help)
  14. "Report on counter-terrorism submitted by Switzerland to the Security Council Committee established pursuant to resolution 1373 (2001)" (PDF). 20 December 2001. Archived from the original (PDF) on 2007-06-09. பார்க்கப்பட்ட நாள் 2007-06-11.
  15. "[[Cash Flow to Terrorists Evades U.S. Efforts]]". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2010-12-06. {{cite web}}: URL–wikilink conflict (help)
  16. "Al Qaeda forming new cells worldwide". CNN. 2002-07-31 இம் மூலத்தில் இருந்து 2007-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070117043156/http://archives.cnn.com/2002/US/07/31/al.qaeda.super.cells/. பார்த்த நாள்: 2007-01-09. 
  17. "[[The Power of Nightmares]]". பிபிசி. Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2007-02-02. {{cite web}}: URL–wikilink conflict (help)
  18. "US frustration over al-Qaeda 'resurgence'". பிபிசி. 2007-01-12. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6257013.stm. பார்த்த நாள்: 2007-01-12. 
  19. http://www.un.org/News/Press/docs/2001/SC7143.doc.htm
  20. http://www.iags.org/costof911.html
  21. http://www.cbc.ca/news/world/bin-laden-claims-responsibility-for-9-11-1.513654

வெளி இணைப்புகள்

[தொகு]
Media
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_காயிதா&oldid=3619008" இலிருந்து மீள்விக்கப்பட்டது