ஹேல்-பொப் வால்வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
C/1995 O1
ஹேல்-பொப்
Hale-Bopp
Comet Hale-Bopp, shortly after passing perihelion in April 1997.
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): அலன் ஹேல்
தாமசு பாப்
கண்டுபிடித்த நாள்: சூலை 23 1995
வேறு குறியீடுகள்: 1997 இல் பெரும் வால்வெள்ளி,
C/1995 O1
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: 2450460.5
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: 371 AU
ஞாயிற்றண்மைத் தூரம்: 0.91 AU
அரைப்பேரச்சு: 186 AU
மையப்பிறழ்ச்சி: 0.995086
சுற்றுக்காலம்: 2537 a
சாய்வு: 89.4°
கடைசி அண்மைப்புள்ளி: ஏப்ரல் 1, 1997
அடுத்த அண்மைப்புள்ளி: 4380

ஹேல்-பொப் வால்வெள்ளி, அல்லது ஏல்-பாப் வால்வெள்ளி (Comet Hale-Bopp; C/1995 O1) என்பது 20ம் நூற்றாண்டில் பரவலாக பல ஆண்டுகளாக வானில் பார்க்கப்பட்ட ஒரு வெளிச்சமான வால்வெள்ளி ஆகும். இது கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு வானில் வெற்றுக் கண்களுக்குத் தெரிந்தது. இதற்கு முன்னர் 1811 இல் தெரிந்த வால்வெள்ளி 260 நாட்களே வெற்றுக் கண்களுக்குத் தெரிந்தது.

ஹேல்-பொப் 1995 சூலை 23 இல் சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டபோது சூரியனுக்குக் அருகாக வரும்போது இது மிகவும் வெளிச்சமாகத் தெரியலாம் என அன்றே எதிர்பார்க்கப்பட்டது. இது சுற்றுப்பாதை வீச்சை 1997 ஏப்ரல் 1 இல் கடந்தது. இது 1997 இன் மிகப்பெரும் வால்வெள்ளி எனப் பெயர் பெற்றது.

இவ்வால்வெள்ளி கண்ணில் இருந்து மறைந்தாலும், தற்போதும் இது வானியலாளர்களால் அவதானிக்கப்படுகிறது. சனவரி 2005 இல் பெறப்பட்ட தரவுகளின் படி சூரியனில் இருந்து யுரேனசைவிட அதிகளவு தூரத்தில் பூமியில் இருந்து 21 AU தொலைவில் ஏல்-பாப்பு (ஹேல்-பொப்) சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு தற்போதும் அவதானிக்க முடிகிறது. பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு 2020ம் ஆண்டு வரையில் இதனை அவதானிக்க முடியும் என்றும் 4377 ஆம் ஆண்டில் இது மீண்டும் திரும்பும் என வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேல்-பொப்_வால்வெள்ளி&oldid=1853301" இருந்து மீள்விக்கப்பட்டது