உள்ளடக்கத்துக்குச் செல்

1910 கியூப புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1910 கியூப புயல்
Category 4 major hurricane (SSHWS/NWS)
அக்டோபர் 10 இல் புயல்
தொடக்கம்அக்டோபர் 9, 1910
மறைவுஅக்டோபர் 23, 1910
உயர் காற்று1-நிமிட நீடிப்பு: 150 mph (240 கிமீ/ம)
தாழ் அமுக்கம்924 பார் (hPa); 27.29 inHg
இறப்புகள்≥113
சேதம்$−19,99,99,900 (1910 US$)
பாதிப்புப் பகுதிகள்கூபா, புளோரிடா
1910 அத்திலாந்திக் புயல் காலம்-இன் ஒரு பகுதி

1910 கியூப புயல் (1910 Cuba hurricane) அல்லது ஐந்து நாள் புயல் (Cyclone of the Five Days) எனப் பிரபலமாக அறியப்பட்ட மிகவும் அழிவுகரமான மற்றும் எதிர்பார்க்கப்படாத வெப்ப மண்டலப் புயல் 1910ஆம் ஆண்டு கியூபாவையும் ஐக்கிய அமெரிக்காவையும் தாக்கியது. இப்புயல் உருவாகியது அக்டோபர் 9ஆம் திகதி தெற்கு கரிபியனிலும் உக்கிரமடைந்து பின் வடமேற்கு திசையாக சென்று அக்டோபர் 12ஆம் நாள் பலத்த சூறாவளியாக உருமாறியது. மேற்கு கியூபாவினை கடந்த பின் சபீர் சிம்சன் அளவுகோலுக்கு அமைய தரம் நான்கு அதாவது அதி உக்கிர நிலையை அக்டோபர் 12ஆம் நாள் எய்தியது. அது மறுபடியும் எதிர்திசையில் முன்னேறி மறுபடியும் கியூபாவினை தாக்கியது. அதன் பின் புளோரிடாவையும் கேப் ரொமானோவினையும் நெருங்கியது. அந்த மாநிலத்தினை கடந்து ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியினை பற்றிக்கொண்டு கடலினை நோக்கி வெளியேறியது.

இதன் அசாதாரமான சுழற்சி இதனை இரு வேறு புயல்கள் ஒன்றர வேகமாக தரையை தாக்கியது என முதல்கட்ட அறிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். பலத்த விவாதத்திற்கு பின்னர் இது ஒரு புயல் என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்புயலின் நிகழ்வு பகுப்பாய்வானது இதன் வானிலை அமைப்புகளின் இதேபோன்ற பாதைகளினை அறிந்துகொள்ள மிக உதவியாக இருந்தது.

இந்த சூறாவளியானது கியூப வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக பதிவானது. இவ்வனர்த்தமானது பாரிய சேதங்களை உருவாக்கியதுடன் பல்லாயிரக்கணக்கானவர்களின் வீடுகளையும் உடைமைகளையும் பறித்தது. புளோரிடாவிலும் இதன் தாக்கம் பாரிய அளவிலேயே காணப்பட்டது. வெள்ளப்பெருக்குகளே பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த புயல் ஏற்படுத்திய மொத்த சேதம் துல்லியமாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக கூபாவின் அவானாவில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் புளோரிடாவில் 250 000 அமெரிக்க டொலர்களும் சேதம் ஏற்பட்டதாகவும் சுமார் 100 பேர் கியூபாவில் மட்டும் இறந்ததாக கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன.

வானிலை வரலாறு

[தொகு]

அக்டோபர் 9ஆம் நாள் ஒரு வகையான வெப்பமண்டல தாழமுக்கம் கரிபியன் கடலினை மையம் கொள்ள ஆரம்பித்தது. அதன் ஆரம்பப்புள்ளி பனாமாவிற்கு வடக்கில் ஆகும். அது வடமேற்கு நோக்கி நகருகையில் வலுப்பெற்றது. அக்டோபர் 11ஆம் நாள் அது வெப்பமண்டல புயலாகவும் அக்டோபர் 12ஆம் நாள் புயலாகவும் மாற்றமடைந்தது.[1]. அடுத்த நாளே அது தென்மேற்கு கியூபாவை எட்டியது.[2] ஒரு குறுகிய நேரத்திற்கு சபீர்-சிம்சன் அளவுகோலில் தரம் 3 என அளவு கோடிடப்பட்டது. பின்பு புயலானது மேற்கு கியூபாவினை தாக்கி பின் கடந்து சென்று மெக்சிகோ வளைகுடாவை அடைந்து தனது சீற்றத்தைக் குறைத்துக்கொண்டது.[1]

பின்பு புயலானது ஒரு உயரமுக்கம் காரணமாக வடக்கு நோக்கி இடம்மாறியது. மெக்ஸிகோ வளைகுடாவின் வெப்ப நீர் காரணமாக புயல் விரைவில் பலமாக மாற ஆரம்பித்தது. பின்பு அது ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிலைகொண்டது.[3] அக்டோபர் 16ஆம் நாள், அது தனது உச்ச கட்ட உக்கிரத்தை அடைந்தது. இந்த நிலையில் காற்றின் வேகமானது மணிக்கு 240 கிலோமீட்டர்கள் ஆக இருந்தது[1]. பின்பு சூறாவளியானது வடகிழக்கு பக்கம் திரும்பி மீண்டும் மேற்கு கியூபாவினை தாக்கியது. பின்பு அது புளோரிடா நோக்கி அக்டோபர் 17[1] ஆம் நாள் நகர்ந்தது. அதன் பின் கேப் ரொமானோவினை தாக்கியதும் வடக்கு நோக்கி நகர்ந்தது. தரையில் சூறாவளியின் சீற்றம் நாளுக்கு நாள் குறைந்து சென்றது. ப்ளோரிடாவினை தாண்டிய பின்னர் அது வடகிழக்கு பக்கம் திரும்பி அத்திலாந்திக் பெருங்கடலினுள்.[3] உட்புகுந்தது. இந்த சூறாவளியானது அக்டோபர் 23ஆம் நாள் அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் அடங்கி முற்றுப்பெற்றது.[3]

இந்த புயலானது ஒரு அசாதாரணமான போக்கினை கொண்டிருந்தது. முதலில் இரு வேறு சூறாவளிகளாக நோக்கப்பட்டது[4]. ஏனெனில் இந்த புயல் மெக்சிகோ வளைகுடாவில்[3] ஏற்படுத்திய வளைவுகளாகும். ஒரு பத்திரிக்கையின் பதிவின் படி முதலாவது புயலானது மெக்சிகோ வளைகுடா பகுதியில் அடங்கிவிட்டதாகவும், இரண்டாவதே புளோரிடாவினை[2] தாக்கியதாகவும் கூறப்பட்டு இருந்தது. இப்புயலின் பாதை விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பிறகு இது ஒரு புயலே என கண்டறியப்பட்டது.[3]

தாக்கம்

[தொகு]

அக்டோபர் 15ஆம் நாள் கீ வெஸ்ட் பகுதியில் 800 கிலோமீட்டரிற்கு உட்பட்ட அனைத்து கப்பல்கள்கட்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிறைய கப்பல்கள் துறைமுகங்களிலேயே[5] தங்கவைக்கப்பட்டன. அவைகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.[2]

கியூபா

[தொகு]
அக்டோபர் 20 இல் புயலின் காலநிலை வரைபடம்

இந்த புயலானது கியூபாவினை பலத்த சேதத்துக்குளாக்கியது. கியூபாவினை தாக்கிய மிகவும் மோசமான வெப்பமண்டல புயலாகவும் இது கருதப்படுகிறது. பலத்த காற்று மற்றும் கடுமையான மழை பெருவெள்ளத்தையும், வாணிப பயிர்களையும்[2] (முக்கியமாக புகையிலை)[6] மற்றும் பண்ணைகளையும் நாசமாக்கின. கசில்டா [7] உட்பட பல்வேறு நகரங்களை[8] இப்புயல் பாதிப்புக்குள்ளாக்கியது. படபனோ நகரம் முற்றாக தண்ணீரில் மூழ்கியது. இப்புயலின் காரணமாக பல்வேறு நகரங்களுக்கிடையிலான[9] தொலைத்தொடர்பு சேதமடைந்தது. அதிகூடிய மரணங்களும் இழப்புகளும் பினர் டெல் ரியோ மாகாணத்தில் பதியப்பட்டது.[10]

நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தி பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. “கியூபாவின் வரலாற்றிலேயே நடந்த மிகவும் கோரமான அனர்த்தம்”[11] என்று. ஆயிரக்கணக்கான உழவர்கள், தொழிலாளர்கள், மற்றும் பலர் தமது உடைமைகளையும் வதிவிடங்களையும் இழந்தனர். நாட்டின் தலை நகரமான ஹவானாவும் பாரிய சேதத்திற்கு உள்ளானது. கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த பல கப்பல்கள் தாங்கள் கொண்ட பல பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் மூழ்கின. கப்பல்துறை மேடையில் களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் யாவும் சேதமாகின.[12] உயர அலைகள் தரையை பிளந்து பெருவெள்ளத்தினை உண்டு பண்ணியது. பல படகுகள் புயலினால் நாசமாக்கப்பட்டன. உயர அலைகள் [13] ஹவானாவின் [14][15] சுமார் 2.5 சதுர கிலோமீட்டர் கடற்கரை நிலங்களில் வெள்ளத்தை உண்டு பண்ணின.[11]

பெரும்பாலானோர் நிலச்சரிவு காரணமாகவே உயிரிழந்தனர். ஹவானாவில் மட்டும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.[16][17] சில செய்திகள் சுமார் 700 பேர் உயிரிழந்ததாக கூறியிருந்தன.[18] மொத்த சேதம் பல மில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிக்கப்பட்டன. ஹவானாவில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சேதம் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டது.[11]

ஹோலிஸ்வூட்

[தொகு]

ஹோலிஸ்வூட் என்ற கப்பல் மெக்சிகோ வளைகுடாவின் மத்தியில் புயலில் சிக்குண்டது. அது நியூ ஓர்லியன்ஸ் துறைமுகத்தை அக்டோபர் 1ஆம் நாள் சைப்ரஸ் மரங்களை கொண்டு சென்றது. கப்பல் குழு புயலோடு பல நாட்கள் போராடின.[19] ஹோலிஸ்வூட் அதன் பாதையை விட்டு விலகி பல மைல்களுக்கு அப்பால் சென்று பலத்த சேதமுற்றது[20] என அதன் உரிமையாளர், பால் மங்கோல்ட் கூறி இருந்தார்:[19]

அக்டோபர் 12ஆம் நாள், நாங்கள் முதல்முதலாக புயலினை[...] உணரத்தொடங்கினோம். சனிக்கிழமை அதிகாலை புயலின் முழு வீரியத்தை உணர்ந்தோம். [...] காற்றின் சுழற்சி சில சமயங்களில் நூறு-மைல்கள் வீதத்தில் இருந்தது. கடலின் அனைத்து திசைகளிலும் இருந்து புயலின் தாக்கம் இருந்தது. ஆனாலும் வலப்பக்கமே இதன் தாக்கம் அதிகமாக இருந்தது.

ஹரல்ட் என்றழைக்கப்பட்ட ஒரு நீராவிக்கப்பலே ஹோலிஸ்வூட் கப்பல் குழுவை மீட்டெடுத்தது. ஆனாலும் கப்பலின் கேப்டன் ஈ. ஈ. வால்ஸ் ஹோலிஸ்வூட்டிலேயே இருந்தார்.[19] அதற்கு காரணம் ஹோலிஸ்வூட் கடுமையாக சேதமடைந்திருந்ததே. ஆனாலும் குழு அவரது முடிவுக்கு இணங்கவில்லை. ஏனெனில் ஹோலிஸ்வூட் ஆனது ஆகக்கூடியது ஐந்து மணித்தியாலங்கள் மட்டுமே மிதக்கும் நிலையில் இருந்தது. குழு கரையேறியதும் பார்க்வூட் என்ற மற்றொரு கப்பல் வால்ஸ் ஐ மீட்க அக்டோபர் 20ஆம் நாள் சென்றது. வால்ஸ் உணவும் நீரும் இன்றி இறந்திருப்பார் என கருதிய போதும், சுயநினைவு அற்ற நிலையில் மீட்கப்பட்டார்.[20] மிகுந்த களைப்பின் காரணமாக அவர் எழுந்த பின் சற்று பிதற்றும் நிலையில் இருந்ததாக கூறப்பட்டது. ஹோலிஸ்வூட்டினை கரைக்கு கொண்டுவருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் பார்க்வூட் கப்பலின் உதவியுடன் ஹோலிஸ்வூட் கரை தொட்டது.[20]

புளோரிடா

[தொகு]

புளோரிடாவில் உள்ள கீ வெஸ்ட் பகுதியில் காற்றின் வேகம் சுமார் மணிக்கு 110 மைல்களாக (180 கிலோமீட்டர்) காணப்பட்டது. பெரும்பாலான கப்பல் துறைகள் நாசமாகின[21]. ப்ளோரிடா கீ பகுதியில் மட்டுமே $250 000 (தற்போது அண்ணளவாக $5.7 மில்லியன்கள்) சேதம் ஏற்பட்டதாகவும், கடற்கரையை அண்மித்த வீடுகள் அனைத்தும் சேதமுற்றிருந்தன[2]. காற்றின் வீரியம் டம்பா விரிகுடாவின் தண்ணீரை வெளியேற்றியது. உயர அலைகள் தரையை நோக்கி விரைய, பெரும்பாலானோர் தமது உயிர்களை காப்பாற்ற மரங்களை பற்றிக்கொள்ள வேண்டி இருந்தது.[21] சில எலுமிச்சைத்தோட்டங்களும் (கிச்சிலி) சேதமடைந்தன[2]. காற்றானது வீடுகளின் கூரைகளையும் பீய்த்துக்கொண்டும் கட்டிடங்களினை அத்திவாரம் வரை ஆடுவித்தது[22].

புந்தா கோர்டா பகுதியை சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தது மட்டுமல்லாது சில கியூபா படகுகளும் சின்னாபின்னமாகின. அதற்கு அண்மையில் பிள்ளையுடன் ஒரு மனிதர் கடலில் மூழ்கினார். மற்றொருவர் வெள்ள நதியொன்றை கடக்க முற்பட்டதில் நதியோடு அடித்துச்செல்லப்பட்டார்[2]. ஒரு பிரெஞ்சு நீராவிக்கப்பல் லூசியான் நிலத்துடன் மோதுண்டது. தெய்வாதீனமாக அதில் இருந்த 600 பயணிகளும் மீட்கப்பட்டு வேறு கப்பலுக்கு மாற்றப்பட்டனர்[21].

இந்த புயலானது ஜுபிடர் பகுதியில் பல்வேறு பைன் மரங்களை வேரோடு சாய்த்தது. லெமன் நகரத்தை சார்ந்த ஒருவரின் மேல் மரமொன்று வீழ்ந்ததில் உயிரிழந்தார். கிழக்கு ப்ளோரிடாவிலேயே புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கிழக்கு ப்ளோரிடாவின் தொடருந்துத் தண்டவாளங்களின் ஒரு பகுதி முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டது. பொகா ரேடன் எனுமிடத்தில் இருந்த ஒரு அமெரிக்க கப்பலும் தரையோடு மோதியதில் மூவர் உயிரிழக்க கப்பல் குழு அடுத்த 12 மணிநேரம் கப்பலுக்குள் தத்தளித்தது.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Atlantic hurricane research division (2010). "Atlantic hurricane database (HURDAT) "best track" (1851–2008)". National Oceanic and Atmospheric Administrations. பார்க்கப்பட்ட நாள் December 24, 2009.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Edward Bowie (1910). "Monthly Weather Review" (PDF). National Hurricane Center. பார்க்கப்பட்ட நாள் December 24, 2009.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Barnes, p. 93
  4. {{cite news|author=|title=The West Indian Hurricane|date=October 19, 1910|publisher=The Washington Post
  5. "Hurricane Nears the Florida Coast". The New York Times. October 15, 1910. பார்க்கப்பட்ட நாள் December 24, 2009.
  6. "Great Storm in Cuba: Severe Damage Done to the Tobacco Crop". The Observer: p. 9. October 16, 1910. 
  7. "Terrific Hurricane". The Evening Postaccessdate=December 24, 2009. October 15, 1910.
  8. {{cite news|author=|title=West Indian Hurricane|date=October 18, 1910|publisher=The Scotsman
  9. "Hurricane in Cuba Costs Many Lives". The Spokane Daily Chronicleaccessdate=December 24, 2009. October 17, 1910.
  10. {{cite news|author=|title=Cyclone in Cuba|date=October 18, 1910|publisher=The Scotsman
  11. 11.0 11.1 11.2 "Cyclone Works Havoc in Cuba". The New York Times: p. 1. October 18, 1910. http://query.nytimes.com/mem/archive-free/pdf?res=9501E5D8173AE733A2575BC1A9669D946196D6CF. 
  12. "The Hurricane in Cuba". The Manchester Guardian: p. 7. October 17, 1910. 
  13. "Hurricanes Have Overwhelmed Cuba". The Galveston Daily Newsaccessdate=December 24, 2009. October 18, 1910.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. {{cite news|author=|title=West Indian Hurricane|date=October 19, 1910|publisher=The Scotsman
  15. {{cite news|author=|title=The Hurricane Moving North|date=October 20, 1910|publisher=The Manchester Guardian
  16. Longshore, p. 109
  17. "Liners Defy Cyclone". The Washington Post: p. 1. October 15, 1910. 
  18. "Cuba Hurricanes Historic Threats: Chronicle of hurricanes in Cuba". Cuba Hurricanes. Archived from the original on அக்டோபர் 23, 2016. பார்க்கப்பட்ட நாள் December 24, 2009.
  19. 19.0 19.1 19.2 "Sticks to His Ship, a Derelict at Sea". The New York Timesurl=http://query.nytimes.com/mem/archive-free/pdf?res=9903E6DF1339E433A25756C2A9669D946196D6CF. October 25, 1910. {{cite web}}: |access-date= requires |url= (help); Missing or empty |url= (help)
  20. 20.0 20.1 20.2 "Skipper, Who Stood by Ship, Picked Up". The New York Timesaccessdate=February 2, 2010. October 27, 1910.
  21. 21.0 21.1 21.2 Barnes, p. 94
  22. "West Indian Storm and Cold Wave May Meet". The Galveston Daily Newsurl=http://thehurricanearchive.com/Viewer.aspx?img=42765820_clean&firstvisit=true&src=search&currentResult=1&currentPage=10. October 19, 1910. {{cite web}}: |access-date= requires |url= (help); Missing or empty |url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1910_கியூப_புயல்&oldid=3906348" இலிருந்து மீள்விக்கப்பட்டது