ஹேமந்த் எம். ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமந்த் எம். ராவ்
பிறப்பு4 செப்டம்பர் 1983 (1983-09-04) (அகவை 40)[1]
பெங்களூர், கருநாடகம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்

ஹேமந்த் எம். ராவ் (Hemanth M. Rao) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். குறிப்பாக இவர் கன்னடத் திரைப்படத்துறையில் பணி புரிகிறார். தான் இயக்குனராக அறிமுகமானகோதி பண்ணா சாதாரண மைகட்டு (2016) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் புகழ் பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை[தொகு]

ஊடகங்களில் சிலகாலம் பணியாற்றிய பிறகு, ராவ் 2005 ஆம் ஆண்டில் திரைப்படத் துறையில் நுழைந்தார்.[3] 2008 ஆம் ஆண்டு வெளியான குலாபி டாக்கீஸ் படத்தில் கிரிஷ் காசரவள்ளியின் உதவி இயக்குனராக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் ஜேக்கப் வர்கீசுடன் சவாரி மற்றும் பிருத்வி ஆகிய படங்களிலும் பணியாற்றினார்.[4]

இவர் 2016 ஆம் ஆண்டில் கோதி பண்ணா சாதாரண மைகட்டு என்ற கன்னடத் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இது ஆல்சைமர் நோயால் காணாமல் போன தனது தந்தையைத் தேடும் ஒரு மனிதனைப் பற்றியது. இவர் இணைந்து திரைக்கதை எழுதிய இந்தப் படத்தில்இரக்சித் ஷெட்டி மற்றும் அனந்த் நாக் ஆகியோர் தந்தை மற்ரும் மகன் வேடங்களில் வேடங்களில் நடித்திருந்தனர். புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் வெளியான பிறகு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.

புனீத் ராச்குமாரின் பி. ஆர். கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் 2019இல் கவலுதாரி என்ற படத்தை இயக்கினார்.[5] இந்தப் படம் 12வது பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழாவில் "கன்னடத் திரைப்படப் போட்டியில்" சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது.[6]

2021 ஆம் ஆண்டில் வெளியான மாஸ்ட்ரோ என்ற திகில் திரைப்படத்தை இயக்கினார். பின்னர், சப்தா சாகரதாச்சே எல்லோ, என்ற காதல் நாடகத் திரைப்படத்தை இயக்கினார். இது சைட் ஏ மற்றும் சைட் பி என இரு பகுதிகளாக வெளியிடப்பட்டது. சைட் ஏ 1 செப்டம்பர் 2023 அன்று வெளியிடப்பட்ட படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. சைட் பி 17 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Read about Rakshit Shetty's books of dreams". The Times of India. 27 January 2015. பார்க்கப்பட்ட நாள் 4 February 2015.
  2. Yerasala, Kyatha (8 June 2016). "Hemanth Rao and the masters of film verse". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
  3. Yerasala, Kyatha (8 June 2016). "Hemanth Rao and the masters of film verse". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
  4. Waseem, Mohammed (24 January 2017). "It's easy to direct intelligent actors". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
  5. "Rishi as police officer in thrilling Kavalu Daari". The New Indian Express.
  6. "Awards :: Bengaluru International Film Festival - BIFFES". biffes.in.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமந்த்_எம்._ராவ்&oldid=3933556" இலிருந்து மீள்விக்கப்பட்டது