வெண்கழுத்து நாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்கழுத்து நாரை
Woolly-necked Stork (Ciconia episcopus) Photograph By Shantanu Kuveskar.jpg
Mangaon, Raigad, Maharashtra இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சிகோனீபார்மஸ்
குடும்பம்: சிகோனீடே
பேரினம்: Ciconia
இனம்: C. episcopus
இருசொற் பெயரீடு
Ciconia episcopus
(Boddaert, 1783)

வெண்கழுத்து நாரை (White-necked Stork) இப்பறவை நாரை வகையைச் சார்ந்த உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படும் பறவை ஆகும். இப்பறவை நாரை வகைகளில் பெரிய தோற்றத்தைக்கொண்டு 88 செமீ உயரம் வரை வளருகிறது. இவை பல ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. நீண்ட கால் பகுதியும், உருதியான நீண்ட அலகும் கொண்டு, உடல் முழுவதிலும் கருமை நிறமாகவும், கழுத்திற்கு கீழ் பகுதியில் கரும் பச்சை நிறம் கொண்டும் காணப்படுகிறது. ஆனால் தலைக்கு கீழே அமைந்துள்ள கழுத்துப் பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. ஆசியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, இந்தோனேசியா, போன்ற இடங்களிலும், ஆப்பிரிக்காவிலும் காணப்படுகிறது. ஆனாலும் இப்பறவை இந்தியாவின் தென் பகுதி மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த பறவையாகும். இப்பறவையின் கூடுகள் நீர் நிலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடங்கள் ஆகும்.

நடத்தை[தொகு]

வெண்கழுத்து நாரையான இவைகள் மற்ற நாரைகளைப் போல் பறக்கும் போது தன் கழுத்தை நீட்டிக் கொண்டு விமானம் போல் பரக்கிறது. தன் சிறகுகளைக் கொண்டு சூடான காற்றைத் தனக்கு சாதமாக்கி ஈர்த்துக் கொண்டு நீண்ட தூரம் பறந்து செல்கிறது. இரண்டு முதல் ஐந்து முட்டைகளை இடுகிறது.

உணவு[தொகு]

இவை மெதுவாக தரையில் நடக்கும் தன்மை கொண்டது. இவை நீர்நில வாழ்வன, ஊர்வன, பூச்சி போன்றவற்றை உட்கொண்டு வாழ்கிறது.

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ciconia episcopus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ciconia episcopus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கழுத்து_நாரை&oldid=3477244" இருந்து மீள்விக்கப்பட்டது