ஹியுன் பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹியுன் பின்
Hyun Bin
Actor Hyun Bin arrives at the red carpet event of the Pifan in Bucheon on July 17, 2014.jpg
பிறப்புகிம் டே-ப்யுங்
செப்டம்பர் 25, 1982 (1982-09-25) (அகவை 37)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2003–இன்று வரை

ஹியுன் பின் (ஆங்கில மொழி: Hyun Bin) (பிறப்பு: செப்டம்பர் 25, 1982) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு முதல் சீக்ரட் கார்டன் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

நடிப்புத்துறை[தொகு]

2003-2009[தொகு]

ஹியுன் 2003ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'பாடிகார்ட்' என்ற தொடரில் துணைநடிகராக அறிமுகமானார்.[1] அதே ஆண்டில் ஒளிபரப்பான 'நான்ஸ்டாப் 4' என்ற நகைசுசுவை தொடரில் நடித்தார். 2004ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'அயர்லாந்து' என்ற காதல் தொடரில் இரண்டாவது நாயகனகாவும் அதே ஆண்டில் வெளியான 'ஸ்பின் கிக்' என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

இவர் முதல் முதலில் காதநாயக்கான நடித்த தொடர் 'மை லவ்லி சாம் சூன்' என்ற நகைசுசுவை காதல் தொடர் இந்த தொடர் 2005ஆம் ஆண்டு முன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 37% சாதாரண பார்வையாளர்கள் எண்ணிக்கையை பெற்றது.[2] இந்த தொடருக்காக சிறந்த சிறப்பு விருதும் பெற்றார். இந்த தொடருக்கு பிறகு 2006ஆம் ஆண்டு ஒரு மில்லியனர் முதல் காதல் என்ற திரைப்படத்திலும், அதே ஆண்டில் ஸ்னோ குயின் என்ற தொடரிலும் நடித்தார். இந்த தொடர் இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. 2008ஆம் ஆண்டு வேர்ல்ட் விந்தின், 2009ஆம் ஆண்டு பிரென்ட் அவர் லெஜண்ட் போன்ற தொடர்களில் நடித்தார்.

2010-2019[தொகு]

2010ஆம் ஆண்டில் சீக்ரட் கார்டன் என்ற கற்பனை காதல் தொடரில் நடித்தார், இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை நடித்தார். இந்த தொடர் மிகவும் வெற்றி பெற்றது. இந்த தொடர் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து கம் ரெயின், கம் ஷினே (2011), தி ஸ்வைண்டர்ஸ் (2017) போன்ற பல திரைப்படங்களிலும், ஹைட் ஜெகில் மீ மற்றும் (2015) அலம்பிராவின் நினைவுகள் என்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2003 பாடிகார்ட்
2004 நான்ஸ்டாப் 4 [3]
அயர்லாந்து [4]
2005 மை லவ்லி சாம் சூன் [5]
நான்ஸ்டாப் 5 [6]
2006 ஸ்னோ குயின்
2008 வேர்ல்ட் விந்தின்
2009 பிரென்ட் அவர் லெஜண்ட்
2010 சீக்ரட் கார்டன்
2015 ஹைட் ஜெகில் மீ
2018 மெமோரிஸ் ஆலம்பரா

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியுன்_பின்&oldid=2721516" இருந்து மீள்விக்கப்பட்டது