வெப்பக்குடுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீடுகளில் பயன்படுத்தப்படும் வெப்பக்குடுவை
ஆராய்ச்சி நிலையங்களில் மதிப்பீட்டுக்காக உள்ள ஓர் வெப்பக்குடுவை
வெப்பக்குடுவையின் கட்டமைப்பு
Thermos வெப்பக்குடுவை
Liquid nitrogen tank.JPG

ஒரு சூடான திரவத்தை சூடாகவும் குளிரான திரவத்தை குளிராகவும் சிலமணி நேரத்திற்குப் பேணும் குடுவையே வெப்பக்குடுவை (Vacuum flask அல்லது Thermos) எனப்படும். இது வீடுகளிலும் அலுவலகங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்குடுவை 1892இல் ஜேம்ஸ் டீவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இரட்டை அடுக்குச் சுவரைடையில் வளி உறிஞ்சப்பட்டு வெற்றிடம் ஒன்று காணப்படும்.

வெப்பம் இழக்கப்படுவதைக் குறைக்க வெப்பக்குடுவையில் உள்ள உத்திகள்[தொகு]

  • வெப்பக்குடுவையில் காணப்படும் இரட்டைச் சுவர்களுக்கிடையே உள்ள இடைவெளியில் வளி உறிஞ்சப்பட்டு வெற்றிடம் ஆக்கப்படுவதால் வெப்பக்கடத்தல் மூலமும் மேற்காவுகை மூலமும் வெப்பம் வெளிச்சூழலுடன் பரிமாற்றப்படல் தவிர்க்கப்படுகின்றது.
  • இதில் காணப்படும் இறப்பர் அல்லது பிளாத்திக்கால் ஆன தாங்கி மற்றும் காவலிடப்பட்ட தக்கை என்பன வெப்பத்தை குறைவாகவே கடத்தும்.
  • கதிர்ப்பு மூலம் வெப்பம் கடத்தப்படுவதைக் குறைக்க இரட்டைச் சுவர்கள் வெள்ளிப் பூச்சால் பூசப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பக்குடுவை&oldid=1699117" இருந்து மீள்விக்கப்பட்டது