வெண்தலை சோலைபாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்தலை சோலைபாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மியூசிக்காப்பிடே
பேரினம்:
காப்சிகசு
இனம்:
கா. இசுட்ரிக்லாண்டி
இருசொற் பெயரீடு
காப்சிகசு இசுட்ரிக்லாண்டி
(மோட்லே & தில்வின், 1855)
துணையினங்கள்

கா. இசு. இசுட்ரிக்லாண்டி
கா. இசு. பார்போரி

வெண்தலை சோலைபாடி (White-crowned shama)(காப்சிகசு இசுட்ரிக்லாண்டி) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் பறவை குடும்பத்தைச் சேர்ந்த பறவை சிற்றினம் ஆகும். இது தென்கிழக்காசியத் தீவான போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]

வகைப்பாட்டியல்[தொகு]

இது வெண் பிட்ட சோலைபாடி (காப்சிகசு மலபாரிக்கசு) நெருங்கிய தொடர்புடையது. மேலும் சில சமயங்களில் இந்த சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்படுகிறது.[3] வெண் தலை சோலைபாடி இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளது:[4]

  • கா. இசு. இசுட்ரிக்லாண்டி மோட்லி & தில்வின், 1855 - பாங்கி தீவு உட்பட வடக்கு மற்றும் வடகிழக்கு போர்னியோ
  • கா. இசு. பார்போரி (பேங்க்சு & பீட்டர்சு, 1927[5]) (மராத்துவா சோலைபாடி) - மராத்துவா தீவுகள்

இச்சிற்றினப் பெயரானது பெயர் ஹக் எட்வின் ஸ்ட்ரிக்லேண்டின் நினைவாக வழங்கப்பட்டது[6]

விளக்கம்[தொகு]

வெண் தலை சோலைபாடியின் உடல் நீளம் 21 முதல் 28 செ.மீ. வரையும், உடல் எடை 31 முதல் 42 கிராம் வரை இருக்கும். உடலின் மேற்பகுதி நீலம்-கருப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி ஆரஞ்சு-செம்பழுப்பு நிறத்திலும் காணப்படும். வெண் பிட்டத்துடன் கருப்பு தொண்டையுடன் காணப்படும் சோலைபாடி. இது வெண் பிட்ட சோலைபாடியுடன் ஒத்துக் காணப்படும்.[2]

பறவை வளர்ப்பு[தொகு]

வெண் தலை சோலைபாடி போர்னியோவில் உள்ள உள்ளூர் பறவை வளர்ப்பாளர்களால் கூண்டு-பறவைகளாக வளர்க்கப்படுகின்றன. இவை பாடும் திறனுக்காக விரும்பப்படுகின்றன. கொல்லைப்படுத்தப்பட்ட இளம் பறவைகளை விட, காட்டுப் பறவைகள் வலிமையானவை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Copsychus luzoniensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22710003/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. 2.0 2.1 2.2 Phillipps' Field Guide to the Birds of Borneo. 
  3. "White-rumped Shama". Species factsheet. BirdLife International. 2013. பார்க்கப்பட்ட நாள் 15 November 2013.
  4. "IOC World Bird List (v 5.3): Chats, Old World flycatchers". IOC. 2013. பார்க்கப்பட்ட நாள் 19 October 2015.
  5. Bangs & Peters, pp.239-240 in Birds from Maratua Island, off the east coast of Borneo, Occasional papers of the Boston Society of Natural History, v5 (1927)
  6. "Three Men and a Bird". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, Vol.86, Part 1, pp.113-119 (June 2013).
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்தலை_சோலைபாடி&oldid=3819356" இலிருந்து மீள்விக்கப்பட்டது