ஹூக்லி மகளிர் கல்லூரி

ஆள்கூறுகள்: 22°54′01″N 88°23′50″E / 22.9004°N 88.3972°E / 22.9004; 88.3972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹூக்லி மகளிர் கல்லூரி
படிமம்:Hooghly women's college.jpg
மகளிர் கல்லூரியின் கட்டடம்
வகைபொதுக்கல்லூரி
உருவாக்கம்1949; 75 ஆண்டுகளுக்கு முன்னர் (1949)
முதல்வர்முனைவர் சுமிதா பாஜ்பாய்
அமைவிடம்
1, விவேகானந்த சாலை, பிபுல்பதி
, , ,
712103
,
வளாகம்நகர்ப்புறம்
அங்கீகாரம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, பல்கலைக்கழக மானியக் குழு
சேர்ப்புபர்த்வான் பல்கலைக்கழகம்
இணையதளம்ஹூக்லி மகளிர் கல்லூரி
ஹூக்லி மகளிர் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
ஹூக்லி மகளிர் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
ஹூக்லி மகளிர் கல்லூரி is located in இந்தியா
ஹூக்லி மகளிர் கல்லூரி
ஹூக்லி மகளிர் கல்லூரி (இந்தியா)

ஹூக்லி மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். கலை, வணிகம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [1]. ஹூக்லி மகளிர் கல்லூரி அம்மாவட்டத்தின் ஆறாவது கல்வி நிறுவனமும் மாவட்டத்தின் முதல் மகளிர் கல்லூரியுமாகும், பர்த்வான் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மகளிர் கல்லூரியுமாகும்.

இக்கல்லூரி 1962 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது, பின்னரே கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்காக 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

புகழ்பெற்ற வழக்கறிஞரும் கல்வியாளருமான ஸ்ரீ நிருபேந்திரநாத் தார் அவர்களின் முயற்சியில் இன்னும் கல்விச்சேவையில் ஆர்வமுள்ள சிலரும் இணைந்து 1943 ஆம் ஆண்டில் கங்கை நதிக்கரையில் உள்ள சின்சுரா மைதானத்தில் 17 மாணவர்களுடன் மிஷன் ஹவுஸ் என்ற சிறிய கான்கிரீட் கட்டமைப்பில் ஹூக்ளி மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் சரியான நேரத்தில் வராததால் அது தன் சேவையை நிறுத்தியது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1948இல், மேற்கு வங்க அரசு பெண்களின் கல்வியைப் பரப்புவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஸ்காட்லாந்து தேவாலயத்தின் ஒரு பிரிவான பெங்கால் மிஷனின் முயற்சியின் கீழ், முதல் ஆண்டு வகுப்புகள் 1949 ஆகஸ்ட் 1 அன்று தொடங்கின, அதே "மிஷன் ஹவுஸ்" என்ற பெயரில் ஒரு சிறிய கட்டிடத்தில் 41 மாணவர்கள் மற்றும் நான்கு ஆசிரியர்களுடன் மறுபடியும் தொடங்கியது. 1952 பிப்ரவரியில், அப்போதைய முதலமைச்சர் பிதன் சந்திர ராய் இக்கல்லூரிக்கு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். ஹூக்ளி மகளிர் கல்லூரியின் முதல் தலைமையாசிரியர் சிறீ காளிபதா மித்ரா ஆவார்.


1958 ஆம் ஆண்டில் மாணவிகளுக்கான விடுதிக் கட்டிடம் கட்டப்பட்டது. 1964 ஆம் ஆண்டில், கல்லூரி நூலகம் அதன் முறையான வடிவத்தையும் கட்டமைப்பையும் மாநில அரசின் உதவியுடன் பெற்றது.

துறைகள்[தொகு]

அறிவியல் பிரிவு[தொகு]

கலைப் பிரிவு[தொகு]

நிறுவனத்தின் முதல்வர்கள்[தொகு]

  • சிறீ காளிபதா மித்ரா
  • திருமதி. சாந்திசூதா கோஷ், முதல்வர் (1951-1970)
  • திருமதி. சந்தியாசாஷி முகர்ஜி (1970-1980)
  • திருமதி. அனிதா தே (1980-2000)
  • டாக்டர் சுமிதா பாஜ்பாய் (2000 முதல்)

அங்கீகாரம்[தொகு]

இந்த ஹூக்லி மகளிர் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) பி + + தரத்தை வழங்கி அங்கீகரித்துள்ளது. [2]மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of University of Burdwan".
  2. Colleges in WestBengal, University Grants Commission பரணிடப்பட்டது 2011-11-16 at the வந்தவழி இயந்திரம்
  3. "Institutions Accredited / Re-accredited by NAAC with validity" (PDF). Archived from the original (PDF) on 12 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூக்லி_மகளிர்_கல்லூரி&oldid=3883817" இலிருந்து மீள்விக்கப்பட்டது