வெள்ளை மடவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை மடவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
முகிலிபார்ம்சு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
மு. குரேமா
இருசொற் பெயரீடு
முகில் குரேமா
வாலென்சியென்னிசு, 1836

வெள்ளை மடவை (White mullet) அல்லது வெள்ளி மடவை (முகில் குரேமா) முகிலிடே குடும்பத்தினைச் சார்ந்த வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல கடல் மீன் ஆகும். இது பொதுவாக 30 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[2]

வெள்ளி மடவை என்பது விசிறிவால் மடவைக்கும் (முகில் கைரான்சு) பயன்படுத்தப்படும் பொதுவான பெயராகும் என்பதை நினைவில் கொள்க.

பரவலும் வாழிடமும்[தொகு]

வெள்ளை மடவை என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் பசிபிக் மீன் ஆகும். இது முக்கியமாக அமெரிக்கக் கடற்கரைகளில் காணப்படுகிறது. மேற்கு அத்திலாந்திக்கில் இது அர்ஜென்டினா முதல் கேப் கோட் வரையிலும் அரிதாக நோவா ஸ்கோசியா வரையிலும் காணப்படுகிறது. கிழக்கு அட்லாண்டிக்கில் நமீபியா முதல் செனிகல் வரையிலும், கிழக்கு பசிபிக் பகுதியில் சிலி முதல் கலிபோர்னியா வளைகுடா வரையிலும் காணப்படுகிறது.[2]

வெள்ளை மடவை மணல் கரையோரங்களிலும், கரையோரக் குளங்களிலும் காணப்படுகிறது. ஆனால் உப்பு கலந்த குளங்கள் மற்றும் முகத்துவாரங்களிலும் சேற்று அடியிலும் சில சமயங்களில் ஆறுகளிலும் கூட காணப்படுகிறது. குறிப்பாக இளம் மீன்கள் முகத்துவாரங்கள் மற்றும் கடலோர தடாகங்கள் மீது படையெடுக்கின்றன. முதிர்ச்சியடைந்த மீன்கள் மாப்பு மீன்கள் மற்றும் கூட்ட மீன்களாகக் காணப்படும்.[2]

அத்திலாந்திக் அமெரிக்கா[தொகு]

அமெரிக்காவில், இவற்றின் சிறிய அளவு காரணமாக (12 அங்குலத்திற்கும் குறைவு), வெள்ளை மடவையை பிடிக்கத் தூண்டில் பயன்படுத்தப்படுகிறது. புளோரிடா மற்றும் தெற்கு அலபாமாவின் சில பகுதிகளில், இவை எப்போதாவது சாம்பல் நிற மடவை (முகில் செபாலசு) உண்ணப்படுகின்றன. முதிர்ந்த வெள்ளை மற்றும் சாம்பல் நிற மடவை கழிமுக நீரின் அடிப்பகுதியில் காணப்படும் சேற்றை உட்கொண்டு, பாசிகள், பிளாங்க்டன் மற்றும் தாவர மற்றும் விலங்குகளின் சிதைவை செரிமாணிக்கின்றன. இந்த மடவை தசைநார் அரைவைப்பையினை கொண்டிருப்பதில் தனித்துவமானது. இவை அமெரிக்காவின் வளைகுடா மற்றும் அட்லாண்டிக் கடற்கரைகளின் கரையோர மற்றும் கடலோர நீரின் சூழலியல் ஒரு முக்கிய பகுதியாகும். 

மேற்கோள்கள்[தொகு]

  1. Castro, M.G.; Vieira, J.P.; Albieri, R.J. et al. (2015). "Mugil curema". The IUCN Red List of Threatened Species 2015: e.T190168A1943129. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T190168A1943129.en. 
  2. 2.0 2.1 2.2 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2014). "Mugil curema" in FishBase. April 2014 version.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Photos of White mullet on Sealife Collection
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_மடவை&oldid=3461806" இலிருந்து மீள்விக்கப்பட்டது