விக்கிப்பீடியா:புரூவ் இட்
ProveIt! (புரூவ் இட்) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி.
-
ProveIt minimized.
-
The reference list.
-
Editing a reference.
-
Loading a reference via the Citoid service.
-
After a reference has been loaded via Citoid.
புரூவிட்(ProveIt) என்றால் என்ன?
[தொகு]ProveIt அல்லது புரூவிட் என்பது, விக்கிப்பீடியா திட்டத்தில் பயனர்கள் பயன்படுத்தும் நிரலியாகும். இது உசாத்துணை, குறிப்புகள், மேற்கோள்கள் போன்றவற்றை கட்டுரையுடன் இலகுவாக இணைக்க உதவும் கருவியாகும்.
இதனுடைய திட்டப்பக்கத்தினை பார்க்க: http://proveit.cc.gatech.edu/, இதனுடைய செயல்பாட்டினை நேரடியாக பார்வையிட http://proveit.cc.gatech.edu/demo.
பங்களிப்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தொடர்புகொள்க தினேஷ்குமார் பொன்னுசாமி.
எவ்வாறு நிறுவுவது?
[தொகு]தமிழ் விக்கிப்பீடியா
[தொகு]- முதலில் உங்களுடைய கணக்கில் புகுபதிகை செய்யவும்.
- உங்களுடைய விருப்பத்தேர்வு பக்கத்தில் உள்ள தொகுப்புதவிக் கருவிகளுக்குச் செல்லவும்.
- அங்குள்ள ProveIt! (புரூவ் இட்) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி என்பதை தேர்வு செய்யவும்.
- பிறகு பக்கத்தின் கீழுள்ள சேமி பொத்தானை அழுத்தவும்.
முடிந்தது! வெற்றிகரமாக நீங்கள் புரூவ் இட் கருவியை உங்களுடைய பயனர் பக்கத்தோடு இணைத்துவிட்டீர்கள், நீங்கள் இனி இக்கருவையினை பயன்படுத்தத் தொடங்கலாம். ஏதேனும் ஒரு பக்கத்தில் நீங்கள் இப்போது தொகு பொத்தானை சொடுக்கவும். பிறகு புரூவ் இட் கருவியில் உள்ள "மேற்கோள்கள்" அல்லது "ஒரு மேற்கோளைச் சேர்க்கவும்" பொத்தானை சொடுக்கினால் புரூவ் இட் கருவி பெரிதாக்கப்படும்.
உதவிகளும் பிணக்குகளும்
[தொகு]புரூவிட் உதவிகளுக்கு, பார்க்க http://proveit.cc.gatech.edu/users/guide மற்றும் http://proveit.cc.gatech.edu/users/tutorials.
உங்களுக்கு ஏதேனும் பிணக்கு ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் வழு உருவாகினாலோ இவ்விணைப்பை தொடர்பு கொள்க - http://proveit.cc.gatech.edu/users/bugreport அல்லது இப்பயனரின் பேச்சு பக்கத்தினை தொடர்பு கொள்ளவும். புரூவ் இட் பயனர் பக்கம். உங்களுடைய பின்னூட்டங்களையும் இங்கு தெரிவிக்கலாம்.
பயன்களும் சிறப்பம்சங்களும்
[தொகு]இலகுவாக மேற்கோள்களை உருவாக்க, தொகுக்க மற்றும் பார்க்க
[தொகு]அதிகமாக பயன்படுத்தப்படும் முறையினை பின்தொடருங்கள்
[தொகு]- விக்கிப்பீடியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் முறையான, Cite உள்ளிட்டவைகளை பயன்படுத்துங்கள்.
- இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், புரூவ் இட்டானது, பெரும்பாலான Citation Style (ஆங்கில மொழியில்) என்னும் குறிப்புகளை இணைக்கும் வார்ப்புருக்களை உள்ளடக்கியது.
- இது அனைத்து வகையான உசாத்துணைகளை உள்ளீடு செய்ய உதவுகிறது, ஏற்கனவே உள்ளவற்றை பார்க்கவும், தொகுக்கவும் கூட வழிவகை செய்கிறது.
தேவையான சமயம் மட்டும்
[தொகு]- தொகுத்தல் பணியின் போது மட்டுமே, இது தெரியும். படிக்கும் போது இக்கருவி தெரியாது.
- ஒரு சொடுக்கில் இக்கருவியை காட்டவோ, மறைக்கவோ முடியும்.
உடனடியாக உசாத்துணைகளை கண்டறியலாம்
[தொகு]- அக்கட்டுரையில் அல்லது அப்பகுதியில் உள்ள அனைத்து குறிப்புகள், மேற்கோள்கள், உசாத்துணைகள் அனைத்தும் ஒரே பட்டியலில் காட்டப்படும்
- உசாத்துணைகளின் தலைப்பு மற்றும் சின்னங்களை இலகுவாக பார்க்க முடியும்
- ஒரு உசாத்துணையின் மீது சொடுக்குதலின் மூலமாக இவ்விணைப்பை தொகுத்தல் பெட்டியில் பார்வையிட முடியும்.
வாக்கிய அமைப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள தேவையில்லை
[தொகு]- உசாத்துணைகளை சேர்க்கவும், தொகுக்கவும் காட்சி இடைமுகப்பு உள்ளது
- விருப்பமானவை மற்றும் கட்டாயமானவைகளை காட்டுகின்றது
- புலங்களை ஒரே சொடுக்கில் சேர்க்கவும் நீக்கவும் வழிவகை செய்கிறது
பல்வேறு மேற்கோள்கள் இணைத்தல்
[தொகு]- காட்சி இடைமுகப்பு இருப்பதால், பல்வேறு மேற்கோள்கள்களை ஒரே தலைப்பில் இணைத்தல் பணி வெகு எளிதாகிறது
- மேற்கோள்களினை எங்கு வேண்டுமானாலும் ஒரே சொடுக்கில் இணைக்கமுடிகிறது
சரியான மேற்கோள்கள்
[தொகு]- நேர்த்தியான, சரியான நிரலிகளை உருவாக்குகிறது
- தொடர்பிழந்த அல்லது செயல்பாடற்ற இணைப்புகளை சிவப்பு நிறத்தில் காட்டுகிறது
இலகுவாக நிறுவ, புதுப்பிக்க மற்றும் பயன்படுத்த புரூவ் இட்
[தொகு]கட்டற்ற திறல்மூல நிரலி
[தொகு]- விக்கிப்பீடியாவைப் போன்றது
- கட்டற்ற சேவை
- திறல்மூல சமூகத்தால் தொடர்ந்து மேம்படுத்தப்படும் கருவி -- நீங்களும் மேம்படுத்தலாம்
- உரிமங்கள்: குனூ – 2 உரிமத்தின் கீழ் வெளியடப்பட்டுள்ளது, விக்கிப்பீடியாவின் கிரியேட்டிவ் காமன்சு – 3.0 (CC-BY-SA-3.0), மற்றும் விக்கிப்பீடியா க்னூ கட்டற்ற ஆவண உரிமம் (GFDL).
விரைவு நிறுவல்
[தொகு]- உங்களுடைய விருப்பத்தேர்வில், புரூவ் இட் (ProveIt) கருவியை செயல்படுத்துங்கள்! (மேலே பார்க்க)
இயங்குதளமும் உலாவிகளும்
[தொகு]- அனைத்து உலாவிகளும்: இன்டர்நெட் எக்சுபுளோரர், பயர்பாக்சு, கூகிள் குரோம், சபாரி, ஒப்பேரா, இன்னும் பல...
- உங்களுடைய பயனர் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், கணினி பாகுபாடின்றி நீங்கள் உங்கள் விக்கிப்பீடியா கணக்கில் புகுபதிகை செய்தவுடன் இதனை பயன்படுத்தலாம் -- மறுபடியும் நிறுவத்தேவையில்லை
புதுப்பித்தல் தானியங்கி
[தொகு]- புதித்தல், வழுக்களை சரிசெய்தல் போன்றவை தானாகவே நடைபெறும்! -- நீங்கள் எதுவும் செய்யத்தேவை இல்லை
பயனர் பெட்டிகள்
[தொகு]நீங்கள் இக்கருவியை பயன்படுத்துவது குறித்து மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பினால், பின் வரும் பயனர் பெட்டியை உங்கள் பயனர் பக்கத்துடன் இணைக்கலாம்.
இதனை இணைக்க, {{}} இவ்வடைப்புக் குறிகளுக்குள் Prove_IT என்று தட்டச்சு செய்யவும்.
குழு
[தொகு]புரூவ் இட்டானது ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள குர்ட் லூதர் (MaxVeers), மேத்தீவ் (Superm401), டெர்ரிஸ் ஜான்சன், மற்றும் ஏமி புருக்மன் உள்ளிட்ட விக்கிப்பீடியர்களால் உருவாக்கப்பட்ட கருவியாகும். இது கட்டற்ற திரல்மூல திட்டமாதலால், பங்களிக்க விருப்பமுள்ள அனைவரையும் இத்திட்டம் வரவேற்கிறது. இதனைத் துவங்க புரூவ் இட்டின் நகலான இதிலிருந்து ஆரம்பிக்கலாம். http://code.google.com/p/proveit-js/source/clones இதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் ஏதேனும் மாற்றம் செய்திருந்து அதனை ஆதார மூலத்துடன் (main version) இணைக்க விரும்பினால் அல்லது வழுக்களை புகாரளிக்க மேற்கூரிய ஏதேனும் ஒரு பயனர் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும்.
அடிப்படை குழுவுடன், இன்ன பிறரும் இக்கருவி உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளனர், அவை:
- மொழிபெயர்ப்பாளர்கள்
- ஓல்லி(Finnish)
- மீடியாவிக்கி, wikibits.js உள்ளிட்டவை.
- விக்கிப்பீடியா, jQueryயின் பதிப்பு.
- மார்க் ஜேம்சின் பட்டுச் சின்னங்கள், கிரியேட்டிவ் காமன்சு – 3.0 உரிமம்.
- jQuery UI, loaded via Google Libraries API.
- Public domain code from QuirksMode, by Peter-Paul Koch, particularly a modified version of his findPos function.
- textSelection API from Usability Initiative's plugins.combined.js.
- Cross-browser split, by Steven Levithan, used under the MIT license.