ஹோர்முஸ் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹோர்முஸ் தீவு
ஹோர்முஸ் தீவின் செயற்கைக் கோள் படம்
ஹோர்முஸ் தீவின் செயற்கைக் கோள் படம்
ஹோர்முஸ் தீவு is located in ஈரான்
ஹோர்முஸ் தீவு
ஈரான் நாட்டின் ஹோர்மொஸ்கான் மாகாணத்தில் உள்ள ஓர்முசு நீரிணையில் ஹோர்முஸ் தீவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°04′N 56°28′E / 27.067°N 56.467°E / 27.067; 56.467ஆள்கூறுகள்: 27°04′N 56°28′E / 27.067°N 56.467°E / 27.067; 56.467
நாடு ஈரான்
மாகாணம்ஹோர்மொஸ்கான்
பரப்பளவு
 • நிலம்42 km2 (16.2 sq mi)
ஏற்றம்186 m (610 ft)
நேர வலயம்ஈரானிய சீர் நேரம் (ஒசநே+3:30)
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவிற்கு நடுவில் அமைந்த ஓர்முசு நீரிணையில் ஹோமுஸ் தீவின் அமைவிடம்
ஹோர்முஸ் அருங்காட்சியகம்

ஹோர்முஸ் தீவு ( Hormuz Island) ஈரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள ஹோர்மொஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த தீவு ஆகும். இத்தீவு பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவிற்கு நடுவில் அமைந்த ஓர்முசு நீரிணையில் ஹோமுஸ் தீவு உள்ளது. இத்தீவு ஈரான் நாட்டின் கடற்கரையிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பல வண்ண மணற்பரப்புகள் கொண்டதால் இத்தீவை வானவில் தீவு என்றும் அழைப்பர். இத்தீவு அழகான செம்மண் கடற்கரை கொண்டுள்ளது.[1]இத்தீவில் அழகிய அருங்காட்சியகம் உள்ளது.[2]Hormuz [3]

புவியியல்[தொகு]

ஹோர்முஸ் தீவு 42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இத்தீவின் மேற்பரப்பு வண்டல் பாறைகளும், எரிமலையால் உமிழப்பட்ட கனிமங்களும் கொண்டது. இத்தீவின் உயரமான பகுதி, கடல் மட்டத்திலிருந்து 186 மீட்டர் உயரத்தில் உள்ளது. மழை வளம் இல்லாததால், இத்தீவின் மணல் மற்றும் நீர் மிகவும் உப்புத் தன்மை கொண்டுள்ளது. எனவே இத்தீவின் கடற்கரைகளில் அலையாத்தித் தாவரங்கள் வளர்க்கப்படுகிறது. இத்தீவின் கடற்கரை செம்மண் மற்றும் வெள்ளி நிற மணல், வண்ணப்ப பாறைகள் கொண்டது. இத்தீவின் தென்மேற்கில் வானவில் பள்ளத்தாக்கு உள்ளது. இத்தீவில் உள்ள ஜெலக் மலையின் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. காரணம் தீவின் எரிமலை பாறைகளிலிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படும் இரும்பு ஆக்சைடான ஹெமாடைட் காரணம் ஆகும். இத்தீவில் கிடைக்கும் காவி நிற செம்மண் சாயமிடுதல், மட்பாண்டங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் ஓவியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hormuz Island
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோர்முஸ்_தீவு&oldid=3372777" இருந்து மீள்விக்கப்பட்டது