2019 றக்பி உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2019 றக்பி உலகக்கிண்ணம்
2019 Rugby World Cup
போட்டி விபரங்கள்
நடத்தும் நாடு சப்பான்
காலம்20 செப்டம்பர் – 2 நவம்பர்
நாடுகளின் எண்ணிக்கை20
இறுதி நிலவரம்
வாகையாளர்கள் Gold medal blank.svg தென்னாப்பிரிக்கா (3-ஆம் title)
இரண்டாம் இடம் Silver medal blank.svg இங்கிலாந்து
மூன்றாம் இடம் Bronze medal blank.svg நியூசிலாந்து
போட்டி புள்ளிவிவரங்கள்
விளையாடிய ஆட்டங்கள்45
பார்வையாளர்கள்17,04,443 (37,877 / ஆட்டம்)
Tries scored295 (average 6.556 per match)
அதிக புள்ளிகள் பெற்றோர்தென்னாப்பிரிக்கா ஆன்ட்ரே பொல்லார்டு (69)
Most triesவேல்சு ஜோசு அடம்சு (7)
2015
2023 →

2019 றக்பி உலகக்கிண்ணம் (2019 Rugby World Cup) உலக ரக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாக ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணப் போட்டியாகும். இது சப்பானில் 2019 செப்டெம்பர் 20 முதல் நவம்பர் 2 வரை 12 அரங்குகளில் நடத்தப்பட்டது. இவ் உலகக்கிண்ணமானது ஆசியக் கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது இறக்பி உலகக்கிண்ணம் ஆகும். 20 அணிகள் பங்குபற்றிய இந்த உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடத்தும் சப்பான் மற்றும் உருசிய அணிகள் மோதின. இவ் ஆரம்பப் போட்டி சப்பானியத் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றது. சப்பான் முதல் தடவையாக உலகக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.[1][2] இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை சப்பான் படைத்தது.[3] உலகக்கிண்ணத்தின் முதல் ட்ரையினை ரஷ்யாவின் கிரில் கொலொனிட்ஸ்கையும் முதல் ஹட்ரிக் ட்ரையினை சப்பானின் கொடாரோ மட்சுஷிமாவும் பதிவு செய்தனர்.

ஹாகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.[4] இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.

நடப்பு வாகையாளரான நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூசிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் வேல்சு அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.[5]

உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தை சேர்ந்த தென்னாப்பிரிக்காவும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா என்பவரின் தலைமையில் அவ்வணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி வாகைப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.[6][7] இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.[8]

தென்னாப்பிரிக்கா இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல், இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் பன்னாட்டு சர்வதேச றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா தனதாக்கியது.

2019 உலகக்கிண்ணப் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட றக்பி உலகக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.[9]

அரங்குகள்[தொகு]

யோக்கோகாமா சோஃபு ஒயிட்டா புக்குரோய்
பன்னாட்டு அரங்கு, யோக்கோகாமா டோக்கியோ அரங்கு ஒயிட்டா அரங்கு சுசுவோக்கா அரங்கு எக்கோப்பா
இருக்கைகள்: 72,327 இருக்கைகள்: 49,970 இருக்கைகள்: 40,000 இருக்கைகள்: 50,889
International Stadium Yokohama-1.jpg Ajinomoto Stadium 2018-13.jpg Ooita Stadium20090514.jpg Ecopa030304.jpg
கோபே
2019 றக்பி உலகக்கிண்ணம் is located in யப்பான்
குமமோட்டோ அரங்கு
குமமோட்டோ அரங்கு
ஒயிட்டா அரங்கு
ஒயிட்டா அரங்கு
புக்குவோக்கா அக்கட்டனமோரி அரங்கு
புக்குவோக்கா அக்கட்டனமோரி அரங்கு
2019 றக்பி உலகக்கிண்ணம்
யோக்கோகாமா பன்னாட்டு அரங்கு
யோக்கோகாமா பன்னாட்டு அரங்கு
சிசுவோக்கா அரங்கு, எக்கோப்பா
சிசுவோக்கா அரங்கு, எக்கோப்பா
அனசோனோ ரக்பி அரங்கு
அனசோனோ ரக்பி அரங்கு
டொயோட்டா அரங்கு நகர்
டொயோட்டா அரங்கு நகர்
சப்போரோ அரங்கு
சப்போரோ அரங்கு
2019 றக்பி உலகக்கிண்ணம்
குமகாயா ரக்பி அரங்கு
குமகாயா ரக்பி அரங்கு
கமைசி நினைவு அரங்கு
கமைசி நினைவு அரங்கு
டோக்கியோ அரங்கு
டோக்கியோ அரங்கு
கோபே மிசாக்கி அரங்கு
கோபே மிசாக்கி அரங்கு
2019 ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும் 12 அரங்குகளின் அமைவிடங்கள்
இகாசியொசாக்கா
கோபே மிசாக்கி அரங்கு அனசோனோ ரக்பி அரங்கு
இருக்கைகள்: 30,132 இருக்கைகள்: 24,100
Inside View of Kobe Wing Stadium.jpg Higashi Osaka Hanazono Rugby Stadium ground.jpg
டொயோட்டா குமகாயா
டொயோட்டா அரங்கு நகர் குமகாயா ரக்பி அரங்கு
இருக்கைகள்: 45,000 இருக்கைகள்: 24,000
Nagoya Grampus game in Toyota Stadium 100814.JPG Kumagayarugby-07.JPG
புக்குவோக்கா சப்போரோ குமமோட்டோ கமைசி
புக்குவோக்கா அக்கடனமோரி அரங்கு சப்போரோ அரங்கு குமமோட்டோ அரங்கு கமைசி நினைவு அரங்கு
இருக்கைகள்: 20,049 இருக்கைகள்: 41,410 இருக்கைகள்: 32,000 இருக்கைகள்: 16,020
レベルファイブスタジアム3.JPG Sapporo Dome 001.jpeg Kumamoto Stadium 2015.jpg 釜石鵜住居復興スタジアム.jpg

குழுநிலை ஆட்டங்கள்[தொகு]

குழு ஏ[தொகு]

20 செப்டம்பர் 2019  சப்பான் 30–10  உருசியா
22 செப்டம்பர் 2019  அயர்லாந்து 27–3  இசுக்காட்லாந்து
24 செப்டம்பர் 2019  உருசியா 9–34  சமோவா
28 செப்டம்பர் 2019  சப்பான் 19–12  அயர்லாந்து
30 செப்டம்பர் 2019  இசுக்காட்லாந்து 34–0  சமோவா
3 அக்டோபர் 2019  அயர்லாந்து 38–19  சமோவா
5 அக்டோபர் 2019  சப்பான் 38–19  சமோவா
9 அக்டோபர் 2019  இசுக்காட்லாந்து 61–0  உருசியா
12 அக்டோபர் 2019  அயர்லாந்து 47–5  சமோவா
13 அக்டோபர் 2019  சப்பான் 28–21  இசுக்காட்லாந்து

குழு பி[தொகு]

21 செப்டம்பர் 2019  நியூசிலாந்து 23–13  தென்னாப்பிரிக்கா
22 செப்டம்பர் 2019  இத்தாலி 47–22  நமீபியா
26 செப்டம்பர் 2019  இத்தாலி 48–7  கனடா
28 செப்டம்பர் 2019  தென்னாப்பிரிக்கா 57–3  நமீபியா
2 அக்டோபர் 2019  நியூசிலாந்து 63–0  கனடா
4 அக்டோபர் 2019  தென்னாப்பிரிக்கா 49–3  இத்தாலி
6 அக்டோபர் 2019  நியூசிலாந்து 71–9  நமீபியா
8 அக்டோபர் 2019  தென்னாப்பிரிக்கா 66–7  கனடா
12 அக்டோபர் 2019  நியூசிலாந்து 0–0  இத்தாலி
13 அக்டோபர் 2019  நமீபியா 0-0  கனடா

குழு சி[தொகு]

21 செப்டம்பர் 2019  பிரான்சு 23–21  அர்கெந்தீனா
22 செப்டம்பர் 2019  இங்கிலாந்து 35–3  தொங்கா
26 செப்டம்பர் 2019  இங்கிலாந்து 45–7  ஐக்கிய அமெரிக்கா
28 செப்டம்பர் 2019  அர்கெந்தீனா 28–12  தொங்கா
2 அக்டோபர் 2019  பிரான்சு 33–9  ஐக்கிய அமெரிக்கா
5 அக்டோபர் 2019  இங்கிலாந்து 39–10  அர்கெந்தீனா
6 அக்டோபர் 2019  பிரான்சு 23–21  தொங்கா
9 அக்டோபர் 2019  அர்கெந்தீனா 47–17  ஐக்கிய அமெரிக்கா
12 அக்டோபர் 2019  இங்கிலாந்து 0–0  பிரான்சு
13 அக்டோபர் 2019  ஐக்கிய அமெரிக்கா 19–31  தொங்கா

குழு டி[தொகு]

21 செப்டம்பர் 2019  ஆத்திரேலியா 39–21  பிஜி
23 செப்டம்பர் 2019  வேல்சு 43–14  சியார்சியா
25 செப்டம்பர் 2019  பிஜி 27–30  உருகுவை
29 செப்டம்பர் 2019  சியார்சியா 33–7  உருகுவை
29 செப்டம்பர் 2019  ஆத்திரேலியா 25–29  வேல்சு
3 அக்டோபர் 2019  சியார்சியா 10–45  பிஜி
5 அக்டோபர் 2019  ஆத்திரேலியா 35–13  உருகுவை
9 அக்டோபர் 2019  வேல்சு 29–17  பிஜி
11 அக்டோபர் 2019  ஆத்திரேலியா 27–8  சியார்சியா
13 அக்டோபர் 2019  வேல்சு 35–13  உருகுவை

ஆட்டமிழக்கும் நிலை[தொகு]

 
காலிறுதிகள்அரையிறுதிகள்இறுதிப்போட்டி
 
          
 
19 அக்டோபர் –
 
 
 இங்கிலாந்து40
 
26 அக்டோபர் –
 
 ஆத்திரேலியா16
 
 இங்கிலாந்து19
 
19 அக்டோபர் –
 
 நியூசிலாந்து7
 
 நியூசிலாந்து46
 
2 நவம்பர் –
 
 அயர்லாந்து14
 
 இங்கிலாந்து12
 
20 அக்டோபர் –
 
 தென்னாப்பிரிக்கா32
 
 வேல்சு20
 
27 அக்டோபர் –
 
 பிரான்சு19
 
 வேல்சு16
 
20 அக்டோபர் –
 
 தென்னாப்பிரிக்கா19 மூன்றாம் இடம்
 
 சப்பான்3
 
1 நவம்பர் –
 
 தென்னாப்பிரிக்கா26
 
 நியூசிலாந்து40
 
 
 வேல்சு17
 

இறுதிப் போட்டி[தொகு]

இங்கிலாந்து அணி நான்காவது தடவையாகவும் (1991, 2003, 2007, 2019) தென்னாபிரிக்க அணி மூன்றாவது தடவையாகவும் (1995, 2007, 2019) இறுதிப் போட்டிக்கு நுழைந்தன. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது. தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தி வாகையாளரானது. முதல் தடவையாக இந்த இறுதிப் போட்டியில் தான் தென்னாபிரிக்கா ட்ரை ஒன்றினை பதிவு செய்தது. இதற்கு முன்பு 1995, 2007 களில் தென்னாபிரிக்கா பெனால்ட்டிகளின் உதவியுடனேயே வென்றிருந்தது.

2 நவம்பர் 2019  தென்னாப்பிரிக்கா 32–12  இங்கிலாந்து

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2019_றக்பி_உலகக்கிண்ணம்&oldid=2868869" இருந்து மீள்விக்கப்பட்டது