வெட்டர் அத்திப்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெட்டர் அத்திப்பறவை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இசுபெக்கோதெரசு
இனம்:
இ. கைப்போலூகசு
இருசொற் பெயரீடு
இசுபெக்கோதெரசு கைப்போலூகசு
ஒட்டோ பிஞ்ச், 1898
வேறு பெயர்கள்
  • இசுபெக்கோதெரா விரிடிசு கைப்போலூகசு

வெட்டர் அத்திப்பறவை (Wetar figbird)(இசுபெக்கோதெரசு கைப்போலூகசு) என்பது ஓரியோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் வெட்டார் தீவில் உள்ள காடு, வனப்பகுதி மற்றும் புதர்க்காடுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. வெட்டர் அத்திப்பறவை குறித்த தகவல்கள் அதிகம் அறியப்படவில்லை. மேலும் இது வசிப்பிட இழப்பால் அச்சுறுத்தப்பட்டாலும், சமீபத்திய இதனுடைய எண்ணிக்கை குறித்த மதிப்பீடுகள் முதலில் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக இப்போது பன்னாட்டு பறவை வாழ்க்கை மற்றும் பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதனை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. வெட்டார் அத்திப்பறவை நன்கு அறியப்பட்ட ஆத்திரேலிய அத்திப்பறவையை ஒத்திருக்கிறது. ஆனால் இது மிகவும் சிறியது மற்றும் ஆணின் அடிப்பகுதி முழுவதுமாக வெண்மையானது. முன்பு, இது பச்சை அத்திப்பறவையின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இவை இரண்டு தனித்தனி சிற்றினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Sphecotheres hypoleucus". IUCN Red List of Threatened Species 2018: e.T22706452A130419105. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706452A130419105.en. https://www.iucnredlist.org/species/22706452/130419105. பார்த்த நாள்: 17 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்டர்_அத்திப்பறவை&oldid=3831875" இலிருந்து மீள்விக்கப்பட்டது