ஈரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹீரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈரா
Hera Campana Louvre Ma2283.jpg
இடம் ஒலிம்பிய மலைச்சிகரம்
துணை சீயசு
பெற்றோர்கள் குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரி பொசிடான், ஏட்சு, டிமிடிர், எசுடியா மற்றும் சீயசு
குழந்தைகள் ஏரிசு, என்யோ, எபே, எய்லெய்தையா, எஃபீசுடசு மற்றும் எரிசு

ஈரா (Hera, கிரேக்கம் Ἥρᾱஎன்பவர் கிரேக்க புராணக் கதைகளின்படி சீயசின் மனைவியும் அவரது சகோதரியும் ஆவார். இவர் பெண்கள் மற்றும் திருமணம் ஆகியவற்றின் கடவுளாக இருக்கிறார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஈராவிற்கு புனிதமானவையாக கருதப்படுகிறது. இவரது பெற்றோர் குரோனசு மற்றும் ரியா. தன் கணவர் சீயசின் பல காதலிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் மேல் பொறாமை குணம் கொண்டவராக ஈரா அறியப்படுகிறார்.

அக்ரிகென்டோவில் உள்ள மாக்னா க்ரேசியாவில் இருக்கும் ஈராவின் கோவில்

எராகல்சு[தொகு]

எராகல்சு என்பவர் சீயசு மற்றும் அல்கிமியின் மகன் ஆவார். எராகில்சு பிறப்பதை தடுக்க அல்கிமியின் கால்களை முடிச்சுகளாக மாற்றுமாறு குழந்தை பிறப்பு கடவுள் எய்லெய்தியாவை பணித்தார். ஆனால் அவரை காலன்திசு தடுத்ததால் குழந்தை பிறந்துவிடுகிறது. இதனால் ஈரா காலந்தீசை மர நாய் வகையைச் சேர்ந்த வீசெல்லாக மாறும்படி சாபமிட்டார்.

எராகில்சு குழந்தையாக இருந்தபோது அவரை அழிக்க ஈரா இரண்டு பாம்புகளை அனுப்பினார். ஆனால் எராகில்சு அவற்றைப் பிடித்து விளையாடினார். மேலும் அவைகளை தலையை நசுக்கிக் கொன்றார்.

சீயசு ஈராவை ஏமாற்றி எராகில்சுக்கு தாய்ப்பால் புகட்ட வைத்தார். பிறகு உண்மை அறிந்த ஈரா ஈராகில்சை தன் மார்பில் இருந்து தள்ளி விட்டார். பிறகு ஈராவின் மார்பில் இருந்து சிந்திய பால் வானத்தில் படர்ந்தது. அதுவே இன்றைய பால்வீதி மண்டலம் ஆகும்.

சில புராணங்களில் எராகில்சு ஈராவை கற்பழிக்க முயன்ற போஃபிரியன் என்ற அரக்கனிடம் இருந்து அவரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு பரிசாக ஈரா தன் மகள் ஏபேயை மணமகளாக எராகில்சுக்கு கொடுத்தார்.

ஈரா அனுப்பிய பாம்புகளுடன் விளையாடும் எராகில்சு

எக்கோ[தொகு]

கவிஞர் ஓவிட் எழுதிய மெடாமோர்போசசில் வரும் ஒரு கதையில் எக்கோ என்பவர் சீயசிடமிருந்து ஈராவை பிரிக்கும் வேலையை செய்து வந்தார். இதனை அறிந்தவுடன் ஈரா இனி மற்றவர்களின் வார்த்தைகளை எக்கோ எதிரொலிக்குமாறு சாபமிட்டார். இதன் மூலம் தான் எதிரொலி என்பதற்கு ஆங்கில சொல்லான எகோ என்பது வந்தது.

லெடோ, அப்போலோ மற்றும் ஆர்டமீசு[தொகு]

லெடோவின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று ஈரா அறிந்தவுடன், லெடோவிற்கு நிலத்திலோ அல்லது தீவிலோ பிரசவம் நடக்காது என சாபமிட்டார். பிறகு லெடோவின் மேல் கருணை கொண்ட கடவுள் பொசிடான், அவளுக்கு நிலமோ தீவோ அல்லாத மிதக்கும் தீவான டிலோசுக்கு வழிகாட்டினார். அங்கு லெடோவிற்கு இரட்டை குழந்தைகளான அப்போலோ மற்றும் ஆர்டமீசு பிறந்தனர். பிறகு அந்த தீவு அப்போலோவிற்கு புனித இடமானது.

வேறு ஒரு கதையில் ஈரா லெடோவின் பிரசவத்தை தடுக்க குழந்தை பிறப்பு கடவுளான எய்லெய்தியாவை கடத்தியதாக கூறப்படுகிறது. பிறகு டிலோசு தீவில் லெடோவிற்கு முதலில் ஆர்டமீசு பிறந்தார். பிறகு அவரே குழந்தை பிறப்பு கடவுளாக மாறி அப்போலோ பிறக்க உதவியதாகக் கூறப்படுகிறது.

செமிலி மற்றும் டயோனைசசு[தொகு]

செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். அவர் கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உருவத்தை கா்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு. அந்த குழந்தையே டயோனசைசு. பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.

மற்றொரு கதையில் டயோனைசசு என்பவர் சீயசு மற்றும் டிமடர் அல்லது பெர்சிஃபோனின் மகனாக கருதப்படுகிறார். ஈரா டைட்டன்களை அனுப்பி சாக்ரியுசு என்ற குழந்தையை துண்டு துண்டாக நறுக்கி வீசினார். அவனது இதயத்தை சீயசு காப்பாற்றினார். பிறகு இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் அந்த இதயத்தை பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகக் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரா&oldid=2180426" இருந்து மீள்விக்கப்பட்டது