கோதி பண்ணா சாதாரண மைகட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதி பண்ணா சாதாரண மைகட்டு
இயக்கம்ஹேம்ந்த் எம். ராவ்
தயாரிப்புபுஷ்கரா மல்லிகார்ஜுனைய்யா
கதைஹேம்ந்த் எம். ராவ்
இசைசந்திரன் ராஜ்
நடிப்புஅனந்த் நாக்
ரக்சித் செட்டி
வசந்த் என். சிம்ஹா
சுருதி ஹரிஹரன்
ஒளிப்பதிவுநந்தகிசோர் நீலகண்ட ராவ்
படத்தொகுப்புசிறீகாந்த் சொரூஃப்
கலையகம்புஷ்கர் பிலிம்ஸ்
லோட்ஸ் அண்ட் ஃபவுண்ட் பிலம்ஸ்
வெளியீடு3 சூன் 2016 (2016-06-03)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஆக்கச்செலவு1.2 கோடி[1]
மொத்த வருவாய் 12 - 15 கோடி[2]

கோதி பண்ணா சாதரண மைக்கட்டு (Godhi Banna Sadharana Mykattu, பொருள்: கோதுமை நிறம் சாதாரண உடல்கட்டு ) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான இந்திய கன்னட நாடகத் திரைப்படமாகும் , அறிமுக இயக்குநர் ஹேமந்த் ராவ் எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தை புஷ்கர் ஃபிலிம்சின் பதாகையின் கீழ் புஷ்கர் மல்லிகார்ச்சுனா தயாரித்துள்ளார். இப்படத்தில் அனந்த் நாக், ரக்சித் செட்டி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, அச்யுத் குமார், சுருதி ஹரிஹரன், வைஷ்டா என். சிம்ஹா, இரவிகிரண் ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர். [3] இப்படம் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. [2]

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசையை சரண் ராஜ் அமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை முறையே நந்தா கிஷோர் மற்றும் ஸ்ரீகாந்த் ஷெராஃப் ஆகியோரால் கையாளப்பட்டது. இந்த படம் 2016 சூன் 3, அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, வணிக ரீதியான வெற்றியை ஈட்டியது. இந்தப் படம் 2018 இல் தமிழில் 60 வயது மாநிறம் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

கதைத் சுருக்கம்[தொகு]

ஆல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட வெங்கோப ராவ் (அனந்த் நாக்) மனைவியை இழந்தவர். பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் அக்கறைக் காட்டும் அவரது மகன் சிவாவால் முதியோர் இல்லலத்தில் விடப்படுகிறார். வெளிநாடுக்கு செல்ல திட்டமிடும் சிவா அதற்கு முன் தன் தந்தைக்கு வேண்டிய பொருட்களை வாங்கித்தர கடைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அவர் காணாமல் போகிறார். அவரது மகன் சிவா அவரைக் காணாமல் வருத்தமடைந்து அவரைத் தேடுகிறான். தந்தையை தேடும் பயணத்தில் வாழ்வின் பல உண்மைகளைப் சிவா புரிந்து கொள்கிறான்.

நடிப்பு[தொகு]

 • அனந்த் நாக் வெங்கப் ராவ்வாக
 • ரட்சித் செட்டி சிவா வி. ராவாக
 • அச்சுத் குமார் குராமாராக
 • சுருதி ஹரிஹரன் மருத்துவர் சகானாவாக
 • வசிஷ்ட என். சிம்ஹா ரங்காவாக
 • ரவிக்கிரண் ராஜேந்திரன் மஞ்சாவாக
 • சஞ்சாரி விஜய் சிறப்புத் தோற்றத்தில்
 • பரமேஸ்வர் ( கலமத்யமா ) காவல் ஆய்வாளராக
 • பத்ரே நாகராஜ்
 • தேவேந்திரா
 • கார்த்திகேயா

தயாரிப்பு[தொகு]

2014 ல் படத்தை உருவாக்குவதாக அறிவித்த ஹேமந்த் ராவ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2015 சனவரி 11 அன்று படப்பிடிப்புத் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பானது பெங்களூருவில் நடந்தது. அதில் முக்கிய நடிகர்களான அனந்த் நாக் மற்றும் ரட்சித் செட்டி சுருதி ஹரிஹரன், அச்யுத் குமார் வசிஷ்ட என். சிம்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர். அடுத்த கட்டப் படப்பிடிப்பு சனவரி 19 அன்று தொடங்கி நடந்தது. [3] படம் 2016 சூன் 3, அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.

மறு ஆக்கம்[தொகு]

தமிழ், தெலுங்கு, [4] இந்தியில் மறுஆக்கம் செய்யும் உரிமையை பிரகாஷ் ராஜ் வாங்கினார். [5] இந்த படம் தமிழில் 60 வயது மாநிறம் (2018) என பிரகாஷ் ராஜால் மறுஆக்கம் செய்யப்பட்டது. [6]

விருதுகள்[தொகு]

விருது விழா நாள் வகை பெறுபவர் முடிவு Ref(s)
17 சூன் 2017
சிறந்த படம்
புஷ்கர் பிலிம்ஸ்
லாஸ்ட் அண்ட் ஃவுண்ட் பிலிம்ஸ்
பரிந்துரை [7]
சிறந்த இயக்கம்
ஹேமந்த் ராவ்
பரிந்துரை
சிறந்த நடிகர்
வெற்றி
சிறந்த நடிகை
பரிந்துரை
சிறந்த துணை நடிகர்
வசிஷ்டா என். சிம்ஹா
வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்
சந்திரன் ராஜ்
பரிந்துரை
சிறந்த நடிகை(critics)
வெற்றி
ஐஐஎப்ஏ உத்சவம்
28—29 மார்ச் 2017
சிறந்த படம்
புஷ்கர் மல்லிகார்ஜுனைய்யா
பரிந்துரை [8]</br> [9]
சிறந்த இயக்கம்
ஹேமந்த் ராவ்
பரிந்துரை
சிறந்த நடிகர்
அனந்த் நாக்
பரிந்துரை
சிறந்த துணை நடிகர்
ரக்சித் செட்டி
வெற்றி
சிறந்த அறிமுக நடிகர்
அச்யுத் குமார்
பரிந்துரை
சிறந்த வில்லன் நடிகர்
வசிஷ்டா என். சிம்ஹா
வெற்றி
சிறந்த பாடல் எழுத்தாளர்
சுதர்சன் டி. சி. ("Ale Mood Adhe")
பரிந்துரை
சிறந்த பின்னணி பாடகி
இஞ்சரா ராவ் for ("Ayomaya")
வெற்றி
சிறந்த கதை
ஹேமந்த் ராவ்
பரிந்துரை
சூன் 30 - சூலை 1, 2017]]
சிறந்த படம்
புஷ்கர் பிலிம்ஸ்
பரிந்துரை [10]</br> [11]</br> [12]
சிறந்த நடிகை
பரிந்துரை
சிறந்த வில்லன் நடிகர்
வசிஷ்ட்டா சிம்ஹா
வெற்றி
சிறந்த அறிமுக இயக்குநர்
ஹேமந்த் ராவ்
வெற்றி
சிறந்த இசையமைப்பாளர்
சந்திரா ராஜ்
பரிந்துரை
சிறந்த பாடல் எழுத்தாளர்
சுதர்சன் டி. சி. ("Ale Mood Adhe")
பரிந்துரை
சிறந்த பின்னணி பாடகர்
இன்சரா வாவ் ("Ayomaya")
பரிந்துரை

குறிப்புகள்[தொகு]

 1. "Actor-director Rakshit Shetty feels the challenge ahead is to keep the audience occupied". The Economic Times. 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 5 March 2017.
 2. 2.0 2.1 "Sandalwood 2016: Highest-grossing Kannada movies of 2016 at the box office". www.ibtimes.co.in.
 3. 3.0 3.1 Sharadhaa A. (11 January 2015). "Hemanth to Start Rolling Dream Project". பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
 4. "Godhi Banna Sadharna Mykattu to be made in Tamil and Telugu - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016.
 5. "Amitabh Bachchan & Prakash Raj To Come Together For GBSM Remake?". filmibeat.com. 15 July 2016. பார்க்கப்பட்ட நாள் 16 December 2016.
 6. https://silverscreen.in/tamil/news/radha-mohan-prakash-raj-ilaiyaraaja-arubadhu-vayadhu-maaniram/
 7. Winners: 64th Jio Filmfare Awards 2017 (South)
 8. "IIFA Utsavam 2017 (2016) Kannada Full Show, Nominees & Winners". Updatebro.com. Archived from the original on 28 March 2017. பார்க்கப்பட்ட நாள் 31 March 2017.
 9. IANS (30 March 2017). "'Janatha Garage', 'Kirik Party' bag top honours at IIFA Utsavam 2017" – via Business Standard.
 10. "SIIMA Nominations: Theri, Janatha Garage, Maheshinte Prathikaram and Kirik Party lead". Indian Express. 31 May 2017. பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
 11. "SIIMA 2017 Day 1: Jr NTR bags Best Actor, Kirik Party wins Best Film". India Today. 1 July 2017. பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
 12. "Nominations list for the SIIMA 2017 announced!". Sify.com. Archived from the original on 2017-06-05.

வெளி இணைப்புகள்[தொகு]