அபிராமி (நடிகை)
அபிராமி | |
---|---|
பிறப்பு | திவ்யா கோபிகுமார்[1] சூலை 26, 1983 திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி | நடிகை, தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–2004, 2014 - தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | ராகுல் பவனன் (2009 முதல் தற்போது வரை) |
அபிராமி (ⓘ) (திவ்யா கோபிகுமார், பிறப்பு: 26 ஜூலை 1983) இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.[2][3] இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களிப்புகள்
[தொகு]வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]சான்றுகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "அபிராமியுடன் ஒரு பேட்டி". thehindu.com. 2003-05-14. Archived from the original on 2016-01-24. பார்க்கப்பட்ட நாள் 2015-06-02.
- ↑ டைம்ஸ் ஆப் இந்தியாவுடனான அபிராமியின் பேட்டி (ஆங்கிலத்தில்)
- ↑ "വിവാഹം ആരെയും അറിയിക്കാതെ..." Mangalam.com. 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-06-02.
வெளி இணைப்புகள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2001 | வானவில் | பிரியா | |
மிடில் கிளாஸ் மாதவன் | அபிராமி | ||
தோஸ்த் | அனாமிகா | ||
சமுத்திரம் | இலட்சுமி | ||
சார்லி சாப்ளின் | மைதிலி ராமகிருஷ்ணன் | ||
2002 | கார்மேகம் | அபிராமி | |
சமஸ்தானம் | ஆயிசா | ||
2004 | விருமாண்டி | அண்ணலட்சுமி | |
2015 | 36 வயதினிலே | சுசன் |